மூன்று கிரிக்கெட் வீரர்கள் கொரோனாவால் பாதிப்பு!

941

இஸ்லாமாபாத் (23 ஜூன் 2020): பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மூன்று பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் விளையாட உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னர் பாகிஸ்தான் வீரர்கள் ராவல்பிண்டியில் கொரோனா பரிசோதனை செய்துகொண்டர்.

பரிசோதனை முடிவில் அந்த அணியின் ஹைதர் அலி (பேட்ஸ்மேன்), ஹரிஸ் ரஃப் (பந்து வீச்சாளர்), ஷதிப் கான் (பந்து வீச்சாளர்) ஆகிய மூன்று வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் உறுதி செய்யப்பட்ட வீரர்கள் மூன்று பேருக்கும் வைரஸ் தொடர்பான எந்த அறிகுறிகளும் இல்லை எனவும், அறிகுறிகள் இல்லாமலேயே வீரர்களுக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, கொரோனா உறுதி செய்யப்பட்ட வீரர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகீத் அப்ரிடிக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.