எஸ்டிபிஐ தலைவர் கொலை வழக்கில் மேலும் ஒரு ஆர் எஸ் எஸ் தலைவர் கைது!

ஆலப்புழா (27 டிச 2021): எஸ்டிபிஐ தலைவர் ஷான் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மறைவிடத்தை அமைத்து கொடுத்ததற்காக ஆர்எஸ்எஸ்ஸைச் சேர்ந்த மேலும் ஒரு தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். மலப்புரம் வட்டத்தில் உள்ள ஆலுவா என்ற ஊரைச் சேர்ந்த அனீஷ் என்பவரை, கொலையாளிகளுக்கு புகழிடம் கொடுத்ததற்காக காவல் துறையினர் கைது செய்தனர். ஷான் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆலுவா ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் பதுங்கியிருந்து தப்பிச் செல்ல உதவியவர் அனீஷ். இதன் மூலம் ஷான் வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 15…

மேலும்...

பாஜக பிரமுகர் கொலை தொடர்பாக 4 எஸ்டிபிஐயினர் கைது!

ஆலப்புழா (21 டிச 2021): கேரள மாநிலம் ஆலப்புழாவில் பாஜக தலைவர் ரஞ்சித் ஸ்ரீனிவாஸ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் எஸ்டிபிஐ கட்சியினர் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு பைக்கையும் காவல்துறையினர் கைப்பற்றினர். சரியான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதனிடையே, ஆலப்புழா மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144ன் கீழ் அறிவிக்கப்பட்டத் தடை உத்தரவு டிசம்பர் 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்ட…

மேலும்...

எஸ்டிபிஐ தலைவர் கொலையில் ஆர்எஸ்எஸுக்கு தொடர்பு – காவல்துறை!

ஆலப்புழா (20 டிச 2021): கேரளாவில் நடந்த எஸ்டிபிஐ தலைவர் ஷான் கொலையில் இருவர் கைது கைது செய்யப்பட்ட இருவரும் தீவிர ஆர்எஸ்எஸ் அமைப்பினர் என போலீசார் தெரிவித்தனர். எச்டிபிஐ தலைவர் ஷான் கொலை செய்யப்பட வழக்கில் ரதீஷ், பிரசாத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக ஷான் கொலையில் அவரை நன்கு அறிந்தவர்களே கொலை செய்திருக்கக் கூடும் என போலீசார் விசாணையை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. ஆதாரங்களின்படி, ரதீஷ் மற்றும்…

மேலும்...

கேரளா தொடர் கொலை – கோவையில் வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

கேரளா தொடர் கொலை – கோவையில் வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு! கோவை (20 டிச 2021): கேரளாவில் எஸ்டிபிஐ மற்றும் பாஜக பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து கோவையில் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. கேரளா, ஆலப்புழாவில் எஸ்.டி.பி.ஐ., கட்சி மாநில செயலர் ஷான் நேற்று முன்தினம் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடந்து, 12 மணி நேரத்துக்குள் பா.ஜ.,வை சேர்ந்த ரஞ்சித் ஸ்ரீனிவாசன் என்பவரை மர்ம நபர்கள் கொலை செய்தனர். இதனால்…

மேலும்...

கேரளாவில் எஸ்டிபிஐ மற்றும் பாஜக தலைவர்கள் படுகொலை – 50 பேர் கைது!

ஆலப்புழா (19 டிச 2021): கேரளாவில் எஸ்டிபிஐ மற்றும் பாஜக பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டது விவகாரத்தில் இரு கொலை தொடர்பிலும் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவில் ஆலப்புழாவில் நேற்று இரவு எஸ்டிபிஐ தலைவர் கே.எஸ்.ஷான் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் இருப்பதாக எஸ்டிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் இன்று காலை பாஜகவின் மாநில நிர்வாகி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். இதற்கிடையே பாஜக பிரமுகர் கொலையில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில்…

மேலும்...

திருச்சி போலீசை கொலை செய்தது என்? – கைதான மணிகண்டன் பரபரப்பு வாக்குமூலம்!

திருச்சி (23 நவ 2021): சப்-இன்ஸ்பெக்டரை வெட்டிக்கொன்றது  குறித்து கைதான மணிகண்டன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளான். திருச்சி மாவட்டம், நாவல்பட்டு போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான மணிகண்டன் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:- கைதான மணிகண்டன் ஆடுகளை திருடி விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டவர். ஆடுகளை சமயபுரம் ஆட்டுச்சந்தை உள்ளிட்ட சந்தைகளிலும், இறைச்சி கடைகளிலும் விற்று வந்துள்ளார். இதற்கு துணையாக உறவுமுறையான 14 வயது சிறுவனையும்…

மேலும்...

கோழி பொரியல் செய்ய மறுத்தற்காக மனைவியை கொலை செய்த கணவன்!

பெங்களூரு (24 ஆக 2021): கர்நாடகாவில் கோழி பொரியல் செய்ய மறுத்தற்காக கணவனே மனைவியை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 30 வயதான முபாரக் பாஷா என்பவரின் மனைவி ஷிரின் பானு. வீட்டில் மகளை காணவில்லை என்பதை அறிந்து பெற்றோர் தங்கள் மகளைக் காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தனர். இதனை அடுத்து முபாரக் பாஷாவைப் பிடித்து போலீசார் விசாரித்த வகையில் பாஷா போலீசாரிடம், “ஆகஸ்ட் 18 அன்று ஷிரினிடம் கோழி பொரியல் சமைக்கச்…

மேலும்...

சவூதியில் இந்தியரை கொலை செய்த சவூதி நாட்டவருக்கு மரண தண்டனை!

ஜித்தா (10 ஜுலை 2021): சவுதியில் இந்தியரை கொலை செய்த, சவூதி நாட்டவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் அமீர் அலி. இவர் சவூதி அரேபியா ஜித்தாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் கணக்கராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த ஒரு வருடம் முன்பு அவரது சக தொழிலாளரான சவூதி நாட்டை சேர்ந்த ஃபுஆத் நூஹ் அப்துல்லாஹ் என்பவரால் படுகொலை செய்யப்படார். சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்களின் சாட்சிகளின் அடிப்படையில் கீழ் நீதிமன்றம் முதல்…

மேலும்...

ஹத்ராஸ் தலித் சிறுமி வன்புணர்வு வழக்கில் திடீர் திருப்பம்!

லக்னோ (18 டிச 2020): உத்தரபிரதேசம் ஹத்ராஸில் இளம் பெண் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லபட்டதை சிபிஐ உறுதி செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் அடிப்படையில் மத்திய புலனாய்வுப் பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஹத்ராஸில் ஒரு தலித் சிறுமி நான்கு இளைஞர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) கண்டறிந்துள்ளது. கற்பழிப்பு மற்றும் கொலை குற்றச்சாட்டில் ஹத்ராஸில் உள்ள நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை…

மேலும்...

தூத்துக்குடி அருகே பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை – 6 பேர் கைது!

தூத்துக்குடி (5 நவ 2020): தூத்துக்குடி அருகே பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரை அருகேயுள்ள தெற்கு கோட்டூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ராமைய்யா தாஸ் (51). பாஜக தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவருக்கு சொந்தமான நிலத்தில், தென்திருப்பேரை கோனார் தெருவைச் சேர்ந்த இசக்கி (25) என்பவரின் மாடுகள் மேய்ந்துள்ளது. இதனை ராமையா தாஸ் தட்டிக் கேட்டதால்…

மேலும்...