பாலஸ்தீன முன்னேற்றத்திற்கான பைடன் திட்டம் – அரபு நாடுகள் வரவேற்பு!

துபாய் (28 ஜன 2021): பாலஸ்தீனத்திற்கு சாதகமாக தீர்வு ஏற்படுத்தப்படும் என்ற பைடன் நிர்வாகத்தின் முடிவை அரபு நாடுகள் வரவேற்றுள்ளன. அமெரிக்க அதிபர் பைடன் ஆட்சியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறார். ஏற்கனவே ட்ரம்ப் நிர்வாகம், முஸ்லீம் நாடுகள் அமெரிக்காவில் நுழைய விதித்த தடையை நீக்கினார். இந்நிலையில் டிரம்ப் நிர்வாகத்தால் முடிவுக்கு வந்த பாலஸ்தீனத்துடனான இராஜதந்திர உறவுகளை மீண்டும் தொடங்க உள்ளதாக பைடன் அறிவித்துள்ளார். மேலும் பாலஸ்தீனிய சமூகம் மீது “அனுதாப நிலைப்பாட்டை” எடுக்கும் என்று பிடன்…

மேலும்...

கலவரக் களமான வெள்ளை மாளிகை – டிரம்புக்கு எதிராக பேஸ்புக் ட்வீட்டர் நடவடிக்கை!

வாஷிங்டன் (07 ஜன 2021): அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். வருகிற 20ந்தேதி அவரது பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. அதில் முறைப்படி அமெரிக்காவின் 46வது அதிபராக பைடன் பொறுப்பேற்க உள்ளார். ஆனால், பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த அதிபர் டிரம்ப், தேர்தலில் மோசடி நடந்துள்ளது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இதுபற்றிய வழக்குகளின் விசாரணையும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது….

மேலும்...

இந்தியா அசுத்தமான நாடு – ட்ரம்ப் கடும் விமர்சனம் : பிரதமர் மோடி அமைதி!

வாஷிங்டன் (23 அக் 2020): இந்தியா அசுத்தமான நாடு என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார். நவம்பர் 3 ம் தேதி அமெரிக்கர்கள் ஒரு புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்ய உள்ளனர். கொரோனா தொற்றால் பெரிதும் பாதிக்கபட்டு உள்ள அமெரிக்கர்கள் வாக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இனவெறி மற்றும் போலீஸ் மிருகத்தனம் போன்ற முக்கிய பிரச்சினைகள் தவிர, அவ்வப்போது பல பிரச்சினைகளுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்….

மேலும்...

அதிபர் ட்ரம்ப், அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் இடையே தரை லோக்கலில் நடந்த காரசார விவாதம்!

நியூயார்க் (30 செப் 2020): அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் இடையே தரை லோக்கலில் காரசாரமாக விவாதம் நடைபெற்றுள்ளது அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ஆம் தேதியன்று அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில், ரிபப்ளிகன் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து டெமாக்ட்ரடிக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிடுகிறார். அமெரிக்காவில் தேர்தலுக்கு முன் அதிபர் வேட்பாளர்கள் நேரடியாக விவாதம் செய்வது மரபு….

மேலும்...

அமெரிக்காவை விஞ்சிவிடும் நிலையில் இந்தியா!

புதுடெல்லி (06 செப் 2020): கொரோனா பாதிப்பில் இந்தியா உலக அளவில் இரண்டாமிடத்தில் உள்ள நிலையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவை தொட்டுவிடும் நிலையில் இந்தியா உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் உள்ள கொரோனா நிலவரம் குறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒரே நாளில் 90,600 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது உலகளவில் கொரோனாவால் சுமார் 2 கோடியே 70 லட்சத்து 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்…

மேலும்...
Aatish Taseer

பிரதமர் மோடி-யின் கடும் விமர்சகருக்கு குடியுரிமை வழங்கியது அமெரிக்கா..!

வாஷிங்டன்(ஜூலை 31):இந்திய வம்சா வழியைச் சேர்ந்தவரான ஆதிஷ் தசீர், அமெரிக்காவின் நியூயார்க்கை மையமாக கொண்ட எழுத்தாளரும் பத்திரிகையாளருமாவார். இவருக்கு கடந்த திங்களன்று அமெரிக்க குடியுரிமை அளிக்கப்படடிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மோடி அரசாங்கம் இவரது வெளிநாட்டு குடியுரிமை (OCI) Overseas Citizenship of India அட்டையை ரத்து செய்த சில மாதங்களுக்குப் பிறகு, அமெரிக்கா அந்நாட்டின் குடியுரிமையை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசு அவரது OCI-ரத்து செய்ததற்கு கூறிய காரணம், அவர் அடிப்படை ஆதாரங்களை சமர்பிக்க தவறியது மற்றும் அவரது…

மேலும்...

