Supreme court of India

தேர்தல் ஆணையத்திற்கு எந்த உரிமையும் இல்லை – உச்ச நீதிமன்றம் காட்டம்!

புதுடெல்லி (02 நவ 2020): கமல் நாத்தின் நட்சத்திர பிரசாரகர் உரிமையை பறிக்க தேர்தல் ஆணையத்திற்கு எந்த உரிமையும் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 3-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் தப்ரா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கடந்த வாரம் மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்….

மேலும்...

ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கிடையாது – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

புதுடெல்லி (26 அக் 2020): மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு கிடையாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் தொகுப்பிற்கு தமிழகத்திலிருந்து ஒதுக்கப்படக் கூடிய மருத்துவ இடங்களில் 50 சதவீதம் ஓ.பி.சி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் பிரதானமான கோரிக்கையாகும். இது தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட் இட ஒதுக்கீட்டை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தலாம் என்ற கருத்தை சொல்லி இருந்தனர். இதற்கிடையே,…

மேலும்...

சிறையிலிருக்கும் பத்திரிகையாளர் சித்திக் காப்பானை சந்திக்க வழக்கறிஞருக்கு அனுமதி மறுப்பு!

புதுடெல்லி (24 அக் 2020): உத்தரபிரதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் சித்திக் கப்பனை சந்திக்க மதுரா சிறை அதிகாரிகளும் நீதிமன்றமும் அனுமதிக்கவில்லை என்று சித்திக்கின் வழக்கறிஞர் வில்ஸ் மேத்யூஸ் தெரிவித்துள்ளார். ஹத்ராஸ் கற்பழிப்பு குறித்து புகார் தகவல் சேகரிக்க உத்தரபிரதேசத்தில் இருந்த சித்திக் கப்பன், யுஏபிஏ மற்றும் தேசத்துரோக குற்றச்சாட்டில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சித்திக் கேரள பத்திரிகையாளர்கள் சங்கத்தின் டெல்லி பிரிவு செயலாளர் ஆவார் இந்நிலையில் சித்திக் காப்பானை சந்திக்க மறுப்பது…

மேலும்...
Tabligh Jamath

தப்லீக் ஜமாஅத்-கொரோனா பரவல் வழக்கு:மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

புதுதில்லி (10 அக் 2020):நமது நாட்டில் அதிகம் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட ஒன்றாக பேச்சுச் சுதந்தரம் இருக்கலாம் என உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் ஆரம்பித்த வேளையில, புதுதில்லி தப்லீக் ஜமாஅத் மாநாட்டுடன் கொரோனாவை தொடர்புபடுத்தி ஊடகங்களில் அவதூறு செய்தி வெளியானது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், தில்லியில் நடைபெற்ற மாநாட்டை கொரோனா பாதிப்புக்கான களம் என்று சித்தரித்து, நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள்…

மேலும்...
Supreme court of India

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி.உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

புதுடெல்லி (28 செப் 2020): வேளாண் சட்டங்களை எதிர்த்து கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. டி.என்.பிரதாபன் உச்சநீதிமன்றத்தில் வழக்‍கு தொடர்ந்துள்ளார். நாடாளுமன்ற இரு அவைகளிலும், எதிர்க்‍கட்சிகளின் கடும் எதிர்ப்புக்‍கு இடையே வேளாண் மசோதாக்‍கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்தார். இந்த சட்டங்களுக்‍கு எதிரான விவசாயிகளின் போராட்டம் நாடு தழுவிய அளவில் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசு நிறைவேற்றி உள்ள 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து…

மேலும்...

பிரசாந்த் பூஷணுக்கு செம தண்டனை!

புதுடெல்லி (31 ஆக 2020): கோர்ட் அவமதிப்பு வழக்கில் பிரசாநத் பூஷணுக்கு ஒரு ரூபாய் தண்டனை வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே ஹார்லி டேவிட்ஸன் பைக்கில் அமர்ந்தவாறு கடந்த ஜூன் மாதம் ஒரு புகைப்படம் எடுத்திருந்தார். அந்தப் படம் குறித்து பிரசாந்த் பூஷண், முகக்கவசம், ஹெல்மெட் இல்லாமல் அமர்ந்த தலைமை நீதிபதி என்று டுவிட்டரில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் விமர்சித்தார். மேலும் நீதித்துறையின் செயல்பாடுகள் கடந்த 6 வருடங்களாக…

மேலும்...

என் மனசாட்சிக்கு துரோகம் செய்ய முடியாது – பிரசாந்த் பூஷண் திட்டவட்டம்!

புதுடெல்லி (24 ஆக 2020): மன்னிப்பு கேட்க முடியாது என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற வழக்குரைஞரும் சமூக செயற்பாட்டாளருமான பிரசாந்த் பூஷணின் ட்விட்டர் பதிவு தொடர்பாக அவர் மீது இந்திய உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என்று 14ம் தேதி தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். ஆனால், உடனடியாக அவருக்கு தண்டனை அறிவிக்கப்படவில்லை. அவருக்கு தண்டனை அறிவிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதங்களின்போது அவர்…

மேலும்...
Supreme court of India

நீதித்துறைக்கு சவக்குழி தோண்டப்பட்டுள்ளது – உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்!

புதுடெல்லி (21 ஆக 2020): பேச்சுரிமை, கருத்துரிமைகள் மறுக்கப்படடுகின்றன. என்று பிரஷாந்த் பூஷன் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, இருசக்கர சொகுசு வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் அமர்ந்திருந்த படம் ஒன்று வெளியானது. இதனை தமது சமூக வலைதளப் பக்கங்களில் பிரசாந்த் பூஷன் கடுமையாக விமர்சித்திருந்தார். இதேபோல் நீதித்துறை, முன்னாள் நீதிபதிகளை பிரசாந்த் பூஷன் தொடர்ந்து விமர்சித்து வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து…

மேலும்...

தமிழக அமைச்சரவையை உடனடியாக கூட்ட வேண்டும் – ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை!

சென்னை (18 ஆக 2020): ஸ்டெர்லைட் வழக்கில் மக்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ள நிலையில், முழுத் தீர்ப்பினையும் அமைச்சரவை முன்பு வைத்து தீர்ப்பை வரவேற்று ஒரு அமைச்சரவைத் தீர்மானமாகவே வெளியிட வேண்டும்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது” என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துள்ள மகத்தான- மனிதகுலத்தினைக் காப்பாற்றிடும் தீர்ப்பாகும். சுற்றுப்புறச்சூழலுக்கும் – தங்களின்…

மேலும்...

பூரி ஜகந்நாதர் ஆலய ரதயாத்திரைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி!

புதுடெல்லி (22 ஜூன் 2020): ஒடிசா மாநிலம் பூரியில் ஜகந்நாதர் கோயில் ரதயாத்திரைக்கு நிபந்தனையுடன் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஒடிஷா மாநிலத்தின் கடற்கரை நகரான பூரியில் புகழ்பெற்ற ஜகந்நாதர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் புது தேர் செய்யப்பட்டு தேரோட்டம் நடப்பது பொது வழக்கம். இந்த ரத யாத்திரை கோவிலில் இருந்து கிளம்பி 2 KM தூரத்தில் உள்ள மவுசிமா என்னும் இவர்கள் அத்தை கோவில் வரை செல்லும். அங்கு 9 நாள் தங்கி இருந்து…

மேலும்...