இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: விளையாட்டு விளையாட்டு செய்திகள் கிரிக்கெட் ருசிகரம் - சச்சின் செய்தது சரியா?

கிரிக்கெட் ருசிகரம் - சச்சின் செய்தது சரியா?

கிரிக்கெட் ருசிகரம் - சச்சின் செய்தது சரியா?இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இன்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஒரு ருசிகர சம்பவம் நடைபெற்றது.

ஆட்ட விதிகளின்படி பந்து வீச்சாளரின் கையில் இருந்து பந்து வெளியேறுவதற்குள் ஆட்டக்காரர் கோட்டை விட்டு வெளியேறக் கூடாது. அவ்வாறு வெளியேறும்போது பந்து வீச்சாளர் விக்கெட்டில் அடித்தால் ஆட்டக்காரர் ஆட்டமிழப்பார். இதனை முதன்முதலாக 1947 ஆம் ஆண்டு இந்தியாவைச் சார்ந்த வினு மன்காட் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பயன்படுத்தி பில் பிரௌன் என்பவரை ஆட்டமிழக்கச் செய்தார்.

இலங்கை விளையாடிக்கொண்டிருக்கும் போது 40 வது ஓவரை அஸ்வின் வீசினார். அந்த ஓவரின் 3 வது பந்தை வீசும்போது இலங்கை ஆட்டக்காரர் திரிமன்னே ஓடுவதற்கு தயாராக கோட்டுக்கு வெளியே சென்று விட்டார். இதனைக் கவனித்த அஸ்வின் பந்தை வீசாமல் விக்கெட்டில் அடித்து ரன் அவுட் கோரினார். திரிமன்னே ரன் அவுட் ஆனாரா என்பதை கள நடுவர்கள் மூன்றாவது நடுவருக்கு முறையிட்டார்கள்.

அப்போது சச்சின் டெண்டுல்கர், தலைவராக இருந்த ஷேவாக்கிடம் இந்த முறையீட்டை திரும்பப் பெற்று திரிமன்னேவை மீண்டும் ஆட அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதனை ஏற்று ஷேவாக்கும் முறையீட்டை திரும்பப் பெற்று திரிமன்னே ஆட அனுமதித்தார்.

இதற்கு பின்னரும் இவ்வாறு பந்து வீசப்படுவதற்கு முன் திரிமன்னே கோட்டை விட்டு வெளியேறிக் கொண்டே இருந்தார். இது இந்திய ரசிகர்களுக்கு வெறுப்பினைத் தந்நது.  சிறப்பாக விளையாடிய திரிமன்னே 62 ஓட்டங்களை சேர்த்து இலங்கை வலுவான நிலையை அடைய உதவினார். இந்த ஆட்டத்தில் 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியைத் தழுவியது.

கனவான்களின் ஆட்டமென கருதப்படும் கிரிக்கெட்டின் சிறந்த தூதராக சச்சின் இன்று செயல்பட்டார் என சில ரசிகர்களும், முக்கியமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறுவதற்கு அஸ்வின் செய்தது சரிதான் என்றும் இவ்வாறு செய்வது விதிகளில் இருக்கும்போது அதற்கு மாறாக சச்சின் செயல்பட்டது தவறு என சில ரசிகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Comments  

 
-1 # சையத் 2012-02-21 23:25
எல்லா வீரர்களையும் மதிக்ககூடிய ஒரு சிறந்த விளையாட்டு வீரர் சச்சின் அவர் செய்தது சரியாகவே இருக்கும். அஸ்வின் பந்தை வீசாமல் எதிர்தரப்பினரை வீழ்த்தி இந்தியாவுக்கு மணிமகுடம் சூட்ட நினைத்தார்(இது விதி முறையில் இருந்தாலும் கூட) அதை பெரிய மனதுடன் விட்டு கொடுத்த சச்சினுக்கு பாராட்டுக்கள். வாழ்க நீடுழி சச்சின்.
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # kutty 2012-02-24 12:37
athanalthano ennavo ella matchulaum seekirame out agi opposit partikku vettriyai thedi tharukirar sachin enna oru vittu kodukkum manam ........ appuram ethauku rules ella rulsaium edukka sollungal sachin
பதில் | Reply with quote | Quote
 
 
0 # ramamurthy m 2012-02-28 19:28
Tendulkar is more loyal than the king--he is always bent on his own records and fame and never plays for the team or nation.He is a spent force.Withou him India has achieved many victories.Because of his slow running he has made his mates out.He should quit before being asked why should not he?
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: