புதுச்சேரி காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது – நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி!

புதுச்சேரி (22 பிப் 2021): புதுவை சட்டசபையில் காங்கிரஸ்- திமுக தலைமையிலான அரசு கோரிய நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதையடுத்து ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது. புதுச்சேரியில் ஆளும் காங்., அரசு இன்று (பிப்.,22) பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. மொத்தம் 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் முதல்வர் நாராயணசாமியின் அரசுக்கு பெரும்பான்மை இல்லை என எதிர்க்கட்சிகள் துணை நிலை ஆளுநர் தமிழிசையிடம் மனு கொடுத்தனர். இதையடுத்து…

மேலும்...

ஒரே நாளில் காங்கிரஸ் திமுக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா!

புதுச்சேரி (21 பிப் 2021): புதுச்சேரியில் நாளை மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில் . காங்கிரஸ் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் இருவர் இன்று ராஜினாமா செய்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நன்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு எம்எல்ஏ ராஜினாமா செய்துள்ளார். ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான லட்சுமி நாராயணன் சபாநாயகர் சிவக்கொழுந்துவின் வீட்டிற்கு சென்று தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். இதன்மூலம் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்களின்…

மேலும்...

இந்துக்களின் வாக்குகளால் வெற்றி பெற்றவன் நான் – குலாம் நபி ஆசாத் பரபரப்பு பேட்டி!

புதுடெல்லி (12 பிப் 201): 1979 பொதுத் தேர்தலில், 95 சதவீத இந்து வாக்குகளைப் பெற்று ஒரு இந்து வேட்பாளரையே தோற்கடித்தவன் நான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். குலாம் நபி ஆசாத்தின் பதவிக் காலம் வரும் 15-ல் முடிவடைகிறது. கடந்த நாற்பது ஆண்டுகளாக அவர் பாராளுமன்றவாதியாக இருந்தவர். திங்களன்று குலாம்நபி ஆசாத் உட்பட பதவிக்காலம் முடியும் எம்.பி.,க்களுக்கு பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய பிரதமர் மோடி குலாம் நபி…

மேலும்...

இந்திய முஸ்லீம் என்பதில் பெருமையடைகிறேன் – குலாம்நபி ஆசாத் உருக்கம்!

புதுடெல்லி (09 பிப் 2021): நான் இந்திய முஸ்லிம் என்பதை நினைத்துப் பெருமை கொள்கிறேன் என்று மாநிலங்களவையில் எதிர்கட்சி தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம்நபி ஆசாத் உருக்கமாக பேசினார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக குலாம்நபி ஆசாத், தற்போது மாநிலங்களவையில் எதிர்கட்சி தலைவராக உள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக இந்த பதவியில் இருந்து வருகிறார். குலாம்நபி ஆசாத்தின் பதவிக்காலம் வரும் 15ம் தேதி வாக்கில் முடியவுள்ளது. இந்நிலையில், குலாம் நபி ஆசாத், ஓய்வு பெறுவதால் அவருக்கு…

மேலும்...

காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் உற்சாகம் கொடுக்கும் முடிவு!

புதுடெல்லி (01 பிப் 2021): மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. டெல்லி மாநில காங்கிராஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம், நேற்று நடந்தது. கூட்டத்துக்குப் பின், மாநில தலைவர் அனில்குமார் கூறியதாவது: “நாட்டில் மிகவும் ஆபத்தான அரசியல் சூழல் நிலவுகிறது. நரேந்திர மோடி தலைமையிலான அரசு, அடுத்தடுத்து தவறான முடிவுகளை எடுத்து வருகிறது. இதை எதிர்த்து, ராகுல் தொடர்ந்து போராடி வருகிறார். ஜனநாயக விரோத சக்திகளை விரட்டவும், காங்கிரஸ்…

மேலும்...

ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவை முந்திய காங்கிரஸ்!

ஜெய்ப்பூர் (31 ஜன 2021): ராஜஸ்தான் நகராட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் காங்கிரஸ் முன்னணி வகிக்கிறது. இதுவரை வெளியாகியுள்ள 2601 இடங்களில் காங்கிரஸ் 1012 இடங்களிலும் . பாஜக 947 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. 20 மாவட்டங்களில் உள்ள 90 உள்ளாட்சி அமைப்புக்களுக்கு இந்த தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 3035 வார்டுகளில் 994க்கு இந்த தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இன்று வாக்கு எண்ணும் பணி நடைபெறு…

மேலும்...
ரேசன் அரசி சாப்பாடு

புழுத்த அரிசியும் பறிபோன ஆட்சியும் – ஒரு நினைவலை!

இப்போது அரசு இரண்டாம் முறை தந்த வாய்ப்பில், எங்கள் வீட்டு ரேஷன் கார்டை அரிசி கார்டாக மாற்றிய பின், அரசு வழங்கிய பொங்கல் பரிசாக ₹2500/-, பிரம்பு போன்று மெலிந்த ஒரு கரும்பு, 1 kg அளவுக்குப் பச்சரிசி, 1 kg சீனி, ஆறேழு அண்டிப் பருப்பு, கிஸ்மிஸ், ஏலக்காய் ஆகியவை கிடைத்தன. — ஒரு வாரம் கழித்து, பொங்கல் வேட்டி கிடைத்தது. ரேஷன் கடைக்காரன் சேலையைப் பதுக்கிவிட்டான் போல. இரண்டில் ஒன்று தான் எனச்சொல்லி விட்டான்….

மேலும்...

மாட்டிறைச்சி உண்ணுவதை முஸ்லிம்கள் கைவிட வேண்டும் – காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்!

பெங்களூரு (20 டிச 2020): “இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மாட்டிறைச்சி உண்ணுவதை முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும்.” என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான இப்ராகிம் தெரிவித்துள்ளார்ர் கர்நாடகாவில் பாஜக அரசு அறிமுகப்படுத்திய பசு வதை சட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் இப்ராஹிம் ஆதரவளித்துள்ளார். அதேவேளை, “நாட்டில் இந்து பெரும்பான்மையினரின் மத உணர்வுகளை புண்படுத்தும் எந்தவொரு செயலிலும் முஸ்லிம் சமூகம் ஈடுபடக்கூடாது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.” என்றார். மேலும் முஸ்லிம் சமூகம் இதை உணர்ந்து மாட்டிறைச்சி சாப்பிடுவதைத் தவிர்க்க…

மேலும்...

மவுனம் கலைத்த ராகுல் காந்தி!

புதுடெல்லி (20 டிச 2020): மீண்டும் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க ராகுல் காந்தி ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் டெல்லியில் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், துணைத் தலைவர் ஆனந்த் சர்மா, முன்னாள் மத்திய…

மேலும்...

மோடியின் ரகசியத்தை பொதுவில் போட்டுடைத்த பாஜக தலைவர்!

இந்தூர் (17 டிச 2020):: மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தை கவிழ்ப்பதில் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய பங்கு வகித்துள்ளார் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா தெரிவித்துள்ளார். இந்தூரில் புதன்கிழமை நடைபெற்ற பொது விழாவில் உரையாற்றியபோது விஜயவர்கியா இந்த தகவலை வெளியிட்டார். இதில் வேடிக்கை என்னவென்றால் இது யாருக்கும் தெரியாத ரகசியம் என்று உண்மையை போட்டு உடைத்தார். பாஜகவின் ரகசியத்தை பாஜக தலைவரே பொதுவில் சொன்னதுதான் வேடிக்கை கமல்நாத் அரசாங்கத்தை…

மேலும்...