இந்து கோவிலில் ஏழைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய முஸ்லிம் கிரிக்கெட் வீரர்!

இஸ்லாமாபாத் (15 மே 2020): பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி லாக்டவுன் காலத்தில் இந்து கோவில்களில் ஏழைகளுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை விநியோகித்தார்.

தனது நிவாரணப் பணிகளின் புகைப்படங்களைப் சமூக வலைதலங்களில் பகிர்ந்து கொண்டுள்ள அப்ரிடி, , “நாங்கள் கொரோனாவை ஒழிப்பதில் ஒன்றாக இருக்கிறோம், அதேபோலை இதில் ஒன்றாகவே வெற்றி பெறுவோம். ஒற்றுமை எங்கள் பலம். அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதற்காக ஸ்ரீ லட்சுமி நரேன் கோவிலுக்குச் சென்று உதவினேன்” என்று தெரிவித்துள்ளார்.

அப்ரிடியின் இச்செயல் சமூக வலைதலங்களில் பாராட்டுக்களை பெற்றுள்ளது.