இந்திய கிரிக்கெட் அணிக்குத் தனித்தனி கேப்டன்கள் தேவை என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, டெஸ்ட், 20/20, ஒருநாள் ஆட்டங்கள் என தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருகிறது. இது தொடர்பாக இந்திய அணி கேப்டன் டோனிமீது பலமான விமர்சனங்கள் ஆங்காங்கே எழத்துவங்கிள்ளன.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, இந்திய அணிக்குத் தனித்தனி கேப்டன்கள் தேவை என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது,
"ஒவ்வொரு வடிவிலான கிரிக்கெட்டுக்கும் தனித்தனி கேப்டன்களை நியமிக்க வேண்டும். டெஸ்ட், 20/20 மற்றும் ஒருநாள் போட்டி ஆகிய மூன்று வடிவிலான போட்டிக்கும் தனித்தனி கேப்டன்களை நியமிக்கும் நேரம் தேர்வாளர்களுக்கு வந்து விட்டது. தற்போதைய காலத்தில் நிறைய சர்வதேச போட்டிகள் விளையாடப்படுகின்றன. எனவே தனித்தனி கேப்டன்கள் அவசியம்.
11 வீரர்களும் சிறந்த பீல்டர்களாக எந்த அணிக்கும் கிடைக்காது. ஆஸ்திரேலிய அணி கூட 11 சிறந்த பீல்டர்களை பெற்றிருக்கவில்லை. பீல்டிங் ரொம்ப முக்கியம். அதே சமயம் கடினமான சூழலில் ரன்கள் குவிப்பதும் மிகவும் முக்கியம்." என்று கூறியுள்ளார்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed