31 முஸ்லிம் வேட்பாளர்களை களத்தில் இறக்கும் பாஜக!

பருச் (12 பிப் 2021): குஜராத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் பாஜக முஸ்லிம்களுக்கு அதிக இடங்களை வழங்கியுள்ளது. பருச் மாவட்டத்தில், பாஜக 31 வேட்பாளர்களுக்கு டிக்கெட் வழங்கியுள்ளது. இவர்களில் 17 பெண்கள் அடங்குவர். இந்த மாவட்டத்தில் முதல் தடவையாக பாஜக பல முஸ்லிம்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளது. இந்த தகவலை பருச் மாவட்ட பாஜக தலைவர் மாருதி சிங் அடோதரியா தெரிவித்துள்ளார். மாவட்ட பஞ்சாயத்து தற்போது காங்கிரஸ் கையில் உள்ளது இது இப்படியிருக்க ஆசாதுதீன் ஒவைசியின் AIMIM…

மேலும்...

கொரோனா சிகிச்சை மையத்தில் திடீர் தீ விபத்து – 5 நோயாளிகள் பலி!

ராஜ்கோட் (27 நவ 2020): குஜராத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 5பேர் பரிதாபாமாக உயிரிழந்துள்ளனர். குஜராத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள உதய் சிவானந்த் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்றிரவு இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம்…

மேலும்...

குஜராத் முன்னாள் முதல்வர் கொரோனா பாதிப்பால் மரணம்!

அஹமதாபாத் (29 அக் 2020): குஜராத் முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான கேசுபாய் படேல் கொரோனா பாதிப்பால் காலமானார். 92 வயதற்கான கேசுபாய் படேல், மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட படேல் வியாழக்கிழமை காலை இறந்தார். டைம்ஸ் ஆப் இந்தியா படி, படேலுக்கு செப்டம்பர் மாதம் கோவிட் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் அறிகுறிகள் எதுவும் இல்லை. படேல் இரண்டு முறை குஜராத்தின் முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

மூடப்படும் தமிழ் பள்ளி – மோடியின் மாநிலத்தில் நசுக்கப்படும் தமிழர்கள்!

அஹமதாபாத் (23 செப் 2020): குஜராத்தில் 81 வருட பாரம்பரிய தமிழ் பள்ளி மூடப்படுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குஜராத் அஹமதாபாத்தில் உள்ள தமிழ் பள்ளியை மூட குஜராத் அரசு உத்தரவிட்டு கெடு விதித்துள்ளது. பள்ளியை மூட வேண்டாம் என்று மாவட்ட கல்வி அலுவலர் வரை சந்தித்துவிட்டனர் குஜராத் வாழ் தமிழ் மக்கள். ஆனால் அரசு செவி சாய்க்கவில்லை,. இந்த பள்ளியில் படித்த ஏராளமானோர் பல்வேறு அரசுத்துறையிலும் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் தற்போது மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக…

மேலும்...

குஜராத்தில் காங்கிரஸுக்கு மிகப்பெரிய சரிவு – காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா!

அகமதாபாத் (04 ஜூன் 2020): குஜராத்தில் இரு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளது எதிர் வரும் ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் காலியாக உள்ள நான்கு ராஜ்யசபா பதவிக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஓட்டு முக்கியம். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கீர்த்தி படேல், லலித் வசோயா என்ற இரு எம்.எல்.ஏ..,க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். முன்னதாக முதல்வர் விஜய் ரூபானியை அந்த…

மேலும்...

நமஸ்தே ட்ரம்ப் நிகழ்வுதான் இந்தியாவில் கொரோனா பரவ காரணம் – சிவசேனா குற்றச்சாட்டு!

மும்பை (31 மே 2020): பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வைத்து அகமதாபாத்தில் நடைபெற்ற நமஸ்தே ட்ரம்ப் நிகழ்வு, குஜராத்திலும் மும்பை மற்றும் டெல்லியிலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணம் என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் குற்றம் சாட்டியுள்ளார். எந்தவொரு திட்டமும் இல்லாமல் ஊரடங்கை செயல்படுத்தியது மத்திய அரசு ஆனால் இப்போது மாநிலங்களை குற்றம் சாட்டுகிறது என்று ராவத் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் நடைபெறும் விகாஸ் அகாடி அரசை டிஸ்மிஸ் செய்ய மத்திய அரசு…

மேலும்...

அதிர்ச்சி சம்பவம் – கொரோனா வார்டில் பணிபுரிந்த நர்ஸ் தற்கொலை!

அகமதாபாத் (26 மே 2020): கொரோனா வார்டில் பணிபுரிந்த நர்ஸ் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் மணிநகர் என்ற பகுதி குடியிருப்பில் வசித்து வந்த 28 வயதான நர்ஸ் சிவில் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த திங்கட்கிழமை அன்று தான் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் பத்தாவது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் நர்சின் தந்தையிடம் நடத்திய விசாரணையில், “என்னுடைய மகள்…

மேலும்...

சட்ட அமைச்சரின் வெற்றி செல்லாது – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.

அகமதாபாத் (12 மே 2020): குஜராத் மாநில சட்த்துறை அமைச்சர் புபேந்திரசிங் சூடஸ்மாவின் தேர்தல் வெற்றி செல்லாது என குஜராத் மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநில சட்டமன்றத்துக்கு 2007ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்கா தொகுதியில் புபேந்திரசிங் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அஷ்வின் ரத்தோட்டைவிட 327 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். பின்னர் அமைக்கப்பட்ட அமைச்சரவையில் சட்ட அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் அதிகாரியாக இருந்த தோல்கா துணை…

மேலும்...

அமித் ஷா உடல் நிலை குறித்து அவதூறு பரப்பிய நான்கு இளைஞர்கள் கைது!

அகமதாபாத் (10 மே 2020): மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடல் நிலை குறித்து அவதூறு பரப்பியதாக நான்கு இளைஞர்களை குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உடல்நிலை குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக நான்கு முஸ்லிம் இளைஞர்கள் சனிக்கிழமை குஜராத்தின் அகமதாபாத் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ஷாவின் உடல்நலம் குறித்து தவறான தகவல்களை பரப்பியதற்காக உள்ளூர் குற்றப்பிரிவு போலீசார் நான்கு பேரை கைது செய்துள்ளதாக சிறப்பு போலீஸ் கமிஷனர்…

மேலும்...

குஜராத்தில் கொரோனா பரவ நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சிதான் காரணம் – காங்கிரஸ் குற்றச்சாட்டு!

புதுடெல்லி (07 மே 2020): பிப்ரவரி 24 ம் தேதி குஜராத்தில் மாநில பாஜக அரசு ஏற்பாடு செய்த “நமஸ்தே டிரம்ப்” நிகழ்வே மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணம் என்று குஜராத் காங்கிரஸ் புதன்கிழமை குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்கு எதிராக அவர்கள் விரைவில் குஜராத் உயர் நீதிமன்றத்தை அணுகவுள்ளதாகவும் மாநில காங்கிரஸ் தலைவர் அமித் சவ்தா தெரிவித்தார். மேலும் திரு சாவ்தா…

மேலும்...