சென்னையில் காட்டுத்தீயாய் பரவும் கொரோனா – ஒரே நாளில் 24 பேர் பலி!

சென்னை (26 ஜூன் 2020): சென்னையில் கொரோனா பரவல் தொடர்ந்து வரும் நிலையில் இன்று மட்டும் 24 பேர் பலியாகியுள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவில் அதி வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிர, டெல்லியை அடுத்து தமிழகத்தில் கொரோனா அதிக அளவில் பரவி வருகிறது. குறிப்பாக சென்னை மிகவும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்தனர். கே.எம்.சி. மருத்துவமனையில் 4 பேரும், ஆயிரம்…

மேலும்...

இன்று முதல் தீவிர ஊரடங்கு அமல்!

சென்னை (21 ஜூன் 2020): இன்று முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவி வரும் கரோனாவை கட்டுப்படுத்த இந்த மாவட்டங்களில் உள்ள சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தளர்வுகள் விலக்கிக் கொள்ளப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005ன் கீழ் 19.06.2020 அதிகாலை 00 மணி முதல் 30.06.2020 இரவு 12 மணி வரை…

மேலும்...

சென்னை உட்பட நான்கு மாவட்டங்களுக்கு வரும் 19 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு!

சென்னை (15 ஜூன் 2020): சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வரும் 19-ம் தேதி முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலாகிறது. ஜூன் 19 முதல் 30 வரை 12 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

கொரோனா வார்டில் மலர்ந்த காதல் – ஆத்திரம் அடைந்த மருத்துவர்கள்!

சென்னை (14 ஜூன் 2020): “நாங்கள் உயிரை பணயம் வைத்து சிகிச்சை அளித்து வருகிறோம் உங்களுக்கு இப்போது காதல் கேட்குதா?” என கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் கோபம் அடைந்துள்ளனர். சென்னையில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் ஏராளமானோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு ஒரு இளைஞரும் ஒரு இளம் பெண்ணும் சிகிச்சை பெற்று வந்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. சிகிச்சை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும்போதே காதலும் ஒரு பக்கம்…

மேலும்...

சென்னையில் இதுவரை ஐந்து கொரோனா நோயாளிகள் தப்பியோட்டம்!

சென்னை (10 ஜூன் 2020): சென்னையில் ஏற்கனவே நான்கு கொரோனா நோயாளிகள் தப்பியோடிய நிலையில் தண்டையார் பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயது சிறுவன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். சென்னை காசிமேடு சிறுவர் காப்பகத்தில் தங்கியிருந்த 35 சிறுவர்களுக்கு, கடந்த 7-ம் தேதி, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கிருந்து, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவர் தப்பியோடியுள்ளார். ஏற்கனவே, சென்னை ராஜீவ் காந்தி…

மேலும்...

சென்னை குறித்து அதிர்ச்சித் தகவல் – பிரபல பத்திரிகையாளரின் பதற வைக்கும் பேட்டி!

சென்னை (08 ஜூன் 2020): சென்னையில் பரவும் கொரோனா குறித்தும், வெளியில் சுற்றாதீர்கள், மருத்துவமனைகளில் உரிய படுக்கைகள் இல்லை என்று கண்ணீர் உடன் பேசியுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அதிலும் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளன. இதுகுறித்து பிரபல பத்திரிகையாளர் வரதராஜன் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, “ஒரு முக்கியமான விஷயம். இன்று காலை எனக்கும், என் தம்பிக்கும்…

மேலும்...

சென்னை கொத்தவால் சாவடி மூடல்!

சென்னை (07 ஜூன் 2020): நாடு முழுவதும் தமிழகம் உள்பட கொரோனா பாதிப்பு எதிரொலியாக ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் மொத்தம் 1,458 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரசுக்கு 19 பேர் பலியாகி உள்ளனர். அவர்கள் அனைவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதனால் பலி எண்ணிக்கை 251 ஆக உயர்ந்து உள்ளது. சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2…

மேலும்...

பைக்கில் இருவர் பயணித்தால் அபராதம் – எச்சரிக்கை!

சென்னை (03 ஜூன் 2020): கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பைக்கில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தினசரி 500 முதல் 950 வரை நோய் தொற்று உயர்ந்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மாநகராட்சி எல்லைக்குள் வசிக்கும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியே கடைபிடிக்க வேண்டும்…

மேலும்...

சென்னையிலிருந்து வேறு மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்!

சென்னை (31 மே 2020): கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில், கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதலுக்கான கூடுதல் நெறிமுறைகளுடன் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு… மண்டலங்களுக்குள் பயணம் மேற்கொள்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை. ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலம் செல்பவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே சோதனை. சென்னையில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு செல்கிற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம்….

மேலும்...

தமிழகத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா பரிசோதனை!

சென்னை (28 மே 2020): தமிழகத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 18 ஆயிரத்து 545 பேர் கொரோனா நோய் தொற்று உறுதியானதாகவும் அறிக்கை வெளியாகியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 508 ஆண்களும், 309 பெண்கள் என 817 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 137 பேர்…

மேலும்...