சவுதியில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் போடப்படும் 2 வது டோஸ் கொரோனா தடுப்பூசி!

ரியாத் (24 ஜூன் 2021): சவுதி அரேபியாவில், 70 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றுள்ள நிலையில், இன்று முதல் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. சவூதி அரேபியாவில் 587 தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. இதுவரை , 70 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றுள்ளர். இந்த நிலையில் இன்று முதல் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசிகள் கிடைப்பதைப்…

மேலும்...

கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் இந்தியாவுக்கு செல்லுங்கள் – பிலிப்பைன்ஸ் அதிபர் மிரட்டல்!

மணிலா (23 ஜூன் 2021): “பிலிப்பைன்ஸில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் இந்தியாவுக்கு செல்லுங்கள்!” என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டே தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமீபத்தில் அந்நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில், “மக்கள் என்னைத் தவறாக எண்ண வேண்டாம். நம் நாட்டில் கொரோனா பரவலால் நெருக்கடி நிலவுகிறது. நாம் ஏற்கனவே கொரோனாவால் கஷ்டப்படுகிறோம். மேலும் நாட்டை கஷ்டப்படுத்தாதீர்கள். நீங்கள் தடுப்பூசி போட விரும்பவில்லை என்றால், கைது செய்யப்படுவீர்கள்” “அதுமட்டுமல்ல நீங்கள் தடுப்பூசி போடவில்லை என்றால், பிலிப்பைன்ஸை விட்டு…

மேலும்...

கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட முதல் மரணம் – உறுதி செய்தது அரசு!

புதுடெல்லி (15 ஜூன் 2021): இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை எடுத்த ஒருவர் உயிரிழந்ததை அரசு உறுதி செய்துள்ளது. இதனை தடுப்பூசி பக்க விளைவுகளைப் பற்றி ஆய்வு செய்த குழு உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 8 ஆம் தேதி  கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்த 68 வயதான ஒருவர் அனாபிலாக்ஸிஸ் காரணமாக இறந்தார் என்று இதுகுறித்த அறிக்கை காட்டுகிறது. “நாங்கள் கண்ட முதல் மரணம் இதுதான், விசாரணையின் பின்னர் இறந்ததற்கான காரணம் தடுப்பூசிக்குப் பிறகு அனாபிலாக்ஸிஸ்…

மேலும்...

மோடி படத்தை தூக்கிவிட்டு மம்தா பானர்ஜியின் படம் – பரபரப்பில் ஒன்றிய அரசு!

கொல்கத்தா (05 ஜூன் 2021): மேற்குவங்கத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுகொள்வோருக்கு சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் தூக்கப்பட்டு முதலமைச்சர் மம்தா பானர்ஜி படம் பதிக்கப்பட்ட சான்றிதழ் விநியோகிக்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாநில அரசு சார்பில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் படம் பதித்த சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடி படம் இடம்பெற்றுள்ளதற்கு தொடக்கத்தில் இருந்தே மேற்குவங்க மாநில முதல் வர் மம்தா பானர்ஜி…

மேலும்...

தமிழகத்திற்கு 5 கோடி கொரோனா தடுப்பூசிகள் – தடுப்பூசி நிறுவனங்கள் விண்ணப்பிக்க கோரிக்கை!

சென்னை (15 மே 2021): தமிழக அரசு நேரடியாக கொரோனா தடுப்பூசி இறக்குமதி செய்ய முன்வந்துள்ள நிலையில் தடுப்பூசி கொள்முதலுக்கு உலகளாவிய ஒப்பந்த புள்ளியை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் கோரியுள்ளது. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு போதிய அளவிலான மருந்துகள் இல்லாததால் உலகளாவிய ஒப்பந்த புள்ளிகள் மூலமாக தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் தடுப்பூசி கொள்முதலுக்கு இன்று தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம்…

மேலும்...

கொரோனா விவகாரம் – சவூதியில் நடைமுறைக்கு வந்த புதிய விதிமுறைகள்!

ரியாத் (15 மே 2021): சவூதியில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் COVID-19 தடுப்பூசி போட வேண்டும் அல்லது வாராந்திர பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற முடிவை சவூதி அதிகாரிகள் செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர். நகராட்சி மற்றும் ஊரக விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதி அமைச்சகம் அறிமுகப்படுத்திய இந்த நடவடிக்கைகளின்படி, முடிதிருத்தும் கடைகள் மற்றும் பெண்களின் அழகு நிலையங்களில் பணிபுரிபவர்கள், உணவகங்கள், கஃபேக்கள், உணவு விற்பனை நிலையங்களில் உள்ள அனைவரும் கொரோன தடுப்பூசி செலுத்தியவர்களாக இருக்க வேண்டும் இல்லையேல்…

மேலும்...

சவூதியில் பணிபுரியும் அனைவரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்!

ரியாத் (08 மே 2021): சவூதியில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியமாகும் என சவூதி மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (HRSD) அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் ஒருபகுதியாகவும், அனைவருக்கும் ஆரோகியமான வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாகவும் சவூதியில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் தங்கள் பணியிடங்களுக்கு செல்வதெனில் கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொள்வது அவசியமாகும்.. இதனை நடைமுறைப்படுத்தும் நடைமுறை மற்றும் தேதியை அமைச்சகம் விரைவில் அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

பந்தாவுக்கு அறிவிப்பு வெளியிட்டு கைவிரிக்கும் சுகாதாரத்துறை!

சென்னை (30 ஏப் 2021): இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்துள்ள நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், மே ஒன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தலாம் என மத்திய அரசு மாநிலங்களுக்கு அனுமதி வழங்கியது. தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான முன்பதிவு நேற்று முன்தினம் (28.04.2021) தொடங்கிய நிலையில், ஏராளமானோர் தடுப்பூசிக்கு செலுத்திக்கொள்ள தங்கள் பெயரைப் பதிவுசெய்துகொண்டனர்….

மேலும்...

இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் விலை உயர்வு!

புதுடெல்லி (21 ஏப் 2021): கோவிஷீல்டு தடுப்பூசியின் ஒரு டோஸை 250 ரூபாய் என்ற விலைக்கு சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் விற்பனை செய்து வந்தது. இந்நிலையில், தடுப்பூசிக்கான தேவை அதிகரித்து வரும் சூழ்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை சீரம் இன்ஸ்டிடியூட் உயர்த்தியுள்ளது. அதன்படி, இனி கோவிஷீல்டு தடுப்பூசியின் ஒரு டோஸ் மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என்றும் சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது. இந்த விலை மத்திய அரசு வெளியிட்ட…

மேலும்...

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பயன்படுத்தியது குறித்து அதிர்ச்சி தகவல்!

சென்னை (20 ஏப் 2021): இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தடுப்பூசிகளை நாடெங்கும் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசியை வீண் செய்த மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக ஆர்டிஐ (தகவல் அறியும் உரிமை சட்டம்) வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி நாடு முழுவதும் 44 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வீணாகியுள்ளதாகவும், அதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 12.10 சதவீத டோஸ்கள் வீணாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது….

மேலும்...