ஒலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தது கத்தார்!

1684

டோக்கியோ (31 ஜுலை 2021): டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தினை வென்று கத்தார் வரலாற்று சாதனை படைத்துள்ளது.

கத்தார் நாட்டுப் பிரஜையான ஃபாரிஸ் இப்ராகிம், கத்தார் நாட்டின் முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அத்துடன் ஃபாரிஸ், 96 கிலோ எடைப் பிரிவில் வென்று ஒலிம்பிக் சாதனையையும் படைத்துள்ளார்.

ஃபாரிஸ் மொத்தம் 402 கிலோ தூக்கி சாதனை படைத்து கத்தாருக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இதற்கு முன் 2016 ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் முடாஸ் பார்ஷிம் என்பவர் வென்ற வெள்ளிப் பதக்கமே கத்தார் நாட்டின் மிகப்பெரிய சாதனையாக இருந்து வந்தது.

அடுத்த வருடம் 2022 இல் FIFA கால்பந்து போட்டி கத்தாரில் நடக்க இருக்கும் சூழலில், கத்தாரின் இப் புதிய சாதனை மக்களிடையே பரவலான உற்சாகத்தையும் பெரும் வரவேற்பினையும் அளித்துள்ளது.