கொரோனா வைரஸ் – தனிமைப்படுத்தல் விதிகளை மீறினால் 5 வருடம் சிறைத் தண்டனை!

துபாய் (20 மார்ச் 2020): கொரோனா வைரஸ் நோய் தாக்கப்பட்டவர்கள் அல்லது அந்த நோயின் அறிகுறி இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின்படி தனிமைப்படுத்தலுக்கு (Quarantine) உட்பட வேண்டும் என்றும் அந்த விதிகளை மீறினால் அவர்களுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் ஐக்கிய அரபு அமீரக அரசு எச்சரித்துள்ளது. உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் சீனாவில் உருவாகி உலகத்தின் பல நாடுகளை தாக்கி, உயிர்களை காவு வாங்கி வருகிறது. சீனா, தென்கொரியா, ஈரான், இத்தாலி, இந்தியா,…

மேலும்...

கொரோனா குறித்து வீண் வதந்தி – ஹீலர் பாஸ்கர் கைது!

கோவை (20 மார்ச் 2020): கொரோனா வைரஸ் குறித்து வீண் வதந்தி பரப்பியதாக ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் நிலையில், ஹீலர் பாஸ்கர் கொரோனா குறித்து பேசும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் “இலுமினாட்டிகளின் திட்டமிட்ட சதிதான் கொரோனா. நம்முடைய மக்கள் தொகையைக் குறைக்கத்தான் இப்படிச் செய்கிறார்கள். ரசாங்கம்தான் விடுமுறை அளித்துள்ளது. நாம் நன்றாகத்தான் இருக்கிறோம். நோய் பாதிப்பு இல்லாதவர்களையும் அழைத்துச் சென்று, ஊசி போட்டு…

மேலும்...

கேரளாவில் கொரோனா வைரஸ் காரணமாக பத்தாம் வகுப்பு பிளஸ் டூ தேர்வுகள் ஒத்தி வைப்பு!

திருவனந்தபுரம் (20 மார்ச் 2020): கேரளாவில் கொரோனா பரவல் காரணமாக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கியுள்ளது. இந்தச் சூழலில், கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன. தற்போது இந்த வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கரோனாவால்…

மேலும்...

உலக அளவில் கொரோனா பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது!

ரோம் (20 மார்ச் 2020): கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை உலக அளவில் 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் சீனாவில் உருவாகி உலகத்தின் பல நாடுகளை தாக்கி, உயிர்களை காவு வாங்கி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை190 ஐ எட்டியுள்ளது.. சீனா, தென்கொரியா, ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க உலகம் முழுவதும் உள்ள அந்தந்த…

மேலும்...

கொரோனாவை எதிர் கொள்ள கேரள அரசு அதிரடி நடவடிக்கைகள்!

திருவனந்தபுரம் (20 மார்ச் 2020): கொரோனா வைரஸை எதிர் கொள்ள ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கி கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கியுள்ளது. இந்தச் சூழலில், கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன. தற்போது இந்த வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில்…

மேலும்...

கொரோனாவுக்கு இந்தியாவில் ஐந்தாவது மரணம்!

புதுடெல்லி (20 மார்ச் 2020): கொரோனா பாதிப்பால் இந்தியாவில் இதுவரை ஐந்து பேர் மரணம் அடைந்துள்ளனர். சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய ‘கொரோனா வைரஸ்’ தற்போதைய சூல்நிலையில் உலகையே உலுக்கி வருகிறது. உலகில் மொத்தம் 176 நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் இந்த நோயினால் இதுவரை 190 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த நோய்க்கு வெள்ளிக்கிழமை காலை வரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஜெய்ப்பூரில் இத்தாலியை சேர்ந்த ஒருவர் இந்த நோய்க்கு உயிரிழந்ததன் மூலம் கொரோனாவுக்கு இந்தியாவில் பலி…

மேலும்...

பிளஸ் டூ பொதுத் தேர்வு மார்ச் 20-ல் திட்டமிட்டபடி தொடங்கும் – பள்ளி கல்வித்துறை!

சென்னை (20 மார்ச் 2020): பிளஸ் டூ பொதுத் தேர்வு திட்டமிட்டபடி மார்ச் 20 ஆம் தேதி தொடங்கும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் தேர்வில் மாற்றம் எதுவும் வரலாம் என எதிர் பார்க்கப் பட்டது. ஆனால் இது குறித்து அவை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் திட்டமிட்ட படி நாளை(மார்ச்-20) பிளஸ் 2 பொது தேர்வுகள் நடத்தப்படும். மேலும்…

மேலும்...

குவைத் பள்ளி கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை விடுமுறை நீடிப்பு!

குவைத் (19 மார்ச் 2020): குவைத் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் நிலையில், வளைகுடாவிலும் அது அதிவேகத்தில் பரவி வருகிறது. குவைத்தில் இதுவரை 148 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை விடுமுறை இடப்பட்டுள்ளதாக குவைத் அரசின் செய்தி தொடர்பாளர் தாரிக் அல் முஜ்ராம் வியாழக்கிழமை அன்று தெரிவித்தார்….

மேலும்...

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் மூன்றாக உயர்வு!

சென்னை (19 மார்ச் 2020): தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதன் மூலம் கரோனா பாதிப்பு மூன்றாக உயர்ந்திருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த தகவலைத் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது, அயர்லாந்தில் இருந்து தமிழகம் வந்த 21 வயது மாணவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கரோனா பாதித்தவர்களின்…

மேலும்...

உலகப்போரின் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் – பிரதமர் மோடி உரை!

புதுடெல்லி (19 மார்ச் 2020): கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட உலகப் போரின் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் சுமார் 173 நாடுகளில் பரவியுள்ள கரோனாவால் 2.21 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் பலியானோர் எண்ணிக்கை 9000 ஐ கடந்துள்ளது. இந்த வைரசால் இந்தியாவில் 167 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அந்த உரையில்,…

மேலும்...