டெண்டுல்கர் கீழே ஆதித்யா தாக்கரே மேலே – சிவசேனா அதிரடி!

818

மும்பை (25 டிச 2019): சச்சின் டெண்டுல்கரின் பாதுகாப்பை குறைத்து உத்தரவிட்டுள்ளது மஹாராஷ்டிர அரசு!

டெண்டுல்கருக்கு எக்ஸ் கேட்டக்ரியில் பாதுகாப்பு இருந்தது, அதனை மகாராஷ்டிர அரசு வாபஸ் பெற்றுள்ளது. அதேவேளை சிவசேனா எம்.எல்.ஏ ஆதித்யா தாக்கரேவுக்கு இஸட் பாதுகாப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரபலங்களின் பாதுகாப்பு குறித்து மறு பரிசீலனை செய்த மகாராஷ்டிர அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.