ஜுனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் – இறுதிப் போட்டியில் இந்திய அணி (பிசிசிஐ)!

புதுடெல்லி (03 பிப் 2022): ஜுனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி (பிசிசிஐ) இறுதிப் போட்டிக்கு முன்னேறியது

மேற்கிந்திய தீவுகள் நாட்டில் அண்டர் 19 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் அரையிறுதியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடின. அதில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 290 ரன்களை குவித்தது. கேப்டன் யாஷ் தல் 110 ரன்களை குவித்தார். ஷேக் ரஷீத் 94 ரன்களை குவித்தார். 291 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது ஆஸ்திரேலியா. அந்த அணி 194 ரன்களுக்கு அனைத்து வீரர்களையும் ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் விக்கி ஒஸ்ட்வல்.

இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து நான்காவது முறையாக அண்டர் 19 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்குள் இந்தியா நுழைந்துள்ளது. வரும் 5ஆம் தேதி இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்த்து விளையாடுகிறது.

ஹாட் நியூஸ்: