தமிழகத்திற்குள் நுழைந்த ஒமிக்ரான் வைரஸ்!

சென்னை (15 டிச 2021): ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸால் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, “நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த மேலும் 7 பேருக்கும் புதிய வகை கொரோனா இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அவர்களின் மாதிரியும் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 41 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று…

மேலும்...

இந்தியாவில் ஜனவரி மாதம் ஒமிக்ரான் வகை கொரோனா அதிகரிக்க வாய்ப்பு!

இந்தியாவில் ஜனவரி மாதம் ஒமிக்ரான் வகை கொரோனா அதிகரிக்க வாய்ப்பு! இந்தியாவில் வருகிற ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று அதிகரிக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நிலவி வரும் டெல்டா வகை கொரோனாவின் பரவல் வேகத்தைவிட, ஒமிக்ரான் திரிபு வேகமாக பரவக்கூடும் என்பது தற்போது வரை நாம் அறிந்த விசயம். இந்நிலையில் ‘ஒமிக்ரான் பாதிப்பின் தீவிரம், டெல்டாவைவிடவும் குறைவாகவே இருக்கும்’ என்று டெல்லியில் சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மாதிரி…

மேலும்...

ஒமிக்ரானுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் பைசர் தடுப்பூசி – ஆய்வாளர்கள் தகவல்!

நியூயார்க் (14 டிச 2021): ஒமிக்ரான் வகை கொரோனா வைரசுக்கு எதிராக பைசர் தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தென்னாப்ரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான், தற்போது பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. இந்த நிலையில், ஃபைசர் தடுப்பூசி ஒமிக்ரான் வகை கொரோனாவுக்கு எதிராக சிறந்து செயல்படுவதாக தென்னாப்ரிக்க மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டவர்களில், இரண்டு தவணை ஃபைசர் தடுப்பூசி செலுத்தியிருந்த 70 சதவிகிதம் பேரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை…

மேலும்...

ஒமிக்ரான் வைரஸ் – டெல்லி ஐஐடி சாதனை!

புதுடெல்லி (14 டிச 2021): வெறும் 90 நிமிடங்களில் ஒமிக்ரான் தொற்று முடிவை கண்டறியும் டெஸ்ட் கிட் (பரிசோதனை கருவி) ஒன்றை உருவாக்கி உள்ளனர் ஐஐடி-டெல்லியை சார்ந்த ஆய்வறிஞர்கள். உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று. இந்தியாவில் மட்டும் இதுவரை 38 பேர் இந்த வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு உலக நாடுகளின் அரசுகள், வெளிநாடுகளில் இருந்து திரும்புபவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றன . இந்த நிலையில் வெறும் 90 நிமிடங்களில்…

மேலும்...

ஒமிக்ரான் வகை கொரோனா வைரசுக்கு முதல் பலி!

லண்டன் (13 டிச 2021):ஒமிக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், ஒருவர் உயிரிழந்திருக்கக்கூடும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். மேற்கு லண்டனில் பாடிங்க்டன் என்ற இடத்தில் நடந்த தடுப்பூசி முகாமொன்றில் பேசிய அவர், “வருத்தமளிக்கும் விதமாக, ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழல் உள்ளதுதான். அதேபோல வேதனை தரும்வகையில், இதுவரை ஒமிக்ரான் உறுதியானவர்களில் குறைந்தது ஒருவராவது உயிரிழந்துள்ளார். இதன் பரவும் வேகத்தை நாம் இன்னும் சரியாக கணிக்க வேண்டியுள்ளது. ஆகவே இதிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள…

மேலும்...

ஒமிக்ரான் அதி வேகத்தில் பரவக்கூடியது – உலக சுகாதார அமைப்பு!

ஜெனீவா (13 டிச 2021): உலகளவில் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த 9-ம் தேதி நிலவரப்படி 63 நாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று பரவி உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நாம் செலுத்தி இருக்கும் தடுப்பூசிகளின் செயல்திறனை ஒமிக்ரான் வைரஸ் குறைத்து வேகமாக பரவும் அபாயம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார மையம் கூறிய விளக்கத்தில், “உலகளவில் கிடைக்கக்கூடிய தரவுகளின் அடிப்படையில் கொரோனா…

மேலும்...

தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் உள்ளதா? – அமைச்சர் பதில்!

சென்னை (12 டிச 2021): தமிழ்நாட்டில் ஒமிக்ரான் கண்டறியப்படவில்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை டிஎம்எஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற 14-வது மெகா தடுப்பூசி முகாமில், 20 லட்சத்து 45 ஆயிரத்து 347 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தெரிவித்தார். 18 வயதுக்கு மேற்பட்டவர்களில், 83 புள்ளி 5 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியையும் 51 புள்ளி 3 சதவீதம் பேர் இரண்டாவது தவணை…

மேலும்...

ஒமிக்ரான் பரவலைத் தடுக்க மும்பையில் 144 தடை உத்தரவு!

மும்பை (11 டிச 2021): மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஒமிக்ரான் அச்சத்தால் மும்பையில் இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மகாராஷ்டிராவில் ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்ததை அடுத்து மும்பை மாநகரில் டிசம்பர் 11 மற்றும் 12ம் தேதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் தொற்று மேலும் பரவாமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து ஊர்வலங்கள், பேரணிகள், சமுதாய நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

இந்தியாவில் அதிகரிக்கும் ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (05 டிச 2021): இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த சூழலில், உருமாறிய புதிய வகை கொரோனாவான ஒமிக்ரான், பரவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கடந்த 24-ந் தேதி கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் 10 நாட்களில் 38-க்கும் மேற்பட்ட நாடுகளில் கால் பதித்து உலகை அதிர வைத்து வருகிறது. ஒமைக்ரான் வைரஸ் தோன்றியுள்ள தகவல் வெளியானதும் இந்தியா உஷாரானது. எனினும் இந்தியாவையும் ஒமைக்ரான் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கர்நாடகா, குஜாரத், டெல்லி மற்றும்…

மேலும்...

ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் – லாக்டவுன் உண்டாகுமா? -சவூதி அரேபியா விளக்கம்

ரியாத் (03 டிச 2021): ஒமிக்ரான் வைரஸ் பரவல் அச்சுறுத்தல் இருந்தபோதும் லாக்டவுன் உள்ளிட்ட நடவடிக்கைகளை சவூதி அரேபியா எடுக்காது என்று அந்நாட்டு சுகாதார அமச்சகம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவை சேர்ந்த ஒருவருக்கு மட்டும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் எழுபத்தைந்து சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி  போட்டு முடித்துள்ளனர், எனவே கவலைப்பட எதுவும் இல்லை என சவூதி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேவேளை ஒமிக்ரான் வைரஸ் தொற்று…

மேலும்...