ஆஸி. ஓப்பன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறாது. இப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஸாவும் ரஷ்யாவின் எலினா வெஸ்னினாவும் இணை சேர்ந்து ஆடும் இரட்டையர் ஆட்டத்தில் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தது அறிந்ததே.
ஆனால், இன்று நடைபெற்ற அரையிறுதியில் சானியா - எலினா இணை பரிதாபமாகத் தோற்றுப்போயுள்ளது.
இன்று (புதன்) நடைபெற்ற மகளிர் இரட்டையர் அரையிறுதிப் போட்டியில், ரஷ்ய இணையான ஸ்வெட்லானா குஸ்நெட்சோவா - வெரா ஸ்வொனரேவா இணை, 6ம் தரவரிசை இணையான இந்தியாவின் சானியா மிர்சா - ரஷ்யாவின் எலினா வெஸ்னினா இணையை 7-6 (4), 2-6, 6-4 என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|