குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு – மருத்துவமனைக்கு சீல்!

அலகாபாத் (09 மார்ச் 2020): உத்திர பிரதேசத்தில், கணவர் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவரது மனைவியின் மருத்துவமனைக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். டாக்டர் மாதவி என்பவர் ஸ்கேன் பரிசோதனை செய்யும் மருத்துவமனை வைத்துள்ளார். இவரது கணவர் ஆஷிஷ், அகில இந்திய கிஷான் மஜூர் சபாவின் செயலாளராக உள்ளார். இவர் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கு ஆதரவாக இருந்துள்ளார். இதனை அடுத்து அவரது மனைவியின் மருத்துவமனைக்கு ஞாயிறன்று சோதனை என்ற பெயரில் சென்ற போலீசார், டாக்டர் மாதவியின்…

மேலும்...

யோகி ஆதித்யநாத் அரசுக்கு அலகாபாத் நீதிமன்றம் குட்டு!

உத்திர பிரதேசத்தை ஆளும் யோகி ஆதித்யநாத் அரசின் எல்லை மீறிய செயலுக்கு அலகாபாத் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி பலரது புகைப்படங்களையும், அவர்களது வீட்டு முகவரிகளையும், உத்திர பிரதேசத்தின் பல இடங்களில் யோகி அரசு பதாகைகளாக அமைத்துள்ளது. இதை எதிர்த்து அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், யோகி அரசை கடுமையாகச் சாடியுள்ளது மட்டுமின்றி இது தனிமனித சுதந்திரத்தில் தலையிடும் அநாகரீகமான செயல்…

மேலும்...

பாலியல் குற்றவாளியான பாஜக எம்.எல்.ஏ கொலை குற்றவாளி என்றும் நீதிமன்றம் தீர்ப்பு!

புதுடெல்லி (04 மார்ச் 2020): உன்னாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் தந்தையை கொலை செய்ததும் முன்னாள் பா.ஜ., தலைவர் குல்தீப்சிங் செங்கார் தான் என்று டெல்லி நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. உன்னாவ் சட்டமன்ற உறுப்பினரான பாஜகவை சேர்ந்த குல்தீப் சிங் சேங்கர் வீட்டுக்கு வேலைக்கு சென்ற 19 வயது இளம் பெண் ஒருவர், தம்மை சேங்கர் வன்புணர்வு செய்ததாக 2017-ல் குற்றச்சாட்டு வைத்தார். இந்நிலையில் ஆயுதம் வைத்திருந்ததாக அந்தப் பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டார். இந்த…

மேலும்...

மத ஒற்றுமைக்காக திருமண அழைப்பிதழை வித்தியாசமாக அச்சடித்த முஸ்லிம்!

மீரட் (02 மார்ச் 2020): மத ஒற்றுமைக்காக திருமண பத்திரிகையை வித்தியாசமாக அச்சடித்துள்ளார் முஸ்லிம் ஒருவர். மீரட் நகரைச் சேர்ந்த முஸ்லிம் நபர் தனது மகள் திருமணத்துக்காக அச்சடித்த திருமணப் பத்திரிகையில் ராதாகிருஷ்ணர், பிள்ளையார் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. மார்ச் 4ம் தேதி ஹஸ்தினாபுரத்தைச் சேர்ந்த மொஹ்ம்மது சராஃபத் மகள் அஸ்மா கட்டூனுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணப் பத்திரிகைதான் மேற்சொன்ன இந்துக் கடவுள்களின் புகைப்படங்களுடன் அச்சடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மொஹ்ம்மது சராஃபத் கூறுகையில், இந்து –…

மேலும்...

என் கணவரின் உயிருக்கு ஆபத்து – டாக்டர் கபீல்கான் மனைவி தலைமை நீதிபதிக்கு கடிதம்!

