பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ரவிபிரகாஷ் மீனா கைது!

ஜெய்ப்பூர் (08 அக் 2022): பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ராஜஸ்தானை சேர்ந்த் அ31 வயது ரவிபிரகாஷ் மீனா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கரௌலி மாவட்டத்தில் உள்ள சபோதாரா பகுதியைச் சேர்ந்த ரவிபிரகாஷ் மீனா, டெல்லியில் உள்ள சேனா பவனில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு சமூக வலைதளங்கள் மூலம் இந்திய ராணுவ ரகசிய தகவல்களை கொடுத்துள்ளார். இதற்காக அவருக்கு பண பரிவர்த்தனைகள் நடந்துள்ளது. மேலும் பாகிஸ்தான் ஏஜெண்ட் அஞ்சலி திவாரி…

மேலும்...

இந்திய அமைச்சர் பியூஷ் கோயல் சவூதி அரேபியா வருகை!

ரியாத் (18 செப் 2022): இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் 2 நாள் பயணமாக சவுதி அரேபியா வந்துள்ளார். அமைச்சர் பியூஷ் கோயல் ரியாத்தில் சவுதி அரேபிய வர்த்தக அமைச்சர் மஜித் அப்துல்லா அல் கசாபியை சந்தித்தார். இந்தியா-சவுதி இருதரப்பு வர்த்தக உறவுகள் மற்றும் பரஸ்பர முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது. பியூஷ் கோயல் ஜுபைல் யாம்பு சவுதி ராயல் கமிஷன் தலைவர் காலித் அல்-சலீமுடன் கலந்துரையாடினார். பொருளாதார வளர்ச்சியை…

மேலும்...

துபாயிலிருந்து இந்தியா செல்பவர்களுக்கு அறிய வாய்ப்பு!

துபாய் (14 செப் 2022): ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியாவுக்குச் செல்லத் திட்டமிடுபவர்களுக்கு தற்போது நல்ல வாய்ப்பு . விமான நிறுவனங்கள் மிகக் குறைந்த கட்டணத்தை வசூலித்து வருகின்றன. இந்தியாவுக்கான விமானக் கட்டணம் 300 திர்ஹம்களுக்குக் கீழே விமான நிறுவனங்கள் வசூலிக்கின்றன. கோடை விடுமுறை முடிந்து டிக்கெட் விலை கணிசமாக குறைந்துள்ளதாக டிராவல் ஏஜென்ட்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் தீபாவளியையொட்டி இந்த மாத இறுதிக்குள் கட்டணம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு திரும்புவதற்கான…

மேலும்...

ஒன்றிய அரசுக்கு எதிராக நாடாளுமன்ற சுகாதாரக் குழு பரபரப்பு குற்றச்சாட்டு!

புதுடெல்லி (13 செப் 2022): இந்தியாவில் கோவிட் பாதிப்பால் அதிகமானோர் உயிரிழக்க ஒன்றிய அரசின் மெத்தனப்போக்கே கரணம் என்று நாடாளுமன்ற சுகாதாரக் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. நாடாளுமன்ற சுகாதார நிலைக்குழு தனது 137வது அறிக்கையினை திங்கள்கிழமை ராஜ்யசபாவில் தாக்கல் செய்தது. அதில் , “கோவிட்டால் உலகிலேயே மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது.கோவிட்-19 இன் இரண்டாவது அலையின் போது, ​​நாட்டின் சுகாதார அமைப்புகள் முற்றிலும் சீர்குலைந்தன. இதனால் கோவிட் பாதிப்பு அதிகரித்து இறப்புகள் அதிகரித்தன,…

மேலும்...

கத்தாரில் பள்ளி பேருந்தில் இந்திய சிறுமி மரணம்!

தோஹா (12 செப் 2022): கத்தாரில் பூட்டிய பள்ளிப் பேருந்தில் உள்ளே இந்திய சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் சிங்கவனத்தை சேர்ந்த அபிலாஷ் சாக்கோ என்பவரது மகள் மின்சா. இவர் கத்தார் அல்வக்ராவில் உள்ள ஸ்பிரிங் ஃபீல்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் கேஜி ஒன் பயின்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை குழந்தை பேருந்தில் தூங்குவதை கவனிக்காத ஊழியர்கள் மற்ற குழந்தைகளை பள்ளியில் இறக்கிவிட்டு பஸ்சை பூட்டினர். மதியம் தனது குழந்தைகளை வீட்டிற்கு…

மேலும்...

