இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: விளையாட்டு கிரிக்கெட் யுவராஜ்சிங் நலம் பெற அரசு உதவி

யுவராஜ்சிங் நலம் பெற அரசு உதவி

இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் புற்று நோயைக் குணப்படுத்துவதற்காக அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவருக்கு கீமோதெரபி சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.

யுவராஜ் சிங்கிற்கு வேண்டிய உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மாக்கன் தெரிவித்துள்ளார். மேலும் சிகிச்சை முடிந்துவிரைவில் குணமடைந்து இந்தியா திரும்ப வேண்டும் என்று யுவராஜ் சிங்கிற்கு அமைச்சர் வாழ்த்துக் கூறியுள்ளார்.

கடந்த உலகக்கோப்பையில் தனது பன்முகத் திறமையால் இந்தியா கோப்பையை வென்று வாகைசூட உதவியாக இருந்தவர் யுவராஜ்சிங் என்பது குறிக்கத்தக்கது.

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: