இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா நான்கு போட்டிகளிலும் படுதோல்வியடைந்து டெஸ்ட் தொடரை இழந்ததால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ஐ.சி.சி) டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.
உலகக்கொப்பையை இந்தியா கைப்பற்றிய பின்னர் டெஸ்ட் தொடர்களில் தொடர்ந்து படுதோல்விகளைச் சந்தித்து வருகிறது. தற்போது இந்தியா, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. அங்கு ஆஸ்திரேலியாவுடன் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
போட்டிக்கு முன்னர் ஐ.சி.சி தர வரிசையில் இந்தியா 119 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் ஆஸ்திரேலியா 103 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் இருந்தது. இந்தப் போட்டித்தொடரில் அனைத்து போட்டிகளிலும் இந்தியா படுதோல்வியடைந்தது.
இதனால் ஐ.சி.சி தரவரிசையில் இந்தியா 111 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டதோடு ஆஸ்திரேலியா 111 புள்ளிகளுடன் இந்தியாவுக்கு அடுத்த நிலைக்கு முன்னேறியுள்ளது.
ஐ.சி.சி தரவரிசையில் தற்போது அணிகளின் டெஸ்ட் தரவரிசை வருமாறு:
1. இங்கிலாந்து -125 புள்ளிகள்
2. தென்ஆப்பிரிக்கா -117 புள்ளிகள்
3. இந்தியா -111 புள்ளிகள்
4. ஆஸ்திரேலியா -111 புள்ளிகள்
5. பாகிஸ்தான் -99 புள்ளிகள்
6. இலங்கை -98 புள்ளிகள்
7. வெஸ்ட் இண்டீஸ் -88 புள்ளிகள்
8. நியூசிலாந்து -83 புள்ளிகள்
9. வங்காளதேசம் -8 புள்ளிகள்
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|