அடுத்த பிரதமர் யார்? – அமித்ஷா பதில்!

புதுடெல்லி (18 ஜன 2023): பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். நரேந்திர மோடியின் தனிப்பட்ட தலைமையும், நட்டாவின் அமைப்புத் திறமையும் பாஜகவை மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு கொண்டு வரும் என்று அமித் ஷா கூறினார். 2023ல் ஒன்பது மாநிலங்களில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலையும், அடுத்த லோக்சபா தேர்தலையும் நட்டா தலைமையில் பா.ஜ., சந்திக்கும்.நட்டா தலைமையில் பாஜக மகத்தான வெற்றி பெற்றுள்ளதாக அமித்ஷா கூறினார். குஜராத்தில்…

மேலும்...

பொது சிவில் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் – அமித்ஷா உறுதி!

புதுடெல்லி (15 நவ 2022): பொது சிவில் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேசிய ஊடகமான ‘நியூஸ்18’க்கு அளித்த பேட்டியில் அமித்ஷா தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். மேலும் அதில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று எங்களது தேர்தல் அறிக்கை கூறுகிறது. எந்த மதச்சார்பற்ற நாட்டிலும், அனைத்து மதத்தினருக்கும் சம உரிமை இருக்க வேண்டும். அதுதான் எங்களின் வாக்குறுதி. அது நிஜமாக்கப்படும்” என்று அமித் ஷா தெளிவுபடுத்தினார்….

மேலும்...

சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடுகடத்த அமித்ஷா உத்தரவு!

புதுடெல்லி (14 நவ 2022): ஒவ்வொரு மாநிலத்திலும் சுமார் 100 சட்டவிரோத குடியேறிகளைக் கண்டுபிடித்து, அவர்களின் ஆவணங்களைச் சரிபார்த்து, முடிந்தால் அவர்களைக் கைது செய்து நாடு கடத்துமாறு அதிகாரிகளுக்கு ஷா பணித்துள்ளதாக ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது. நவம்பர் 9-ம் தேதி நடைபெற்ற உளவுத்துறைக் கூட்டத்தில் அமித்ஷாவின் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. எல்லையோர மாவட்டங்களில் மக்கள்தொகை மாற்றங்கள் மற்றும் தீவிரமயமாக்கல் குறித்து கடுமையான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அமித் ஷா முன்பு அழைப்பு விடுத்துள்ளார். மாநில காவல்துறை தலைவர்கள் கலந்து…

மேலும்...

விரைவில் சிஏஏ அமல்படுத்தப்படும் – அமித் ஷா!

கொல்கத்தா (03 ஜூலை 2022): கோவிட் பூஸ்டர் தடுப்பூசி பிரச்சாரத்திற்குப் பிறகு சிஏஏ அமல்படுத்தப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த தாக மேற்கு வங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகரி தெரிவித்தார். ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜெயின்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை (திருத்த) சட்டம் ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்ற காத்திருக்கும் நிலையில் இதற்கு நாடெங்கும்…

மேலும்...

கொரோனா தடுப்பு வழிகாட்டல்களை பின்பற்றத் தவறிய அமித் ஷா – வீடியோ!

லக்னோ (28 ஜன 2022): உத்திர பிரதேச மாநில சட்டசபை தேர்தலை ஒட்டி, பிரச்சாரம் மேற்கொண்டுள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கொரோனா வழிகாட்டல்முறைகள் எதனையும் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலையொட்டி அங்குள்ள பகுதிகளில் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். #WATCH | Union Home Minister Amit Shah holds door-to-door campaign in Dadri, Gautam Buddha Nagar in…

மேலும்...

பிரதமர் மோடி, அமித்ஷா பெயரில் போலி தடுப்பூசி சான்றிதழ் – அதிர்ச்சித் தகவல்!

பாட்னா (08 டிச 2021): பீகார் மாநிலத்தில் உள்ள அர்வால் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் பல முக்கிய தலைவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக போலியாக சான்றிதழ் வழங்கியது தெரிய வந்துள்ளது. அந்த போலி தடுப்பூசி பட்டியலில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன. இதை கண்டதும் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அர்வால் மாவட்டத்தில் உள்ள…

மேலும்...

திமுக அதிருப்தியாளர்களை அலேக்காக தூக்க பாஜக அதிரடி பிளான்!

சென்னை (14 மார்ச் 2021): சீட் கிடைக்காத திமுக பிரமுகர்களை பாஜக பக்கம் இழுக்க அமித்ஷா திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவாக இருக்கும் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பாஜக பக்கம் தாவுவது வழக்கமாகி வருகிறது. பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி கவிழ இதுவே காரணமாக அமைந்தது. இதனை தமிழகத்திலும் நிறைவேற்ற பாஜக முயன்று வருகிறது. இதற்கு வலுவாக இருக்கும் திமுகவை குறி வைத்து அமித் ஷா காய் நகர்த்தி வருகிறார். திமுகவில் அறிவிக்கப்பட்ட…

மேலும்...
Mamta-Banerjee

நீங்கள் செய்துதான் பாருங்களேன் – பாஜகவுக்கு மம்தா சவால்!

கொல்கத்தா (11 பிப் 2021): மேற்கு வங்கத்தில் பாஜகவால் எதுவும் செய்ய முடியாது என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கும் மாதாவுக்கு இடையேயான கருத்து மோதல் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளன. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கு வாங்க சட்டமன்றத் தேர்தல் முடிவடைவதற்கு முன்னர் பானர்ஜி ஜெய் ஸ்ரீராம் என்று கூறுவார் என்று தெரிவித்திருந்த. இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள மம்தா பானர்ஜி. மேற்கு வங்கத்தில் பாஜகவால்…

மேலும்...

பாஜகவுக்கு அடிமேல் அடி – முக்கிய தலைவர்கள் ராஜினாமா!

மும்பை (10 பிப் 2021): மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு பக்கபலமாக இருந்த ஏழு தலைவர்கள் கட்சியை விட்டு விலகி சிவசேனாவின் இணைந்துள்ளனர். மகாராஷ்டிரா பாஜகவுக்கு சிவசேனா சிம்ம சொப்பனமாக அமைந்துள்ளது. கொங்கன் பிராந்தியத்தில் உள்ள வைபவ் வாடி மாநகராட்சியின் ஏழு கவுன்சிலர்கள் பாஜகவை விட்டு வெளியேறி சிவசேனாவில் சேர்ந்துள்ளனர். அவர்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் வீட்டில் அவரது முன்னிலையில் கட்சியில் சேர்ந்தனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா மகாராஷ்டிராவிற்கு வந்து சென்ற சில மணி நேரங்களிலேயே அவர்கள் பாஜகவை…

மேலும்...

அமித் ஷாவின் கோரிக்கையை ஏற்க விவசாயிகள் மறுப்பு – திங்கள் கிழமை தேசிய அளவில் போராட்டம்!

புதுடெல்லி (09 டிச 2020): வேளாண் சட்டத்தை திரும்பப்பெற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதேவேளை சில திருத்தங்கள் செய்ய எழுத்துப் பூர்வமாக அறிவிக்க தயாராக உள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்தார். அனால் இதனை ஏற்க விவசாயிகள் மறுத்துவிட்டனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று (புதன்கிழமை) 14-வது நாளாக அவர்களது போராட்டம் தொடர்ந்தது. விவசாய சங்க பிரதிநிதிகளிடம் மத்திய…

மேலும்...