நான் முஸ்லிம், என் மனைவி இந்து, என் பிள்ளைகள்? -நடிகர் ஷாருக்கான் பதில்!

மும்பை (26 ஜன 2020): என் வீட்டில் இதுவரை எங்கள் மதம் குறித்து விவாதித்ததே இல்லை என்று நடிகரி ஷாருக்கான் தெரிவித்துள்ளார். இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் குடியரசு தின தொலைக் காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது பல சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்தார். அப்போது “நான் முஸ்லிம் மதத்தவன் என் மனைவி இந்து மதத்தைச் சேர்ந்தவள், என் பிள்ளைகள் பள்ளிச் சான்றிதழில் என்ன மதம் குறிப்பிட வேண்டும் என்று கேட்டபோது இந்தியன் என்று குறிப்பிடச் சொன்னேன்”…

மேலும்...

குடியரசு தினத்தில் பயங்கரம் – ஐந்து இடங்களில் குண்டு வெடிப்பு!

கவுஹாத்தி (26 ஜன 2020): இந்தியாவின் குடியரசு தினமான இன்று அஸ்ஸாமில் ஐந்து இடங்களில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. அஸ்ஸாமின் திபுர்காரில் 2 இடங்களிலும், சோனரி, துலியாஜன் மற்ரும் தூம்தூமா ஆகிய இடங்களிலும் குண்டு வெடித்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று மாநில போலீஸார் தெரிவித்தனர். இதுதொடர்பாக அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்த சோனோவல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ள கண்டன பதிவில், “குண்டு வெடிப்புச் சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மக்கள் தீவிரவாதக் குழுக்களை…

மேலும்...

குடியரசு தினம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடி ஏற்றினார்!

புதுடெல்லி (26 ஜன 2020): குடியரசு தினத்தையொட்டி டெல்லி ராஜபாதையில் நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றினார். நாட்டின் 71வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லி ராஜபாதையில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றினார். பிரேசில் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோ இந்த விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார். போா் உள்ளிட்டவற்றில் உயிரிழந்த வீரா்களுக்கு இந்தியா கேட் பகுதிக்கு அருகிலுள்ள…

மேலும்...

குடியரசு தினம் – ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடி ஏற்றினார்!

சென்னை (26 ஜன 2020): குடியரசு தினத்தை ஒட்டி, சென்னை கடற்கரை சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்னை கடற்கரையில் தேசியக் கொடியை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் ஏற்றினார். நாட்டின் 71-ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதில், சென்னை மெரீனா கடற்கரை சாலையில் நடைபெறும் விழாவில் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் காலை 8 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றினார். முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை, முப்படைகளின் ஊா்திகள், தமிழக அரசுத்…

மேலும்...

குடியரசு தினத்தையொட்டி கவர்னர் வாழ்த்து!

சென்னை (25 ஜன 2020): நாட்டின் 71 வது குடியரசு தின விழாவையொட்டி தமிழக மக்களுக்கு கவர்னர் பன்வாரிலால் தனது வாழ்த்தை தெரிவித்துக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நம்முடைய ஒருங்கிணைந்த ஆற்றல் அனைத்தையும் நமது நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்திட உறுதி கொள்வோம். நம் வாழ்வின் மூச்சு, செயலை அர்ப்பணித்து, தேசத்தின் பெருமையை கட்டிக்காப்பதில் தொடர்ந்து முன்னேறி செல்ல முன்வருவோம். அரசியலமைப்பு உருவாக பங்களித்த விடுதலைப் போராட்ட வீரர்கள், சட்டமியற்றிய மேதைகளை நினைவு கூர்வோம். என்று…

மேலும்...

குடியரசு தினத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வித்தியாசமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு!

ஐதராபாத் (24 ஜன 2020): ஐதராபாத்தில் குடியரசு தினத்தன்று குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பிரம்மாண்ட வித்தியாசமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவர்கள் என பலதரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று அசாதுத்தீன் உவைசி தலைமையிலான United Muslim Action Committee (UMAC) சார்பில் ஐதராபாத்தில் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எஹ்திஜாஜி முஷைரா (Ehtejaji Mushaira) மைதானத்தில்…

மேலும்...

குடியரசு தினத்தில் தாக்குதல் நடத்த திட்டம் – ஐந்து பேர் கைது!

ஸ்ரீநகர் (17 ஜன 2020): குடியரசு தினத்தன்று தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாக ஐந்து பயங்கரவாதிகள் ஸ்ரீநகரில் வியாழனன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வியாழனன்று பதிவிட்டுள்ளதாவது: குடியரசு தினத்தன்று தாக்குதல் நடத்த திட்டம் தீட்டிய ஜெய்ஷ் அமைப்பின் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஹசரத்பால் பகுதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளுக்கு காரணமானவர்கள் கண்டறியபட்டுள்ளனர். ஹசரத்பால் சதார்பால் பகுதியைச் சேர்ந்த அய்ஜாஸ் அஹமத் ஷேக், அசார் காலனி பகுதியைச்…

மேலும்...

டெல்லியில் விமானங்கள் பறக்க கட்டுப்பாடு!

புதுடெல்லி (13 ஜன 2020): குடியுரசுதினக் கொண்டாட்டத்தையொட்டி டெல்லியில் விமானங்கள் பறக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஒரு வாரத்துக்கு சுமாா் 1.45 மணி நேரம் விமானங்கள் பறக்க அனுமதிக்கப்படாது என இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடா்பாக ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஜனவரி 18, 20, 21,22,23,24, 26 ஆகிய தேதிகளில் காலை 10. 35 மணி முதல் 12.15 மணி வரை தில்லி சா்வதேச விமான நிலையத்தில் இருந்து…

மேலும்...