லக்னோ (01 மார்ச் 2020): “என கணவரின் உயிருக்கு ஆபத்து உள்ளது” என்று டாக்டர் கஃபீல்கான் மனைவி சபிஸ்தா கான், அலஹாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். கோராக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல குழந்தைகள் உயிரிழந்தன. ஆனால், டாக்டர் கபீல்கான் தன் சொந்த பணத்தில் ஆக்சிஜன் வாங்கி பல குழந்தைகளின் உயிர்களை காப்பாற்றினார். கபீல்கானின் நடவடிக்கையால் எனினும் அவர் மீது பழி சுமத்தி வேலையை விட்டு நீக்கியது யோகி ஆதித்யநாத் அரசு மேலும் அவரை…

மேலும்...

CAA எதிர்ப்பு போராட்ட வன்முறை – போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

லக்னோ (25 பிப் 2020): உத்திர பிரதேசத்தில் நடைபெற்ற குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் தாக்குதலில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தின்போது அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் போலீசார் நடத்திய கொலை வெறி தாக்குதலை தொடர்ந்து உத்திர பிரதேசத்தில் பலர் உயிரிழந்தனர். அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழக மாணவர்கள் பலர் படுகாயம் அடைந்தனர். போலீசாரே முன்னின்று நடத்திய இந்த வன்முறையில் பல வாகனங்கள்,…

மேலும்...

பாலியல் வழக்கில் தொடர்ந்து சிக்கும் பாஜக பிரபலங்கள் !

லக்னோ (20 பிப் 2020): பாலியல் வழக்கில் இன்னொரு பாஜக பிரபலம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்திர பிரதேசம் படேஹி காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். அதில் “என் கணவர் கடந்த 2007 ஆம் ஆண்டு காலமாகிவிட்டார். என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாஜக எம்.எல்.ஏ ரவீந்திரநாத் திரிபாதியின் மருமகன் என்னை பல வருடங்கள் ஏமாற்றி வந்தார். மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு உ.பி தேர்தலின்போது என்னை ஒரு ஹோட்டலில்…

மேலும்...

சாக வேண்டும் என்றே வீதிக்கு வருகிறார்கள் – யோகி ஆதித்யநாத்தின் விஷம் கக்கும் பேச்சு!

லக்னோ (19 பிப் 2020): குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்துக்கு வருபவர்கள் சாகுவதற்காகவே வருகிறார்கள் என்று உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கொடூரமாக பேசியுள்ளார். மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் 2 மாதங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்களில் மட்டும் 22 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இதில் பலர் போரட்டங்களில் கலந்து கொள்ளாத அப்பாவி மக்களும் அடங்குவர். உத்திர பிரதேசத்தில் கொல்லப்பட்டவர்கள் யாரும்…

மேலும்...

பாலியல் வன்புணர்வு வழக்கில் பாஜக எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு!

லக்னோ (19 பிப் 2020): உத்திர பிரதேசம் மாநிலம் பாஜக எம்.எல்.ஏ உள்ளிட்ட ஆறு பேர் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்திர பிரதேசம் படேஹி காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். அதில் “என் கணவர் கடந்த 2007 ஆம் ஆண்டு காலமாகிவிட்டார். என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாஜக எம்.எல்.ஏ ரவீந்திரநாத் திரிபாதியின் மருமகன் என்னை பல வருடங்கள் ஏமாற்றி வந்தார். மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு…

மேலும்...

சிஏஏ போராட்டத்தில் போலீஸாரால் கொல்லப்பட்டவர்கள் குடும்பத்தினர் போலீஸ் மீது வழக்குப்பதிவு!

மீரட் (17 பிப் 2020): உத்திர பிரதேசம் மீரட்டில் சிஏஏ போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் குடும்பத்தினர் போலீஸ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில், கடந்த டிசம்பர் 20ம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. 13 மாவட்டங்களைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் மதியம் மசூதிகளில் தொழுகையை முடித்தபின், தடையை மீறி போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலிஸார் கற்களை வீசியும், தடியடி நடத்தியும்…

மேலும்...