வெளிச்சத்திற்கு வந்த இஸ்ரேலின் ஈனச்செயல்!

66 வயதான ஜெப்ரி எப்ஸ்டீன் கடந்த வருட (2020) கோடைகாலத்தில் நியூயார்க்கில் உள்ள ஒரு கூட்டாட்சி தடுப்பு மையத்தில் பாலியல் கடத்தல் குற்றச்சாட்டில் விசாரணைக்கு காத்திருந்த போது கொல்லப்பட்டார். இவர் அமெரிக்காவின் பணக்காரர்களுள் ஒருவர். அமெரிக்காவிலுள்ள பெரும் புள்ளிகளுடன் இவருக்கு தொடர்பு உண்டு எனத் தெரிகிறது. 2005 ம் ஆண்டு 14 வயது சிறுமியின் தாய் இவர் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். 14 வயதான தனது மகளை இவர் பாலியல் குற்றத்தில் ஈடுபடுத்தினார் என்று வழக்கு…

மேலும்...

அமெரிக்க சுதந்திர வரலாறு – ஒரு பார்வை

ஜூலை 4 உலகின் மாபெரும் வல்லரசு என்று மார் தட்டிக் கொள்ளும் அமெரிக்காவின் 245வது சுதந்திர தினம் இன்று! அமெரிக்க சுதந்திர போராட்டத்தைப் பற்றி அறிந்துகொள்வோமா..? சிறு குழந்தைகளிடம் கேட்டாலும் பதில் வரக்கூடிய ஒரு கேள்வி, அமெரிக்காவை கண்டுபிடித்தது யார்? கொலம்பஸ்! கி.பி. 1492-இல் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். ஆனால் அமெரிக்கா எனும் ஒரு நாடு கொலம்பஸ் மூலமாக உலகத்துக்கு அறிமுகமாகவில்லை. கொலம்பஸ் அமெரிக்காவிற்கு வந்து சென்றதற்குப் பிறகு, அந்த இடம் மக்கள் வாழ்க்கைக்கு ஏற்றதொரு இடமா…

மேலும்...

அமெரிக்காவில் சாதிய பாகுபாடு – இருவர் மீது வழக்கு!

நியூயார்க் (04 ஜூலை 2020): சாதிய பாகுபாட்டுடன் இரு அதிகாரிகள் நடந்து கொள்வதாக குற்றஞ்சாட்டி சிஸ்கோ நிறுவனத்தின் மீது கலிஃபோர்னியா அரசு அமைப்பு ஒன்று வழக்கு தொடுத்துள்ளது. அந்த இரு அதிகாரிகளின் பெயர் சுந்தர் ஐயர், ரமண கொப்பல்லா என்கிறது நியூயார்க் டைம்ஸ். என்ன நடந்தது? நியூயார்க் டைம்ஸ் தரும் தகவல்களின்படி ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஓர் ஊழியரை இரண்டு மேலதிகாரிகள் தொடர்ந்து சாதிய பாகுபாட்டுடன் நடத்தி வந்துள்ளனர். அமெரிக்காவில் சாதியம் இறக்குமதி செய்யப்பட்ட ஒன்று. அதனால்…

மேலும்...

கூகுள் சி.இ ஓ சுந்தர் பிச்சை அமெரிக்க அரசின் மீது அதிருப்தி!

நியூயார்க் (23 ஜூன் 2020): வெளிநாடுகளிலிருந்து அமெரிக்‍கா வந்து பணிபுரிய அனுமதி வழங்கும் அனைத்து வகையான விசாக்‍களும் ரத்து செய்யப்படுவதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதற்கு கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கண்டனம் தெரிவித்துள்ளார். ட்ரம்பின் இந்த உத்தரவு நாளைமுதல் அமலுக்‍கு வருகிறது. கொரோனா நெருக்‍கடியால், அமெரிக்‍காவில் ஏற்பட்டுள்ள வேலை இழப்புகளை சரிசெய்து, உள்நாட்டினருக்‍கு வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில், இந்த ஆண்டு இறுதிவரை இந்த உத்தரவு அமலில் இருக்‍கும் என அவர்…

மேலும்...