பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே சவால்!

மும்பை (26 அக் 2020): துணிவிருந்தால் எங்கள் அரசை கவிழ்த்துப் பாருங்கள் என்று பாஜகவுக்கு மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே சவால் விட்டுள்ளார். சிவசேனா கட்சியின் சார்பில் தசரா பேரணி மும்பை தாதர் பகுதியில் சிறிய அரங்கில் நேற்று நடந்தது. கொரோனா வைரஸ் காரணமாக மிகப்பெரிய அளவில் சிவாஜி பார்க்கில் திறந்த வெளியில் நடத்தப்படாமல் சிறிய அளவிலேயே நடத்தப்பட்டது. இந்த தசரா பேரணியில் சிவசேனா தலைவரும், மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரே பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:…

மேலும்...

நமஸ்தே ட்ரம்ப் நிகழ்வுதான் இந்தியாவில் கொரோனா பரவ காரணம் – சிவசேனா குற்றச்சாட்டு!

மும்பை (31 மே 2020): பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வைத்து அகமதாபாத்தில் நடைபெற்ற நமஸ்தே ட்ரம்ப் நிகழ்வு, குஜராத்திலும் மும்பை மற்றும் டெல்லியிலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணம் என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் குற்றம் சாட்டியுள்ளார். எந்தவொரு திட்டமும் இல்லாமல் ஊரடங்கை செயல்படுத்தியது மத்திய அரசு ஆனால் இப்போது மாநிலங்களை குற்றம் சாட்டுகிறது என்று ராவத் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் நடைபெறும் விகாஸ் அகாடி அரசை டிஸ்மிஸ் செய்ய மத்திய அரசு…

மேலும்...

மும்பையிலும் டெல்லி கலவரம் போல் நடத்த பாஜக விருப்பம் – சிவசேனா குற்றச்சாட்டு!

மும்பை (11 மார்ச் 2020): மும்பையிலும் டெல்லியைப் போல் கலவரம் நடத்த பாஜக விரும்பியதாக சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது. உத்தவ் தாக்கரே அயோத்தி பயணம் மேற்கொண்டதையும், ராமர் கோவில் கட்ட ரூ 1 கோடி நன்கொடை வழங்கியதையும் பாஜக விமர்சித்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிவசேனாவின் பத்திரிகையான சாம்னா பதிலளித்துள்ளது. இதுகுறித்து அதில் கூறப்பட்டிருப்பதாவது: உத்தவ் தாக்கரே அயோத்தி சென்றதற்கு பா.ஜனதாவினர் மகிழ்ச்சி தான் அடைந்திருக்க வேண்டும். ஆனால் பா.ஜனதாவினரால் உத்தவ் தாக்கரே அயோத்தி…

மேலும்...

இந்துத்வாவிற்கு மீண்டும் திரும்பிய உத்தவ் தாக்கரே!

லக்னோ (11 மார்ச் 2020): இந்துத்வாவை விட்டு நான் விலகவில்லை என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்து மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடித்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ 1 கோடியை நன்கொடையாக வழங்கினார். இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்த உத்தவ் தாக்கரே, ” இது மகாராஷ்டிர அரசு பணம் அல்ல, இது எனது அறக்கட்டளையிலிருந்து தரப்பட்டுள்ள…

மேலும்...

குடியுரிமை சட்ட விவகாரம் – உத்தவ் தாக்கரே- மோடி, சோனியா காந்தி திடீர் சந்திப்பு!

புதுடெல்லி (21 பிப் 2020): மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பிரதமர் மோடி, மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்திக்கவுள்ளார். குடியுரிமை சட்டம் காரணமாக நாடெங்கும் போராட்டம் வெடித்துள்ள நிலையிலும், பல்வேறு மாநிலங்களில் இச்சட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் சிவசேனாவின் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கடசிகள் மகாராஷ்டிராவிலும் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையே சிஏஏ குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை என உத்தவ் தாக்கரே சமீபத்தில்…

மேலும்...

டெல்லியில் தோல்வி அடைந்தும் திருந்தவில்லையா? – மோடிக்கு உத்தவ் தாக்கரே அட்வைஸ்!

மும்பை (18 பிப் 2020): “குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெறப் போவதில்லை என்று திரும்ப திரும்பகூறுவதால் கைதட்டல் கிடைக்கலாம் ஆனால் ஓட்டு கிடைக்காது” என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். வாரணாசியில் பேசிய பிரதமர் மோடி, “எத்தனை அழுத்தங்கள் வந்தாலும், சிஏஏ, காஷ்மீர் மீதான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது குறித்து திரும்ப திரும்பபெறப்போவதில்லை” என்று தெரிவித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, ” நாட்டில் பல விவகாரங்கள் உள்ளன. அதில் கவனம் செலுத்துங்கள்….

மேலும்...

மக்களுக்கு மன் கி பாத் தேவையில்லை – மோடி மீது உத்தவ் தாக்கரே தாக்கு!

மும்பை (11 பிப் 2020): மக்களுக்கு ‘மன் கி பாத் தேவையில்லை, ஜான் கி பாத் தான் அவசியம்’ என்று டெல்லி தேர்தல் முடிவு குறித்து உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளதோடு, ஆம் ஆத்மி 62 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. இந்த நிலையில், டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து மகாராஷ்டிரத்தின் முதல்வரும், சிவசேனை கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ள கருத்தில், ‘டெல்லி…

மேலும்...

பாஜக மீது விசாரணை – உத்தவ் தாக்கரே உத்தரவு!

மும்பை (24 ஜன 2020): முந்தைய பாஜக ஆட்சியில் பல தலைவர்களின் போன் பேச்சுக்கள் ஓட்டுக் கேட்கப் பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். முந்தைய பாஜக ஆட்சியில் நான் உட்பட பல தலைவர்களின் போன் பேச்சுக்கள் ஓட்டுக் கேட்கப் பட்ட டுள்ளது என்று , சிவசேனா மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் தெரிவித்தார். இது மகாராஷ்டிர அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது. இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “மஹாராஷ்டிராவில், கடந்த,…

மேலும்...

கேரளா பஞ்சாபை தொடர்ந்து மகாராஷ்டிரா அரசு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அதிரடி முடிவு!

மும்பை (19 ஜன 2020): கேரளா பஞ்சாபை தொடர்ந்து மகாராஷ்டிர அரசும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற ஆலோசித்து வருகின்றது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், “இந்த சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தமாட்டோம்!” என கேரளா ஏற்கனவே அறிவித்தது. அதன்படி சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றி உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது. கேரளாவை தொடர்ந்து பஞ்சாப் அரசும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது. தற்போது மூன்றாவது மாநிலமாக…

மேலும்...

ஷீரடி சாய்பாபா கோவில் மூடப்படுவது உண்மையா? – கோவில் நிர்வாகி விளக்கம்!

மும்பை (18 ஜன 2020): ஞாயிற்றுக்கிழமை முதல் காலவரையறையின்றி மூட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல்களை வதந்தி எனக் கோவில் நிர்வாகம் மறுத்துள்ளது. ஷீரடி சாயிபாபா பிறந்த இடம் பர்பனி மாவட்டம் பத்ரி என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவிலை மூடப் போவதாக செய்திகள் வெளியாகின. இதனிடையே, ஷீரடி சாய்பாபா கோவில் மூடப்படமாட்டாது என்று தெளிவுபடுத்த விரும்புவதாக சாயிபாபா கோவிலின் தலைமைச் செயல் அலுவலர் தீபக் முக்லிகர்…

மேலும்...