இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: விளையாட்டு டென்னிஸ் ஆஸ்திரேலிய ஓபன் - இரட்டையர் அரை இறுதியில் சானியா மிர்ஸா!

ஆஸ்திரேலிய ஓபன் - இரட்டையர் அரை இறுதியில் சானியா மிர்ஸா!

ஆஸ்திரேலியா ஓபன்: அரையிறுதியில் சானியா ஜோடிஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

இதில் மகளில் இரட்டையர் ஆட்டத்தின் அரையிறுதிக்கு இந்தியாவின் சானியா மிர்ஸா - ரஷ்யாவின் எலினா வெஸ்லினா இணை முன்னேறியுள்ளது. காலிறுதிப் போட்டியில் இவர்கள் அமெரிக்காவின் லெய்ஸெல் ஹபேர் மற்றும் லிசா ரேமண்ட் இணையை வீழ்த்தினர். 6-3,5-7,7-6 என்ற புள்ளிக் கணக்கில் சானியா மிர்ஸா இணை வெற்றி பெற்றது.

போட்டியின் தரவரிசையில் சானியா மிர்ஸா - ரஷ்யாவின் எலினா வெஸ்லினா ஆறாம் இடத்திலும் , தோல்வி கண்ட லெய்ஸெல் ஹபேர் மற்றும் லிசா ரேமண்ட் இணை இரண்டாம் இடத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 2011ல் நடைபெற்ற விம்பிள்டன் போட்டிக்கு பிறகு சானியா தற்போது இரண்டாவது முறையாக கிராண்ட் ஸ்லாம் போட்டியில் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஆண்கள் அரை இறுதிப் போட்டியின் ஒரு ஆட்டத்தில் தலை சிறந்த ஆட்டக்காரர்களான ரோஜர் பெடரரும் ரபேல் நடாலும் மோதஉள்ளனர்.

 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)