விவசாயி எடப்பாடி டெல்லியில் விவசாயிகளை சந்தித்து பேச தயாரா? – ஸ்டாலின் கேள்வி!

சென்னை (21 மார்ச் 2021): தன்னை விவசாயி என கூறிக்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி, டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்தித்து பேச தயாரா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், செய்யூர், மதுராந்தகம், உத்திரமேரூர், காஞ்சிபுரம் தொகுதி திமுக மற்றும் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் உத்திரமேரூரில் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தற்போது முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி தனது…

மேலும்...

பாஜக அண்ணாமலை, சைதை துரைசாமி வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு!

சென்னை (20 மார்ச் 2021): தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. இந்நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதே போல சைதாப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியின் வேட்புமனுவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை தன் மீதுள்ள வழக்குகளை மறைத்துள்ளார் என்றும் எனவே மனுவை ஏற்கக்கூடாது என திமுக, சுயேச்சை வேட்பாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதே போல சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்…

மேலும்...

எடப்பாடிக்கு எதிராக களமிறங்கிய 50 அதிமுக எம்.எல்.ஏக்கள் – சிக்கித்தவிக்கும் முதல்வர்!

சென்னை (19 மார்ச் 2021): அ.தி.மு.க.,வில், 50 எம்.எல்.ஏ.,களுக்கு, ‘சீட்’ வழங்கவில்லை. இவர்கள் அனைவரும் எடப்பாடிக்கு எதிராக களமிறங்கியுள்ளனர். சிலர் கட்சியை விட்டு விலகி வேறு கட்சிகளுக்கு தாவிவிட்டனர். சிலர் அதிமுகவை எதிர்த்து சுயேட்சையாக களம் காணுகின்றனர். சிலர்  தங்களது ஆதரவாளர்களுடன் கட்சிக்குள் இருந்துகொண்டே அதிமுகவை கவிழ்த்த உள் குத்து வேலைகளில் இறங்கிவிட்டனர். சாத்துார் எம்.எல்.ஏ., ராஜவர்மன், உடனடியாக, தினகரன் பக்கம் சாய்ந்தார். அங்கே, ‘சீட்’ வாங்கி, சாத்துாரில் ஆளும் கட்சியை எதிர்த்து நிற்கிறார். வீதி வீதியாக…

மேலும்...

ஒலை குடிசை வீட்டிலிருந்து ஒரு எம்.எல்.ஏ வேட்பாளர்!

திருத்துரைப்பூண்டி (18 மார்ச் 2021): திருத்துரைப்பூண்டி தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மாரிமுத்து மிகவும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த வேட்பாளர் என அறியப்படுகிறார். 49 வயதான மரிமுத்து 1994 முதல் அரசியலில் இருந்து வருகிறார். இவரது சொந்த ஊர் கடவக்குடி என்ற விவசாய கிராமம். ஓலை குடிசையில் வாழும் மாரிமுத்துவின் வீடு கடந்த காஜா சூறாவளியில் சேதமடைந்தது. பழுதுபார்க்கக்கூட முடியாதபடி தார்ப்பாய் மூலம் மட்டுமே வீடு சரிசெய்யப்பட்டு இன்றும் வாழ்ந்து வருகிறார். மாரிமுத்துவின்…

மேலும்...

அங்கேயும் ஐடி ரெயிடாமே என்ன திடீர்னு இப்படி?

சென்னை (18 மார்ச் 2021): தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அதிமுக பிரமுகர்கள் வீட்டில் ஐடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.. கடலூரில் அதிமுக பிரமுகர்கள் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. கடலூரில் மொத்தம் 6 இடங்களில் 7 மணி நேரத்திற்கு மேலாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. கடலூரில் அதிமுக சார்பில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் போட்டியிடும் நிலையில், அவரின் ஆதரவாளர்களான சரவணன், மதியழகன், பாலகிருஷ்ணன், சுரேஷ், தமிழ்செல்வன் ஆகியோரது வீடுகளில்…

மேலும்...

ஓபிஎஸ்ஸை சிறை பிடித்த மக்கள் – தேனியில் பரபரப்பு!

தேனி (18 மார்ச் 2021): தேனியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓபிஎஸ், அங்கு வாக்கு சேகரிக்கச் சென்றபோது பொது மக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு நிலவியது. தேனி மாவட்டத்தில் உள்ள தன் சொந்த தொகுதியான போடி தொகுதியில் மூன்றாவது முறையாக துணை முதல்வர் ஓபிஎஸ் களமிறங்கியுள்ளார். அவர் மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நிலையில் போடியில் உள்ள குலாலர் பாளையம் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில், ஒரு சமுதாய பிரிவினரை சந்தித்து ஆதரவு திரட்டச்…

மேலும்...

நாகூர் அருகே பரபரப்பு – பெண் வேட்பாளர் கைது!

நாகூர் (17 மார்ச் 2021): நாகூர் அருகே சுயேச்சை வேட்பாளரும் பிரபல தாத்தாவுமான எழிலரசியை போலீசார் கைது செய்துள்ளனர். காரைக்காலை அடுத்த திருமலைராயன்பட்டினத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்… இவர் ஒரு பிசினஸ்மேன்.. இவரது 2வது மனைவிதான் எழிலரசி.. 45 வயதாகிறது.. இவர் ஒரு தாதா. இவர் மீது . முன்னாள் அமைச்சர் சிவக்குமார், ராதாகிருஷ்ணனின் முதல் மனைவி வினோதா, திருமலைராயன்பட்டினத்தை சேர்ந்த அய்யப்பன் ஆகியோரை கூலிப்படையை வைத்து கொலை செய்தல் உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. இதனை அடுத்து…

மேலும்...

பிரதமருடன் ஆலோசனை – முதல்வர் எடப்பாடி புறக்கணிப்பு!

சென்னை (17 மார்ச் 2021): இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் பிரதமர் மோடி, மாநில முதல்வர்களோடு இன்று ஆலோசிக்கிறார். இந்தநிலையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் இருப்பதால், பிரதமருடனான ஆலோசனையில் அவர் பங்கேற்கமாட்டார் எனவும், அவருக்குப் பதிலாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பங்கேற்பார் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளன அதேபோல மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே திட்டமிடப்பட்ட பிரச்சாரக்…

மேலும்...

சீட்டுகளை வேண்டாம் என திருப்பிக் கொடுத்த சரத்குமார் – அதிர்ச்சியில் கமல்!

சென்னை (16 மார்ச் 2021): வரும் சட்டமன்ற தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் சரத்குமார் கட்சியுடன் இணைத்து கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்நிலையில் சரத்குமார் கட்சிக்கு 40 இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் 37 இடங்களுக்கு மட்டும் வேட்பாளர்களை அறிவித்த சரத்குமார், மீதமுள்ள 3 இடங்களை கமலிடம் திருப்பி கொடுத்துவிட்டார். இதுகுறித்து சரத்குமார் தெரிவிக்கையில், கமல் கட்சி அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தில் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் சரத்குமார் கோரிக்கை வைத்தபடி சீட்டுகளை வழங்கிய…

மேலும்...

தமிழகத்தில் உவைஸி கட்சி வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு!

சென்னை (15 மார்ச் 2021): தமிழகத்தில் அ ம.மு.க. கூட்டணியில் உள்ள ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் (AIMIM) கட்சிக்கு 3 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது இறுதி செய்யப்பட்டு தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிலையில், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி சார்பில் போட்டியிடும் 3 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் வக்கீல் அஹமத், சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதியில் முஜிபுர் ரஹ்மான், கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதியில் அமீனுல்லா…

மேலும்...