முஸ்லிம் முதியவர் படுகொலை – பஜக பிரமுகர் உட்பர 22 பேர் கைது!

லக்னோ (09 செப் 2022):உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் முஸ்லிம், முதியவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பாஜக பிரமுகர் உள்பட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய்கிழமை அன்று 55 வயதான முஸ்தகீமின் ஆடு ஒன்று அவரது பக்கத்து வீட்டுக்காரரான சந்தீப்பின் வயலில் அலைந்ததை அடுத்து, இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டது, அன்று மாலை, முஸ்தகீமின் வீட்டுக்குள் புகுந்த ஒரு கும்பல் அங்கிருந்தவர்கள் மீது கொடூரமான தாக்குதலை நடத்தியது. தாக்குதலில் படுகாயமடைந்த முஸ்தகிம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த…

மேலும்...

முஹம்மது ஜுபைர் கைதுக்கு ஐ.நா செய்தித் தொடர்பாளர் கண்டனம்!

வாஷிங்டன் (29 ஜூன் 2022): இந்தியாவில் Alt News இணை நிறுவனர் முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டதற்கு கைது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள ஐநா செய்தித் தொடர்பாளர், ஊடகவியலாளர்கள் எழுதுவதற்கும், ட்வீட் செய்வதற்கும், பேசுவதற்கும் இவ்வாறு சிறையில் அடைக்கப் படுவது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார். உண்மைச் சரிபார்ப்பு இணையதளமான Alt News இணை நிறுவனர் ஜுபைர், கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியிட்ட ட்வீட் ஒன்றின் மூலம் மத உணர்வுகளை புண்படுத்தியதாக டெல்லி காவல்துறையால் திங்கள்கிழமை (27-06-2022)…

மேலும்...

முஹம்மது ஜுபைர் கைதும் பின்னணியும்!

புது டெல்லி (28 ஜூன் 2022): பிரபல ஊடகவியலாளர் முஹம்மது ஜுபைர், மத உணர்வை புண்படுத்தியதால் கைது செய்யப்பட்டதாக போலீசார் கூறினாலும் உண்மை வேறு என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். உண்மைச் சரிபார்ப்பு இணையதளமான AltNews இன் இணை நிறுவனர் முஹம்மது ஜுபைர் டெல்லியில் நேற்று கைது செய்யப்பட்டார். சமீபத்தில் முஹம்மது நபி குறித்து காழ்ப்புணர்ச்சியுடன் பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா-வின் உரையை உலகறியச் செய்தவர் முஹம்மது ஜுபைர். பாஜக-வின் சர்ச்சை தொடர்பாக அரபுலகம்…

மேலும்...

முஸ்லீம் பெண்களுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இந்துத்துவ சாமியார் கைது!

சீதாபூர் (14 ஏப் 2022): முஸ்லிம் பெண்களை வன்புணர்வு செய்வேன் என்று மிரட்டல் விடுத்த சாமியார் பஜ்ரங் முனி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி இந்து புத்தாண்டு விழாவையொட்டி உத்தரப் பிரதேசம் கைராபாத் நகரத்தில் உள்ள மகரிஷி ஸ்ரீ லக்ஷ்மண் தாஸ் உதாசின் ஆசிரமத்தின் சாமியார் பஜ்ரங் முனிதாஸ் தலைமையில் ஊர்வலம் ஒன்று சென்றுள்ளது. அந்த ஊர்வலம் ஷேஷே வாலி மசூதி அருகே சென்றடைந்தபோது பேசிய சாமியார் முனிதாஸ், எந்த ஒரு இந்து பெண்ணையும்…

மேலும்...

நள்ளிரவில் பாஜக தலைவர் கைது!

சென்னை (08 ஏப் 2022): நள்ளிரவில் பாஜக மாவட்ட பிரசார அணி தலைவர் ஜெயபிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார். ஆரல்வாய்மொழியில் கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற பாரதிய ஜனதா நிறுவப்பட்ட தின விழாவில் கட்சியின் மாவட்ட பிரசார அணி தலைவர் ஜெயபிரகாஷ் பேசினார். அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக திமுகவினர் அளித்த புகாரில் ஜெயப்பிரகாஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு இரண்டரை மணியளவில் ஜெயப்பிரகாஷை கைது செய்ய இரணியலில் உள்ள அவரது…

மேலும்...

முஸ்லிம் பெயரில் போலி வலைத்தள பக்கத்தில் வகுப்புவாத கருத்துக்களை பதிவிட்டவர் கைது!

பெங்களூரு (25 மார்ச் 2022): கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் பெயரில் சமூக வலைதள பக்கத்தில் சமூக விரோத கருத்துகளை பதிவிட்ட சித்தரோதா ஸ்ரீகாந்த் நீராலே (31) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடக மாநில சட்டப் பேரவையின் முன்னாள் தலைவர் டி.எச்.சங்கர்மூர்த்தியின் மகனான கர்நாடக பாஜக எம்எல்சி டி.எஸ்.அருணுக்கு சமூக வலைதளத்தில் முஷ்டாக் அலி என்ற பெயரில் ஒருவர் மிரட்டல் விடுத்தார். எம்.எல்.சி.யின் புகாரின் அடிப்படையில், ஷிவமோகாவில் உள்ள சைபர், பொருளாதாரம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு…

மேலும்...

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது!

சென்னை (23 பிப் 2022): அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது வண்ணாரப்பேட்டை 49 ஆவது வார்டில் கள்ள ஓட்டு போட முயற்சித்ததாகக் கூறி திமுக பிரமுகர் ஒருவரை தாக்கி, அரைநிர்வாணமாக அழைத்து வந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது கொலை மிரட்டல், தாக்குதல், கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது….

மேலும்...

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கைது!

சென்னை (21 பிப் 2022): முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாக கைது செய்யப்படுள்ளார். தமிழகத்தில் கடந்த பிப் 19 ஆம் தேதியன்று நகர்ப்புற உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த காவல்துறையினரின் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது. வாக்கு எண்ணும் மையங்களிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஆயுதம் ஏந்திய காவல்துறையின் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும்…

மேலும்...

பஞ்சாப் முதல்வரின் மருமகன் கைது!

புதுடெல்லி (04 பிப் 2022): பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன் பூபேந்திர சிங் ஹனி,மணல் கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறை இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப்பில் வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மார்ச் 10-ம் தேதி முடிவுகள் வெளியாகிறது. இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன் பூபேந்திர சிங் ஹனியை நேற்று மாலை காவலில் எடுத்த அமலாக்கத்துறை, இன்று அவரை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறது. பணமோசடி தடுப்புச்…

மேலும்...

11 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர் கைது!

பாட்னா (09 ஜன 2022): பிகாரில் ஒரே வருடத்தில் 11 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். பீகாரில் 84 வயது முதியவர், கடந்த ஒரு வருடத்தில் 11 முறை கோவிட்-19 தடுப்பூசியை எடுத்துக் கொண்டுள்ளார். இதனை அடுத்து மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் வினய் கிருஷ்ண பிரசாத் அளித்த புகாரின் அடிப்படையில், பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டத்தைச் சேர்ந்த பிரம்மதேவ் மண்டல் என்பவர் மீது புரைனி காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இந்திய…

மேலும்...