படுத்தபடி வாதிட்ட வழக்கறிஞர் – கண்டித்த உச்ச நீதிமன்ற நீதிபதி!

புதுடெல்லி (21 ஜூன் 2020): உச்ச நீதிமன்ற விசாரணை ஒன்றில் ஆன்லைன் விசாரணையில் வழக்கறிஞர் ஒருவர் கட்டிலில் படுத்தபடி ஆஜரானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக நீதிமன்ற விசாரணைகள் காணொலி காட்சி மூலம் நடந்து வருகிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் நடத்திய காணொலி காட்சி அமர்வு ஒன்றில் வழக்கு விசாரணைக்கு ஆஜரான வழக்கறிஞர் ஒருவர் ‘டி-சர்ட்’ அணிந்தவாறு கட்டிலில் சாய்ந்து படுத்து கொண்டு வாதாடினார். இதனால் ஆத்திரம் அடைந்த நீதிபதி எஸ்.ரவீந்திர பட், “நாம்…

மேலும்...

சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்யப்படுமா? – உச்ச நீதிமன்றத்தில் மனு!

புதுடெல்லி (12 ஜூன் 2020): சிபிஎஸ்இ தேர்வை ரத்து செய்யக் கோரி, மாணவர்களின் பெற்றோர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகள் பாதியில் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், வருகிற ஜூலை 1ம் தேதி முதல் மீதமுள்ள தேர்வுகள் நடத்தப்படும் என கடந்த மாதம் 18ம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. அரசின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் பெற்றோர்கள் நேற்று வழக்கு…

மேலும்...

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஊருக்கு அனுப்ப 15 தினங்கள் போதும் – உச்ச நீதிமன்றம்!

புதுடெல்லி (05 ஜூன் 2020): லாக்டவுனால் ஊருக்கு செல்ல முடியாமல் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரையும் அவரவர்கள் ஊருக்கு அனுப்ப 15 தினங்கள் போதுமானது என்று மத்திய மாநில அரசுகளிடம் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவலநிலை குறித்து ஒரு பொதுநல மனு மீதான விசாரணை நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.கே.க ul ல் மற்றும் எம்.ஆர் ஷா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிமன்றம், “நாங்கள் என்ன செய்ய விரும்புகிறோம்…

மேலும்...

மது கடைகளில் மது விற்பனைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!

புதுடெல்லி (08 மே 2020) மது விற்பனையை மது கடைகளில் விற்காமல் ஆன்லைன் மூலம் மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட மதுக்கடைகள் சுமார் 40 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாநில மதுபானக் கடைகளிலும் குடிகாரர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கிடையில் மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் போராட்டத்தில் குதித்துள்ளன. இந்த நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் மதுவிற்பனையை தடைசெய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல…

மேலும்...

அர்னாப் கோஸ்வாமி மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தடை!

புதுடெல்லி (24 ஏப் 2020): தனியார் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ய உச்ச நீதிமன்றம் மூன்று வாரகால இடைக்கால தடை விதித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பால்கரில், சாமியார்கள் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் திருமதி சோனியா காந்தியை அவதூறாக பேசியதாக, தனியார் தொலைக்காட்சி ஆசிரியர் திரு. அர்னாப் கோஸ்வாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தாக்கியதாக, திரு. அர்னாப் கோஸ்வாமியும் புகாரளித்தார். இந்நிலையில்,…

மேலும்...

கொரோனாவுக்கு இலவச பரிசோதனை குறித்த உத்தரவில் உச்ச நீதிமன்றம் திடீர் மாற்றம்!

புதுடெல்லி (14 ஏப் 2020): கொரோனாவுக்கு பரிசோதனை செய்ய முன்வரும் எல்லோருக்கும் இலவச பரிசோதனை கிடையாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்து சோதனை செய்வதற்கு தற்போது வரை 157 அரசு ஆய்வகங்களில் சோதனை செய்யப்படுகிறது. அதே போல 67 தனியார் ஆய்வகங்களுக்கு கொரோனா சோதனை செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கொரோனா சோதனைக்கான கட்டணமாக 4,500 ரூபாயை மத்திய அரசு நியமித்தது. தனியார் ஆய்வகங்களிலும் கொரோனா சோதனையை இலவசமாக…

மேலும்...

முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரம் – ஊடகங்களுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி (14 ஏப் 2020): தப்லீக் ஜமாஅத் விவகாரத்தில் இப்போதைக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் அதி வேகமாக பரவி வருகிறது. ஜனவரியின் இறுதியிலேயே இந்தியாவில் கொரோனா நுழைந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், மார்ச் இறுதி வாரங்களிலேயே இந்திய அரசு இவ்விவகாரத்தில் விழித்துக் கொண்டு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியது. ஆனால் மார்ச் இரண்டாவது வாரங்களில் கூடிய டெல்லி தப்லீக் ஜமாஅத் கூட்டம் குறித்து மட்டுமே…

மேலும்...

தப்லீக் ஜமாஅத் மீது அவதூறு – உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

புதுடெல்லி (09 ஏப் 2020): தப்லீக் ஜமாஅத் மீது பொய்யான தகவல்களை பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப் பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் அதி வேகமாக பரவி வருகிறது. ஜனவரியின் இறுதியிலேயே இந்தியாவில் கொரோனா நுழைந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், மார்ச் இறுதி வாரங்களிலேயே இந்திய அரசு இவ்விவகாரத்தில் விழித்துக் கொண்டு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியது. ஆனால் மார்ச் இரண்டாவது வாரங்களில் கூடிய டெல்லி…

மேலும்...

பட்டும் திருந்தாத யோகி ஆதித்யநாத் அரசு – உச்ச நீதிமன்றம் சாடல்!

புதுடெல்லி (12 மார்ச் 2020): அலகாபாத் நீதிமன்றத்தை அடுத்து யோகி ஆதித்யநாத் அரசின் எல்லை மீறிய செயலுக்கு உச்ச நீதிமன்றமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி பலரது புகைப்படங்களையும், அவர்களது வீட்டு முகவரிகளையும், உத்திர பிரதேசத்தின் பல இடங்களில் யோகி அரசு பதாகைகளாக அமைத்துள்ளது. இதை எதிர்த்து அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், யோகி அரசை கடுமையாகச் சாடியுள்ளது மட்டுமின்றி இது தனிமனித…

மேலும்...

பாபர் மசூதி தீர்ப்பை எதிர்த்து பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

புதுடெல்லி (08 மார்ச் 2020): பாபர் மசூதி – ராமர் கோவில் தொடர்பான தீர்ப்பை எதிர்த்து பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என கடந்த நவம்பர் 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் பாபர் மசூதி கட்ட வேறு இடத்தில் இடம் ஒதுக்க உபி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து பாப்புலர்…

மேலும்...