இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: விளையாட்டு கிரிக்கெட் யுவராஜ் சிங்கிற்கு புற்றுநோய்

யுவராஜ் சிங்கிற்கு புற்றுநோய்

இந்தியக் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு புற்று நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் புற்று நோயைக் குணப்படுத்துவதற்காக அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவருக்கு கீமோதெரபி சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.

நுரையீரலில் கட்டி இருந்தால் கடந்த மாதம் அமெரிக்கா சென்ற யுவராஜ் சிங் அங்கு சிகிச்சை பெற்று வந்தார். அந்தக் கட்டியை பரிசோதனைக்கு அனுப்பியதில் யுவராஜ் சிங்கிற்கு புற்றுநோய்  என கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் ஜதின் சௌத்ரி, ” யுவராஜ் சிங்கின் விரைவில் பூரண குணமடைந்து விடுவார் என்றும் மே மாதம் அவர் கிரிக்கெட் விளையாட வருவார்” என்றும் தெரிவித்துள்ளார்.

” முதல் நிலையிலேயே கண்டறியப்பட்டுள்ளதால் 100 சதவிகிதம் இதனை குணப்படுத்தி விடலாம்” என்று தெரிவித்த மருத்துவர் மார்ச் மாதத்தில் அவர் குணமடைந்து விடுவார் எனத் தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் ஓய்வில் இருந்த பிறகு மே மாதத்தில் அவர் வழக்கம்போல் கிரிக்கெட் விளையாடுவார் என நம்பிக்கைத் தெரிவித்தார். இந்திய மருத்துவமனையின் தவறான சிகிச்சையினால் அவருக்கு புற்றுநோய் என்பதைக் கண்டறிய சற்று தாமதம் ஏற்பட்டதாகவும் ஜதின் சௌத்ரி தெரிவித்தார்.

கடந்த வருடம் இந்தியா உலகக்கோப்பையை வென்றதில் மிகப்பெரிய பங்கினை யுவராஜ் சிங் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த உலகக்கோப்பையில் நான்கு போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதினை வென்ற யுவராஜ், 362 ஓட்டங்கள் குவித்ததோடு 15 விக்கெட்களையும் வீழ்த்தினார்.

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: