இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: விளையாட்டு விளையாட்டு செய்திகள் சச்சினை, பாண்ட்டிங்கைக் காட்டிலும் லாராவே சிறந்த பேட்ஸ்மேன் : சாப்பல்!

சச்சினை, பாண்ட்டிங்கைக் காட்டிலும் லாராவே சிறந்த பேட்ஸ்மேன் : சாப்பல்!

சச்சினை, பாண்ட்டிங்கைக் காட்டிலும் லாராவே சிறந்த பேட்ஸ்மேன் : சாப்பல்!தனது 2010ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் அணியில் சச்சினுக்கு சிறப்பான இடம் வழங்கிய இயன் சாப்பல் "சச்சின் தனது பழைய ஆதிக்கத்தை தற்போது மீண்டும் ஒரு கலையாகக் கண்டு பிடித்துக் கொண்டுள்ளார்." என்று கூறியிருந்தார்.

இதே இயன் சாப்பல்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு "சச்சின் டெண்டுல்கர் தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டு கண்ணாடியிடம் தான் தொடர்ந்து விளையாட வேண்டுமா அல்லது வேண்டாமா என்று கேட்கவேண்டும்" என்று கடுமையாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் கிரிக்கெட் உலகின் தற்கால பேட்ஸ்மன் வரிசையில் லாரா, சச்சின், ரிக்கி பாண்ட்டிங் ஆகியோரைக் குறிப்பிட்டுள்ள இயான் சாப்பல் பாண்ட்டிங், சச்சினைக் காட்டிலும், லாரேவே மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்று தெரிவித்துள்ளார்.

அவுட் ஆவதற்கு வாய்ப்பே கொடுக்காமல் மிகப்பெரிய எண்ணிக்கையில் ரன்களைக் குவிப்பதில் லாராவே சிறந்தவர் என்றார் சாப்பல். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு  முறை 400 ரன்கள், ஒரு 300+ மற்றும் ஏழு முறை இரட்டை செஞ்சுரி என்று அடித்து வைத்த வகையில் மற்ற இருவரைக் காட்டிலும் லாராவே மிகச்சிறந்தவர் என்று சாப்பல் குறிப்பிட்டுள்ளார்.  டெய்லி டெலிகிராஃப் நாளேட்டுக்கு சாப்பல் எழுதிய கட்டுரையில் இதைக் குறிப்பிட்டுள்ளார்.

அதிக வேகத்தில் பெரிய ஸ்கோர்களை குவிப்பதிலும், ஆடத்தொடங்கிய காலந்தொட்டு, ஓய்வு பெற்ற காலம்வரை சீரான ரன்ரேட்டை வைத்திருந்ததும் லாராவின் நிபுணத்துவத்துக்குச் சான்று என்று குறிப்பிட்டுள்ள சாப்பல், சச்சின் 100 ஆவது 100 அடிக்க இயலாமல் மனநிலையில் அழுத்தம் கொண்டுள்ளதாகவும், என்னதான் சச்சினுடைய சாதனைகளை நெருங்க இயலாவிட்டாலும், பாண்ட்டிங் மன அழுத்தமின்றி ஆடுவதால், தற்போது அதிக ரன்களை அவரால் குவிக்க முடிகிறது என்றும் சாப்பல் குறிப்பிட்டுள்ளார்.

 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: