டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம்!

1343

டோக்கியோ (01 ஆக 2021): டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை பி.வி சிந்து. வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த இரண்டாவது பதக்கமாகும்.

டோக்கியோவில் தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில், மீராபாய் சானு வெள்ளி பதக்கத்தை வென்றிருந்த நிலையில், இந்திய வீராங்கனை பி.வி சிந்து. இன்றைய ஆட்டத்தில் சீன வீராங்கனை ஹி பிங்ஜியாவோவை வீழ்த்தியதன் மூலம் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

இதைப் படிச்சீங்களா?:  இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் 946 பேர் மரணம் - அதிர்ச்சித் தகவல்!

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற நிலையில் பி.வி.சிந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றதால் பி.வி சிந்து ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் 2 பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றை படைத்துள்ளார்.