இந்திய கிரிக்கெட் அணியின் பிரதான பந்துவீச்சாளர் ஜாஹிர்கான். மராட்டிய மாநிலம் பரோடாவைச் சேர்ந்த இவர் இதுவரை 82 டெஸ்ட் மற்றும் 191 ஒருநாள் போட்டியில் விளையாடி டெஸ்டில் 285 விக்கெட்டும், ஒருநாள் போட்டியில் 273 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.
கிஸ்னா எனும் ஹிந்திப்படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்த நடிகை நடன நடிகை இஷா ஷெர்வானி தமிழிலும் கமலஹாசன், சூர்யா, விக்ரம் ஆகிய நடிகர்களுடன் நடித்து வருகிறார். தற்போது திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார்.
ஜாஹிர்கானுக்கும் இஷாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி தொடர் முடிந்ததும் மார்ச் மாதம் கடைசியில் திருமணம் நடைபெறும் என்று ஜாஹிர்கான் தரப்பில் செய்தி வெளியாகியுள்ளது. மார்ச் மாதத்தில் திருமணத்தை முடிப்பதில் இரு வீட்டாரும் ஆர்வமாக உள்ளனர்.
மார்ச்சில் திருமணம் இல்லை என்றால் அக்டோபர் மாதத்தில் நிச்சயம் திருமணம் நடைபெறுமாம்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed