கொரோனா தாக்குதலால் கீழிறங்கிய முகேஷ் அம்பானி!

புதுடெல்லி (10 மார்ச் 2020): கொரோனா தாக்கத்தால் பங்குகள் சரிந்து, முகேஷ் அம்பானி தனது முதல் பணக்காரர் என்ற இடத்தை இழந்தார். உலகை அச்சுறுத்தும் கொரானா தாக்கத்தால் இந்தியாவின் பங்குகள் விலைகள் வரலாறு காணாத அளவில் குறைந்ததை அடுத்து ஆசியாவின் முதல் பணக்காரர் என்ற இடத்தில் இருந்து, ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி 2 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். முகேஷ் அம்பானிக்கு சுமார் 43 ஆயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவரது சொத்து…

மேலும்...

கொரோனா வைரஸ் எதிரொலி – ஈரான் அரசு எடுத்த அதிரடி முடிவு!

தெஹ்ரான் (10 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஈரானில் இருக்கும் சிறைக் கைதிகளை விடுவிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. கொரோனா வைரஸ் சீனாவுக்கு அடுத்த நிலையில் இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் அதிகமாக பரவி வருகிறது. இதனால் ஈரான் நாட்டு அரசு சில அதிரடி முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. இதன் ஒரு பகுதியாக ஈரான் நாட்டில் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் சுமார் 70 ஆயிரம் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய அந்நாட்டு தலைமை…

மேலும்...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பு!

புதுடெல்லி (10 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. இதுவரை இந்தியாவில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது டெல்லி, உத்தரப்பிரதேசம், கேரளாவில் எர்ணாகுளம், ஜம்மு, கர்நாடகாவில் பெங்களூரு, பஞ்சாப் மற்றும் புணே ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே சமயம், மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் கரோனா அறிகுறியுடன்…

மேலும்...

அந்த ஐந்து பேரால்தான் இத்தனை பிரச்சனைகளும் – கதறும் கேரள மக்கள்!

திருவனந்தபுரம் (10 மார்ச் 2020): இத்தாலியிலிருந்து கேரள வந்த ஐந்து பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததை அடுத்து பத்தனம் திட்ட பகுதியே தனிமைப் படுத்தப் பட்ட சூழலில் உள்ளது. இத்தாலியில் இருந்து கேரளம் திரும்பிய ஒரே குடும்பத்தினருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில், அதே விமானத்தில் வந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இது இப்படியிருக்க பத்தனம்திட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் 1116 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதி மக்களில் கொரோனா அறிகுறிகளுடன்…

மேலும்...

கொரோனா வைரஸ் – கேரளாவில் ஒரே நாளில் 85 பேர் மருத்துவமனையில் அனுமதி!

திருவனந்தபுரம் (09 மார்ச் 2020): கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா அறிகுறிகளுடன் ஒரே நாளில் 85 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் இருந்து கேரளம் திரும்பிய ஒரே குடும்பத்தினருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில், அதே விமானத்தில் வந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இது இப்படியிருக்க பத்தனம்திட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் 1116 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா அறிகுறிகளுடன் 85 பேர்…

மேலும்...

திருச்சிக்கு வந்த பயணி விமானத்தில் நடு வானில் மரணம்!

திருச்சி (09 மார்ச் 2020): மலேசியாவிலிருந்து திருச்சிக்கு வந்த பயணி ஒருவர் விமானத்தில் நடு வானில் உயிரிழந்துள்ளார். மலேசியாவில் இருந்து திருச்சிக்கு இன்று அதிகாலை 5.30 மணிக்கு தனியார் விமானம் புறப்பட்டு வந்தது. அதில் 180 பயணிகள் பயணித்தனர். கொரோனா வைரஸ் உஷார் நடவடிக்கையாக விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளுக்கும் முகக்கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது. விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் விமானத்தில் இருந்த மலேசியா கோலாலம்பூர் சுபங்ஜெயா பகுதியை சேர்ந்த சென்னையா (வயது 65) என்ற பயணி…

மேலும்...

இந்தியாவில் கொரோனாவால் 43 பேர் பாதிப்பு!

புதுடெல்லி (09 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனாவிற்கு 43 பேர் பாதிக்கப்படுள்ளனர். கடந்த வருடம் இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகில் 97 நாடுகளில் பரவி விட்டது. 3 ஆயிரத்து 500-க்கு மேற்பட்டோர் பலியாகி விட்டனர். ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தநிலையில், இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...

சவூதியில் உள்ள அனைத்து கல்விக் கூடங்களும் மூடல்!

ரியாத் (09 மார்ச் 2020): சவூதியில் உள்ள அனைத்து கல்விக் கூடங்களும் இன்று (திங்கள் கிழமை) முதல் அடுத்த அறிவிப்பு வரும்வரை மூடப்படுகின்றன. சீனாவிலிருந்து பரவி, உலகையே அச்சறுத்தும் கொரோனா வைரஸ் எந்த நாட்டையும் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில் பல நாடுகள் இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் சவூதியில் ஏற்கனவே உம்ரா, சுற்றுலா வரும் வெளிநாட்டவர்களுக்கு தற்காலிக தடை, விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது, சவூதியில் உள்ள அனைத்து…

மேலும்...

கேரளாவில் மேலும் ஐந்து பேருக்கு கொரோனா பாதிப்பு!

திருவனந்தபுரம் (08 மார்ச் 2020): கேரளாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் இருந்து கேரளம் திரும்பிய 3பேர் உட்பட பத்தினம் திட்டாவை சேர்ந்த 5 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளத்தில் ஏற்கெனவே 3 பேருக்கு கரோனா உள்ள நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. இத்துடன் சேர்த்து நாட்டில் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை தற்போது 39-ஆக உள்ளது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா…

மேலும்...

ஓமனிலிருந்து தமிழகத்தில் நுழைந்த கொரோனா வைரஸ்!

சென்னை (07 மார்ச் 2020): ஓமன் நாட்டிலிருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து துவங்கிய கொரோனா வைரஸ் தாக்கம், பல்வேறு நாடுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை பொருத்த அளவில் இந்த பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது நேற்றைய நிலவரப்படி 31 பேர் இந்த பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தைப் பொருத்தவரை யாரும் அச்சப்பட தேவையில்லை என்று அரசு கூறியிருந்தது. எனினும் எச்சரிக்கையாகவே அரசு உள்ளது. இந்நிலையில் ஓமன் நாட்டில்…

மேலும்...