பசுமாட்டை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் – நீதிமன்றம் தீர்ப்பு!

லக்னோ (01 செப் 2021): பசுமாட்டை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்றும், பசு பாதுகாப்பு அடிப்படை உரிமை என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் மாடு அறுத்ததாக கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம் முதியவரின் ஜாமீன் மனுவை ரத்து செய்த அலகாபாத் உயர் நீதிமன்றம் .பசுவை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் மற்றும் அதன் பாதுகாப்பு இந்து சமூகத்தின் அடிப்படை உரிமைகளின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்…

மேலும்...

சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி – அசாதுத்தின் உவைஸி கட்சி மறுப்பு!

லக்னோ (25 ஜூலை 2021): எதிர்வரும் உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைப்பதாக வெளியான செய்திகளை எய்ஐஎம் மறுத்துள்ளது. கட்சியின் உபி மாநிலத் தலைவர் சவுக்கத் அலி இதனை தெறிவித்துள்ளார். உத்திர பிரதேசத்தில் எதிர் வரும் சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில் சமாஜ்வாடி கட்சியுடன் எய்ஐஎம் கூட்டணி வைப்பதாக வெளியான தகவலை அக்கட்சி மறுத்துள்ளது. “சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்தால் அகிலேஷ் யாத, வ் முஸ்லிம் தலைவரை துணை முதல்வராக்குவார்…

மேலும்...

கோவிலுக்கு வாட்டர் கூலர் அன்பளிப்பு வழங்கிய முஸ்லீம் – அடித்து நொறுக்கிய பஜ்ரங் தள் அமைப்பினர்!

அலிகார் (01 ஜூலை 2021): கோயிலுக்கு முஸ்லீம் ஒருவர் நன்கொடை அளித்த வாட்டர் கூலரில் உள்ள முஸ்லீம் பெயர் அடங்கிய தகடுகளை அடித்து நொறுக்கியவர்கள் மீது, கோயில் குழு அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். உத்திரப் பிரதேசம் அலிகரில் உள்ள ஒரு கோவிலுக்கு அப்பகுதி சமாஜ்வாடி கட்சித் தலைவர் சல்மான் ஷாஹித் வாட்டர் கூலரை அன்பளிப்பாக வழங்கினார். அதில் சல்மான் ராஷித் பெயர் பொறிக்கப் பட்டிருந்தது. சமீபத்தில் கோவிலுக்குள் நுழைந்த பஜ்ரங் தள் அமைப்பினர் சிலர், ஒரு முஸ்லீம்…

மேலும்...

மசூதி மினாரா இடிப்பு – மர்ம நபர்கள் வெறிச்செயல்!

மதுரா (24 ஜூன் 2021): உத்தரப் பிரதேசத்தின் மதுராவில் உள்ள ஒரு மசூதியின் மினாரா, மர்ம நபர்களால் இடிக்கப் பட்டுள்ளது. உத்திரப் பிரதேசம் மதுரா மாவட்டத்தின் சாட்டா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள மசூதி மினாராவை புதன்கிழமை அதிகாலை மர்ம நபர்கள் இடித்துள்ளனர். உள்ளூர்வாசிகள் அளித்த தகவலை அடுத்து கிராமத் தலைவர் அளித்த புகாரின் அடிப்படையில் உள்ளூர் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக (மதுரா கிராமப்புற) போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஷ் சந்திரா கூறினார். “இச்சம்பவத்தை…

மேலும்...

மதம் மாற்றிய குற்றச்சாட்டில் முஸ்லிம் மதகுருக்கள் கைது!

புதுடெல்லி (22 ஜூன் 2021): இஸ்லாமிய மதத்திற்கு மாறியதாக முஸ்லிம் மதகுரு இருவரை டெல்லியில் உ.பி. போலீசார் சர்ச்சைக்குரிய மதமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைது கைது செய்துள்ளனர் கைதான முப்தி காசி ஜஹாங்கிர் ஆலம் காசிமி, 52, மற்றும் உமர், 57, ஆகியோரால் நடத்தப்படும் இஸ்லாமிய தாவா மையத்தின் மூலம் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பெரிய அளவிலான மாற்றங்கள் நடந்ததாக போலீசார் குற்றம் சாட்டுகின்றனர். இவர்களில் உமர் சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமிற்கு மாறியவர். பணம்,…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த களமிறங்கும் விவசாயிகள்!

