குஜராத் மாடலை டெல்லியில் நிகழ்த்திப் பார்க்க துடிக்கும் அமித் ஷா பதவி விலக வேண்டும்: திருமாவளவன்!

சென்னை (25 பிப் 2020): டெல்லி கலவரத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கவளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா நடத்திய ஊர்வலத்தைத் தொடர்ந்து கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. இதில் ஒரு போலீஸ்காரர் உட்பட ஏழு பேர்…

மேலும்...

டெல்லி வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு – அமித் ஷா அவசர ஆலோசனை!

புதுடெல்லி (25 பிப் 2020): டெல்லியில் நேற்று ஏற்பட்ட வன்முறையில் இதுவரை ஏழுபேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாகவே பதற்றம் நிலவி வரும் நிலையில் திங்கள் அன்று ஏற்பட்ட திடீர் கலவரத்தில் போலீஸ் தலைமை காவலர் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டுள்ளது. முதலில் தலைமை காண்ஸ்டபில்…

மேலும்...

விழி பிதுங்கி நிற்கும் மோடி அமித் ஷா – தெலுங்கானா மாநிலமும் கை விரிப்பு!

புதுடெல்லி (20 பிப் 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தெலுங்கானா மாநில சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற இருப்பதால் மேலும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது மத்திய அரசு. குடியுரிமை சட்டம் அமல்படுத்தப் பட்டது முதலே மத்திய அரசு தேன் கூட்டுக்குள் கைவிட்ட நிலையில் மாட்டிக் கொண்டுள்ளது அனைவரும் அறிந்ததே. ஏகப்பட்ட பிரச்சனைகளில் சிக்கிதவிக்கும் இந்தியாவிற்கு இச்சட்டம் அவசியம்தானா என பாஜகவின் கூட்டணி கட்சிகள் மட்டுமல்லாமல், பாஜக தலைவர்களில் சிலரும் மத்திய அரசை கேள்வி கேட்க தொடங்கினர். இந்நிலையில் இச்சட்டத்தை…

மேலும்...

அமித் ஷாவை ஷஹீன் பாக் போராட்டக்காரர்கள் சந்திக்க போலீஸ் மறுப்பு!

புதுடெல்லி (16 பிப் 2020): டெல்லி ஷாஹீன் பாக் போராட்டக் காரர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க டெல்லி போலீஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வரும் போராட்டக் காரர்கள், மத்திய அமைச்சர் அமித் ஷா வீட்டிற்கு பேரணியாக சென்று சந்திக்கவுள்ளதாக நேற்று அறிவித்திருந்தனர். இந்நிலையில் டெல்லி போலீஸ் அதற்கு அனுமதி மறுத்துள்ளது. தொலைக்காட்சி நேர்காணலில் டெல்லி தோல்வி குறித்து பேசியிருந்த அமித் ஷா, ஷாஹீன் பாக் எதிர்ப்பாளர்கள்…

மேலும்...

அமித் ஷா வீட்டை நோக்கி பேரணி – ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் முடிவு!

புதுடெல்லி (16 பிப் 2020): டெல்லி ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டை நோக்கி பேரணி செல்ல முடிவு செய்துள்ளனர். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களை தாண்டி பொது மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிப்ரவரி 16 ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டை நோக்கி…

மேலும்...

டெல்லி தோல்வி எதிரொலி – பதுங்கும் பாஜக -குழப்பத்தில் அமித் ஷா!

புதுடெல்லி (13 பிப் 2020): டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து பாஜக தலைமை குழப்பத்தில் உள்ளது. இன்று டெல்லி தேர்தல் தோல்வி குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பாஜக தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சே தோல்விக்கு காரணம்” என்பதை ஒப்புக் கொண்டார். மேலும், “பாகிஸ்தான் போ, சுட்டுத் தள்ளுங்கள்” போன்ற பாஜக தலைவர்களின் வார்த்தைகளை பாஜக ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அமித் ஷா தெரிவித்தார். அதேவேளை குடியுரிமை சட்டம்தான் பாஜகவின் தோல்விக்கு…

மேலும்...

டெல்லி தேர்தல் கருத்துக் கணிப்புகள் உண்மையா? – அமித்ஷா வேறு வகை பதில்!

புதுடெல்லி (09 பிப் 2020): டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மியே வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் கூறியுள்ள நிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷா அதனை மறுத்துள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற தேர்தலில் ஆத்மி கட்சி 56 இடங்கள் வரை கைப்பற்றி, மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என கூறப்பட்டது. கருத்து கணிப்புக்கள் வெளியிடப்பட்ட பிறகு பாஜக நாடாளுமன்ற., குழு உறுப்பினர்கள், மூத்த தலைவர்கள் ஆகியோருடன் அமித்ஷா, மீனாட்சி லேகி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்….

மேலும்...

முதல்வர் அமித் ஷா – அதிர வைத்த சிறுவன்!

ராஞ்சி (07 பிப் 2020): பள்ளிச் சிறுவன் ஒருவனிடம் மாநில முதல்வர் யார்? என்ற கேள்விக்கு அளித்த பதில் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. ஜார்க்கண்ட்டில் கல்வி ஜகர்நாத் மாத்தோ, ராம்கர் மாவட்டத்தில் உள்ள கோயா கிராமத்தில் உள்ள பள்ளியை ஆய்வு மேற்கொள்ள சென்றார். அப்போது 7ஆம் வகுப்பறைக்குள் நுழைந்த அமைச்சர், நமது மாநிலத்தின் முதலமைச்சர் யார் என்று ஒரு மாணவனிடம் கேட்டார். அந்த மாணவன் அமித்ஷா என்று பதில் கூறியதும் கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகள்…

மேலும்...

ராமர் கோவில் அறக்கட்டளையில் தலித்துகளும் சேர்ப்பு – அமித் ஷா தகவல்!

புதுடெல்லி (05 பிப் 2020): அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கடளையில் தலித் உள்பட 15 அறங்காவலர்கள் இடம்பெறுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அரசாங்கத்தால் அறக்கட்டளை ஏற்படுத்தப்படும் என்று அதன் அரசியலமைப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் அறிவித்த ஒரு மணி நேரத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா, அறங்காவலர்கள் தொடர்பான அறிவிப்பை  அமித்…

மேலும்...

ரூ 15 லட்சம் தராமல் மக்களை ஏமாற்றியதாக மோடி அமித்ஷா மீது வழக்கு பதிவு!

ராஞ்சி (03 பிப் 2020): ரூ 15 லட்சம் தராமல் பொது மக்களை ஏமாற்றியதாக பிரதமர் மோடி, மற்றும் அமித்ஷா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியர்கள் அனைவரின் வங்கிக் கணக்கிலும் ரூ 15 லட்சம் போடப்படும் என்று பிரதமர் மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார். ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட தரப்படவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக ராஞ்சி உயர் நீதிமன்றத்தில் மோடி மற்றும் மத்திய அமைச்சர்…

மேலும்...