இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்காக பெருமை கொள்வோம்!

புதுடெல்லி (06 ஆக 2021): டோக்கியோ ஒலிம்பிக்கில் வெற்றி பெற முடியாவிட்டாலும், இந்திய பெண்கள் பெருமையுடன் ஹாக்கி மைதானத்தை விட்டு வெளியேறுகிறார்கள்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் அரையிறுதி வரை சென்ற இந்திய பெண்கள் ஹாக்கி அணி, வெண்கலப் பதக்கப் போட்டியில், பிரிட்டனிடம் 4-3 என்ற கணக்கில் தோற்றனர். அரையிறுதி வரை சென்ற இந்திய ஹாக்கி பெண்கள் அணிக்கு இந்தியர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய பிரதமர் மோடியும் ஹாக்கி அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரது வாழ்த்துப் பதிவில், “டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் ஹாக்கி அணியின் செயல்பாட்டை நாங்கள் எப்போதும் நினைவில் கொள்வோம். அவர்கள் தங்களால் முடிந்ததைச் சிறப்பாகச் செய்தனர். அணியின் ஒவ்வொரு வீராங்கனைகளும் அசாதாரண தைரியத்தையும் திறமையையும் வெளிப்படுத்தினர். இந்த அணிக்ககக இந்தியா பெருமை கொள்கிறது ”என்று பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.

இறுதி வரை யாருக்கு வெற்றி என்கிற நிலையில் கடைசி வரை போராடியே இந்திய பெண்கள் ஹாக்கி அணி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்:

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...