லக்னோ (13 ஜூன் 2021): உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பாஜக பெரிய சரியை சந்திக்கும் என்று அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். நடைபெற உள்ளது. பாஜக ஆட்சி நடப்பதால் பல்வேறு மாநில மக்களும் இந்த தேர்தலை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உத்தர பிரதேசமும் ஒன்று. அங்கு மருத்துவ கட்டமைப்புகள் சரியில்லை என்று பாஜகவினரே குற்றம் சாட்டும் அளவுக்கு மோசமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மாநிலமான…

மேலும்...

ஆற்றில் வீசப்பட்ட கொரோனவால் உயிரிழந்த உடல்!

லக்னோ (30 மே 2021): உத்திர பிரதேசம் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடல் ஆற்றில் வீசப்பட்ட ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோவில் பாதுகாப்பு உடை அணிந்த இரண்டு ஆண்கள், ராப்தி ஆற்றில் இறந்த உடனை வீசுவது தெளிவாக உள்ளது அந்த உடல் கொரோனாவால் உயிரிழந்தவருடையது என்பதை பால்ராம்பூரின் தலைமை மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே உத்திர பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழந்த ஆயிரக்கணக்கான உடல்கள் கங்கையில்…

மேலும்...

கொத்து கொத்தாக எரியும் சடலங்கள் – வைரலாகும் பரபரப்பு வீடியோ!

காசிப்பூர் (16 மே 2021): உத்தரப்பிரதேசத்தில் ஒரு மயானத்தில் கொரோனா பாதித்து இறந்தோரின் உடல்கள்கொத்து கொத்தாக எரிக்கப்படும் வீடியோ வைரலாகி வருகிறது இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. தினந்தோறும் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லை. இதனால் மருத்துவமனை வாயிலிலேயே நோயாளிகள் இறக்கும் நிலை வடமாநிலங்களில் ஏற்படுகிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கங்கை நதிக்கரையோரத்தில் சடலங்கள் மிதப்பதாக செய்திகள்…

மேலும்...

சித்திக் கப்பன் சிகிச்சையை உபியிலிருந்து டெல்லிக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (28 ஏப் 2021): பிரபல மலையாள பத்திரிகையாளரான சித்திக் கப்பனின் சிகிச்சையை உத்திர பிரதேசத்திலிருந்து டெல்லிக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்திர பிரதேசத்தில் ஹத்ராஸ் பாலியல் குற்றம் தொடர்பான செய்திகளை சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் சித்திக் காப்பான் உபி அரசால் கைது செய்யப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவதியுறுகிறார். இந்நிலையில் சித்திக் கப்பனை சிகிச்சைக்காக எய்ம்ஸ் அல்லது ஆர்.எம்.எல் மருத்துவமனைக்கு மாற்ற. சித்திக் கப்பனின் சிகிச்சை உ.பி.க்கு…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் கோவிட் தடுப்பூசி வழங்கலில் அதிர்ச்சி!

லக்னோ (09 ஏப் 2021): உத்திர பிரதேசத்தில் கோவிட் தடுப்பூசி பெற வந்த மூன்று பெண்களுக்கு அம்மை நோய்க்கு தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 60 வயதையொத்த சரோஜ், அனார்கலி மற்றும் சத்தியாவதி ஆகிய மூன்று பெண்களுக்கு கோவிட் தடுப்பூசிக்கு பதிலாக அம்மை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஊசி பெற்றவர்களிடம் ஆதார் தகவல்கள் எதுவும் பெறாமல் தடுப்பூசி போட்டதாகவும் தடுப்பூசி பெற்ற பின்னர் சில அசவுகரியங்கள் ஏற்பட்டதை அடுத்து ஊசி பெற்றவர்கள் தெரிவித்ததை அடுத்து இவ்விவகாரம்…

மேலும்...