போலீசாரால் அடித்து நொறுக்கப்படும் தினக்கூலி காய்கறி வண்டி – ஏழைகளுக்கு மட்டும்தான் சட்டமா?

மும்பை (19 ஏப் 2020): மும்பையில் தினக்கூலி காய்கறி வண்டி ஒன்று மும்பை போலீசாரால் அடித்து நொறுக்கப்படும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதி வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க வரும் மே 3 ஆம் தேதி வரை நாடெங்கும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனினும் இந்த ஊரடங்கால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை கூலி தொழிலாளிகள்தான். அவர்களுக்கு தினமும் தொழில் செய்து அல்லது வேலை செய்து…

மேலும்...

ஏப்ரல் 20 க்குப் பிறகு ஊரடங்கில் சில தளர்வுகள்!

புதுடெல்லி (15 ஏப் 2020): கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஏப்ரல் 20-க்கு பிறகு சில கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி மே 3 வரை கீழ்காணும் நிபந்தனைகளை மத்திய அரசு விதித்துள்ளது. மேலும் ஏப்ரல் 20க்கு பிறகு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என்றும், ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு…

மேலும்...

மோடியை மீண்டும் சீண்டிய கமல்!

சென்னை (15 ஏப் 2020): மும்பையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல், மோடி அரசையும் விமர்சனம் செய்துள்ளார். நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தொடர்ந்து மத்திய மாநில அரசுகளை விமர்சித்து வருகிறார். அந்த வகையில் மோடி சமீபத்தில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நன்றி கூறும் விதமாக வீட்டின் முகப்பில் நின்று கைத்தட்டச் சொன்னார். பால்கனியில் அகல் விளக்குகளை ஏற்றி வைத்து ஒற்றுமையை நிலைநாட்டுமாறு கேட்டுக்கொண்டார். இதுகுறித்து கமல்ஹாசன் மோடி அரசை…

மேலும்...

அத்தியாவசிய பொருட்களுக்கு கூட அனுமதி இல்லை – கோவையில் அதிரடி!

கோவை (14 ஏப் 2020): கோவையில் அத்தியாவசிய பொருட்களுக்குக் கூட யாரும் வெளியே வரக்கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் தமிழகம் இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதனால் தமிழகத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட இடத்தில் முதலில் சென்னையும் அடுத்து கோவையும் இருக்கிறது. இதனால் கோவையில் உள்ள 14 முக்கிய இடங்களை மாவட்ட நிர்வாகம் முழுவதுமாக முடக்கியுள்ளது. அதில், ஆனைமலை, பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு, மேட்டுப்பாளையம், மேட்டுக்கடை, சுந்தராபுரம், குனியமுத்தூர், உக்கடம், மீன்…

மேலும்...

மே.3 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு – பிரதமர் உத்தரவு!

புதுடெல்லி (14 ஏப் 2020): மே 3 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை நிட்டித்து பிரதமர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 25-ந்தேதியில் இருந்து இன்று வரை 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இன்று நள்ளிரவுடன் 21 நாள் கெடு முடிவடைகிறது. இதற்கிடையில் இன்று காலை இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இச்சூழலில் தற்போது நாடு முழுவதும் மே 3 ஆம்…

மேலும்...

இறந்த இந்துவின் உடலை வாங்க யாருமில்லை – இந்து முறைப்படி இறுதிச் சடங்கு செய்த முஸ்லிம்கள்!

ஜெய்ப்பூர் (13 ஏப் 2020): இறந்த இந்துவின் உடலை வாங்க யாருமில்லாத நிலையில் அவரது அண்டை வீட்டு முஸ்லிம்கள் இந்து முறைப்படி அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்தனர். ராஜஸ்தானின் ஜெய்ப்பூரின் பஜ்ரங் நகர் பட்டா பாஸ்தி பகுதியில் வசித்து வந்தவர் ராஜேந்திரா. அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக ஜெய்ப்பூரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரா திங்கள்கிழமை காலமானார். ஆனால் அவரது குடும்பத்தில் ஆண்கள் யாரும் இல்லாததால் அவரது உடலை தகனம்…

மேலும்...

கொரோனா வைரஸ் லாக்டவுன்: நூற்றுக் கணக்கானோருடன் பிறந்தநாள் கொண்டாடிய பாஜக தலைவர்!

பெங்களூரு (11 ஏப் 2020): உலகமே கொரோனாவால் திண்டாடிக் கொண்டிருக்க எதைப் பற்றியும கவலைப்படாமல் தனது பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டடியுள்ளார் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. ஜெயராம். தும்கூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, சட்ட திட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கூட்டமாக கூடுவது தவிர்க்கப்பட்டு, சமூக விலகல் கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதே இதன் நோக்கம். இதனால் மத பிரார்த்தனைக் கூட்டங்களைக்கூட அனைத்து…

மேலும்...