சவூதி அரேபியாவில் இந்திய கலாச்சார மையம் அமைப்பது குறித்து பரிசீலனை!

ரியாத் (11 செப் 2022): சவூதி அரேபியாவில் இந்திய கலாச்சார மையம் அமைப்பது குறித்து பரிசீலனை செய்வதாக இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர். எஸ்.ஜெயசங்கர் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக அமைச்சர் டாக்டர். எஸ்.ஜெயசங்கர் சவூதி அரேபியா வந்துள்ளார். சனிக்கிழமை மாலை ரியாத் இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சவூதியில் இந்திய கலாச்சார மையம் அமைப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது இந்தகோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று ஜெயசங்கர் பதிலளித்தார். வெளிவிவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய…

மேலும்...

காமன்வெல்த் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் ஹிஜாபி கராத்தே சாம்பியன்!

ஐதராபாத் (04 செப் 2022): ஐதராபாத்தைச் சேர்ந்த சையதா ஃபலாக் என்ற கராத்தே சாம்பியன், எதிர் வரும் செப்டம்பர் 11 ல் இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் கராத்தே சாம்பியன்ஷிப் 2022 போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ளார்.. ஃபலாக் தற்போது சுல்தான் உல் உலூம் கல்லூரியில் எல்எல்பி படித்து வருகிறார், அவர் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாத்-உல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சியின் உறுப்பினராகவும் உள்ளார். அவர் இதுவரை 20 தேசிய மற்றும் 22 சர்வதேச சாம்பியன்ஷிப்களை வென்றுள்ளார். ஃபலாக்…

மேலும்...

கொரோனா தடுப்பூசியால் மரணம் – மத்திய அரசு மற்றும் பிலகேட்ஸுக்கு நீதிமன்றம் நோட்டிஸ்!

மும்பை (03 செப் 2022): கொரோனா தடுப்பூசியால் பெண் மருத்துவர் உயிரிழந்ததாகவும் இழப்பீடு கோரி , உயிரிழந்த பெண்ணின் தந்தை அளித்த மனு குறித்து பதிலளிக்க ஒன்றிய அரசு, மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ), மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர், டிசிஜிஐ தலைவர் மற்றும் பலருக்கு மும்பை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மும்பையை சேர்ந்த திலீப் லுனாவத் என்பவர் அளித்த தனது மனுவில், “கோவிட்-19…

மேலும்...

பாஜக தலைவர்கள் கனடா நாட்டிற்குள் நுழைய தடை?

டொரோண்டோ (02 செப் 2022): பாரதிய ஜனதா கட்சியின் (BJP) பல முக்கிய தலைவர்களின் இஸ்லாமிய வெறுப்பு கருத்துகளை கண்டித்து அவர்கள் கனடாவில் காலடி வைப்பதை தடை செய்ய வேண்டும் என்று கனேடிய முஸ்லிம்களின் தேசிய கவுன்சில் (NCCM) கனடா அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. கனேடிய முஸ்லிம்களின் தேசிய கவுன்சில் (NCCM) வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் போன்ற பிற சிறுபான்மைக் குழுக்களுக்கு எதிராக இந்தியாவில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன….

மேலும்...

இந்திய சுதந்திர இயக்கம் முஸ்லிம்களால் ஆரம்பிக்கப்பட்டது -மவுலானா அர்ஷத் மதனி!

புதுடெல்லி (18 ஆக 2022): நாட்டின் சுதந்திரத்திற்காக அதிக தியாகம் செய்தவர்கள் எப்படி தேச விரோதிகளாக இருக்க முடியும் என்று ஜமியத் உலமா-இ-ஹிந்த் தலைவர் மௌலானா அர்ஷத் மதனி கூறினார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறுகையில் “இந்தியாவின் சுதந்திர இயக்கம் உலமாக்களாலும் முஸ்லிம்களாலும் ஆரம்பிக்கப்பட்டது; மேலும் இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான முதல் கிளர்ச்சிக் கொடி உலமாக்களால் உயர்த்தப்பட்டது,” என்று அவர் கூறினார். .மேலும் “சுதந்திரம் என்ற முழக்கத்தை முதலில் கொடுத்தவர்கள், இன்று துரோகிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்….

மேலும்...