இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: விளையாட்டு விளையாட்டு செய்திகள் இந்திய அணி படு தோல்வி: 0-4 என தொடரை இழந்தது!

இந்திய அணி படு தோல்வி: 0-4 என தொடரை இழந்தது!

இந்திய அணி படு தோல்வி: 0-4 என தொடரை இழந்தது!இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான இறுதி டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி 298 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்து 4 - ௦0என டெஸ்ட் தொடரை இழந்துள்ளது.

4 வது நாள் ஆட்ட நேர முடிவில்  இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து இருந்தது. இன்று தொடர்ந்து ஆடிய இந்திய அணி 69 .4 ஓவரில் 201 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அஷ்வின், ஜாகீர் கான் தலா 15 ரன்கள் சேர்த்தனர்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் லியோன் 4 விக்கெட்களையும், ஹாரிஸ் 3 விக்கெட்களையும் வீழ்த்தி இந்திய அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தினர். இறுதி டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்து 4 -௦0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியிடம் தொடரை இழந்தது.

ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர் சிடில் ஆட்ட நாயகனாகவும், கேப்டன் கிளார்க் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

தோனி தலைமையிலான இந்திய அணி அந்நிய மண்ணில் பெறும் இரண்டாவது படு தோல்வியாகும். கடந்த 2011 ம் ஆண்டு ஜூலையில் இங்கிலாந்து சென்ற இந்திய அணி 4 -௦0என்ற கணக்கில் படு தோல்வி அடைந்தது குறிப்பிடத் தக்கது.

 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: