சசிகலாவுக்கு அதிமுக அமைச்சர் திடீர் ஆதரவு – டென்ஷனில் எடப்பாடி!

ஸ்ரீவில்லிபுத்தூர் (25 ஜன 2020): சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் விடுதலையாக வேண்டும் என்று அதிமுகவின் பால்வளத்துறை ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ள கருத்தால், அதிமுக தலைமை அதிருப்தி அடைந்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா உட்பட 4 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில், `ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு போட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டதால்,…

மேலும்...

அதிமுக முன்னாள் எம்.பி கைது!

கோவை (25 ஜன 2020): அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பழனிசாமி, அதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தி வந்ததால் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவைச் சேர்ந்த முட்டுகவுண்டன்புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் கந்தசாமி புகாரின் பேரில் கே.சி.பழனிசாமி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 11 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கைதான பழனிசாமி விசாரணை மேற்கொள்ள கே.சி.பழனிசாமி சூலூர் காவல் நிலையத்துக்கு கொண்டு…

மேலும்...

மத்திய அரசிடம் போராடிக் கொண்டு இருக்கிறோம் – தமிழக அமைச்சர் பரபரப்பு தகவல்!

சென்னை (24 ஜன 2020): மாநிலங்களின் உரிமைகள் மத்திய அரசின் கைக்கு சென்று கொண்டிருப்பதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பாண்டியராஜன், “மாநில அரசுகளுக்கு இருக்கும் அதிகாரம் சிறுகச் சிறுக மத்திய அரசுக்குக் கீழ் செல்வதாகவே தெரிகிறது. இதற்கு ஒரு நல்ல உணாரணம். ஜி.எஸ்.டி வரிமுறை. ஜி.எஸ்.டி வந்ததில் இருந்து நமக்கு சுமார் 4,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதைப் பெற மத்திய அரசிடம் போராடிக் கொண்டிருக்கிறோம். ஜி.எஸ்.டி…

மேலும்...

துரைமுருகனுக்கு திமுக தலைவர் பதவி – ஜெயக்குமார் கேள்வி!

சென்னை (23 ஜன 2020): திமுக தலைவர் பதவியை துரைமுருகனுக்கு ஸ்டாலின் விட்டுக் கொடுப்பாரா? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அ.தி.மு.க.வில் யார் வேண்டுமானாலும் முதல்-அமைச்சர் ஆகலாம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் பதிலளிக்கையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்-அமைச்சர் பதவியை விட்டுக் கொடுப்பாரா? என்று கேட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “அதையே நான் திருப்பிக் கேட்கிறேன். அ.தி.மு.க.வில் அடிமட்ட தொண்டன் கூட கொடி கட்டிய காரில்…

மேலும்...

கொந்தளித்த அதிமுக – தடுமாறும் பாஜக!

சென்னை (23 ஜன 2020): பெரியார் குறித்த ரஜினியின் கருத்துக்கு அதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அதன் கூட்டணி கட்சியான பாஜகவோ, ரஜினிக்கு ஆதரவு அளித்து வருகிறது. கடந்த 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் 50ம் ஆண்டு நிறைவு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார். அப்போது, “1971 சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிலையை, உடையில்லாமல், செருப்பு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப்போனாரு” என்று பேசியிருந்தார். இது பெரும்…

மேலும்...

விரைவில் பாஜகவிலிருந்து விலகுவோம் – அமைச்சர் அதிரடி!

இளையான்குடி (22 ஜன 2020): “பாஜகவில் இருந்து அதிமுக விரைவில் விலகும்!” என்று அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் எம்ஜிஆரின் 103வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் மற்றும் உள்ளாட்சி தேர்தல் வெற்றிவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக கதர் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன், அதிமுக பாஜகவிடமிருந்து விலகி தனியாக செல்வதற்கான நேரத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். எங்களின் அமைச்சரவையிலே எல்லாரும் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். நீங்கள் எங்களை ஒதுக்கி…

மேலும்...

ரஜினிக்கு அதிமுக அமைச்சர் கண்டனம்!

சென்னை (21 ஜன 2020): ரஜினியின் பெரியார் குறித்த கருத்துக்கும் அவர் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியதற்கும் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பெரியாரை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நடிகர் ரஜினிகாந்த் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. திராவிட கழகம் மறுத்திருந்தும் மீண்டும் ஏன் பேசுகிறார். துக்ளக் பத்திரிகையில் இந்த தகவல் வெளிவந்துள்ளதாக கூறிய ரஜினிகாந்த், ஏன் துக்ளக் பத்திரிகை ஆதாரத்தை காட்டவில்லை? சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஆங்கில…

மேலும்...

பொறுத்தது போதும் – பொங்கி எழுந்த அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை (19 ஜன 2020): சரக்கு மற்றும் சேவை வரியில் தமிழகத்திற்கு வர வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.4,073 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். பாஜகவை கொஞ்சம் கூட எதிர்த்து பேசாமல் இருந்து வந்த அதிமுகவினர் தற்போது எதிர்க்க தொடங்கியுள்ளனர். எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் தாக்குப் பிடிக்க வேண்டுமானால் பாஜகவின் நட்பை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் விரும்புகின்றனர். குறிப்பாக உள்ளுரில் வாழும் அனைத்து…

மேலும்...

பொன் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக பொங்கிய ஜெயக்குமார்!

சென்னை (15 ஜன 2020): பதவி கிடைக்காத விரக்தியில் பொன்.ராதாகிருஷ்ணன் அரசை விமர்சிக்கிறார் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவிட்டது என்பதை மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலத்திலிருந்தே நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். தற்போது கேரளா, குஜராத், டெல்லி, தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளது, இதை உறுதிப்படுத்தியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று…

மேலும்...

தேர்தல் முடிவுகள் – அதிர்ச்சியில் திமுக!

புதுக்கோட்டை (11 ஜன 2020): மறைமுக தேர்தலில் புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பதவியில் திமுக தோல்வியடைந்துள்ளது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய குழுத்தலைவர், ஒன்றிய குழுத் துணைத் தலைவர், பஞ்சாயத்துத் தலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தல் இன்று காலை தொடங்கிய நிலையில் நடைபெற்று வருகிறது. மறைமுக தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர், துணைத் தலைவர் விவரங்களை அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில், புதுக்கோட்டை…

மேலும்...