காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை!

ஜம்மு (22 பிப் 2020): ஜம்மு காஷ்மீரின் பிஜ்பேஹரா அருகே சங்கம் பகுதியில் லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை. ஜம்மு பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுப்பதற்காக ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இருதரப்பினரிடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்களும், வெடி மருந்துகளும் மீட்கப்பட்டுள்ளன.

மேலும்...

டெல்லியில் தோல்வி அடைந்தும் திருந்தவில்லையா? – மோடிக்கு உத்தவ் தாக்கரே அட்வைஸ்!

மும்பை (18 பிப் 2020): “குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெறப் போவதில்லை என்று திரும்ப திரும்பகூறுவதால் கைதட்டல் கிடைக்கலாம் ஆனால் ஓட்டு கிடைக்காது” என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். வாரணாசியில் பேசிய பிரதமர் மோடி, “எத்தனை அழுத்தங்கள் வந்தாலும், சிஏஏ, காஷ்மீர் மீதான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது குறித்து திரும்ப திரும்பபெறப்போவதில்லை” என்று தெரிவித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, ” நாட்டில் பல விவகாரங்கள் உள்ளன. அதில் கவனம் செலுத்துங்கள்….

மேலும்...

முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷா பைசல் மீது பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!

புதுடெல்லி (16 பிப் 2020): ஜம்மு காஷ்மீரில், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷா பைசல் மீது பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஷா பைசல். ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆ,ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து 2019 மார்ச் 16-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கம் என்ற கட்சியைத் தொடங்கினார். இதற்கிடையே, கடந்த…

மேலும்...

உச்ச நீதிமன்றத்தை நாடினார் ஒமர் அப்துல்லாவின் தங்கை!

புதுடெல்லி (10 பிப் 2020): பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவை விடுதலை செய்யக்கோரி அவரது தங்கை சாரா அப்துல்லா உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். தேசிய மாநாட்டு கட்சி தலைவர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பரூக் அப்துல்லா, ஏற்கனவே பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பொது…

மேலும்...

காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதல் – ஒருவர் பலி!

புல்வாமா (09 பிப் 2020): காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார். 55 வயது குலாம் நபி மிர் என்பவர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த தாக்குதலில் குலாம் நபி மிர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஞாயிறு (09 பிப்) மாலை 07:30 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த குலாம் நபி மிர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த…

மேலும்...

பொய் செய்தியை வைத்து உமர் அப்துல்லா மீது பழி சுமத்திய மோடி – சீதாராம் யெச்சூரி பகீர் தகவல்!

புதுடெல்லி (08 பிப் 2020): இணையத்தில் வந்த பொய் தகவலை வைத்து காஷ்மீர் முன்னாள் முதல்வர் மீது பிரதமர் மோடி பழி சுமத்தியுள்ளார் என்று சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பதிலளித்த பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் 2 முன்னாள் முதல்வர்கள் மீது குற்றம் சுமத்தினார். , மேலும் உமர் அப்துல்லா கூறியதாக மேற்கோள் காட்டிய கூற்றில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு…

மேலும்...

ராஜஸ்தானில் காஷ்மீர் இளைஞர் அடித்துக் கொலை!

ஜெய்ப்பூர் (08 பிப் 2020): ராஜஸ்தானில் காஷ்மீர் இளைஞர் பாஸித் கான் (20) அவருடன் பணிபுரிபவர்களால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி ஜெய்ப்பூரில் பணிக்குச் சென்று திரும்பி வந்து கொண்டிருந்தபோது அவருடன் பணிபுரியும் 6 பேர் கொண்ட கும்பல் பாஸித் கானை கொடூரமாக தாக்கியுள்ளது. படுகாயம் அடைந்த பாஸித்கான் அருகில் உள்ள மருத்துவமனையில் அவருடன் சென்ற நண்பர்களால் அனுமதிக்கப் பட்டார். எனினும் மருத்துவர்கள் பாஸித் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கொலைக்கான காரணம்…

மேலும்...

முன்னாள் முதல்வர்கள் மீது பொது பாதுகாப்பு சட்டம் – ப.சிதம்பரம் அதிர்ச்சி!

சென்னை (07 பிப் 2020): ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, சர்தாஜ் மதானி உள்ளிட்ட தலைவர்கள் மீது பொது பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளமை அதிர்ச்சி அளிப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை தொடர்ந்து அங்கு மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இன்னும் காஷ்மீர் ராணுவ கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த…

மேலும்...

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய தமிழக பாஜக!

சென்னை (28 ஜன 2020): தமிழக பாஜக ட்விட்டர் பக்கத்தில் ஏதாவது பதிந்துவிட்டு பின்பு நீக்கம் செய்வது வாடிக்கை. அந்த வகையில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா குறித்த ஒரு பதிவை பதிந்துவிட்டு தற்போது நீக்கம் செய்துள்ளது. காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்தவருமான ஓமர் அப்துல்லாவின் கடந்த ஐந்து மாதங்களாக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அவரது தாடியுடன் கூடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இதனை கிண்டல் செய்யும்…

மேலும்...

காஷ்மீர் முன்னாள் முதல்வரின் தற்போதைய நிலை – ஸ்டாலின் கவலை!

சென்னை (28 ஜன 2020): காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் புகைப்படம் மிகுந்த வருத்தம் அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்தவருமான ஓமர் அப்துல்லாவின் தாடியுடன் கூடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைக் கண்டு வருத்தம் அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கிரத்து செய்தது மத்திய…

மேலும்...