சென்னைக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – மருத்துவக் குழு பகீர் தகவல்!

சென்னை (28 மே 2020): சென்னையில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டும் என மருத்துவக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் வரலாறு காணாத அளவில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருகிறது. தினமும் 500 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் வைரஸ் கட்டுப்படுத்த முடியாததால், வருவாய் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 15 மண்டலங்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் தொடர்ந்து…

மேலும்...

சென்னையில் கட்டுப்படாத கொரோனா – சிறப்பு வார்டாக மாறும் விளையாட்டு அரங்கம்!

சென்னை (24 மே 2020): சென்னையில் கொரோனா பரவல் கட்டுப்படாத நிலையில் நேரு விளையாட்டு அரங்கை கொரோனா சிறப்பு வார்டாக மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் புதிதாக கொரோனா பாதிப்படைந்தவர்கள் பட்டியலில் சென்னை மட்டுமே தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க நகர், தேனாம்பேட்டை ஆகிய 4 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதன்படி சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில், ராயபுரத்தில் ஒரே நாளில் 131 பேருக்கு கொரோனா…

மேலும்...

சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவில் அர்ச்சகர் கைது!

சென்னை (23 மே 2020): சென்னையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த கோவில் அர்ச்சகர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மடிப்பாக்கம் அடுத்த உள்ளகரம் மண்டபம் இணைப்பு சாலையில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வந்தவர் சிவக்குமார்(59). இவர் சென்னை அண்ணா சாலை எல்.ஐ.சி பின்புறம் உள்ள அன்புக்குறிய அம்மன் கோயிலில் அர்ச்சகராக உள்ளார். நேற்று முன்தினம் சிவகுமார் வீட்டின் பகுதியில் வசித்து வந்த 10 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து…

மேலும்...

தமிழகத்தில் ஆட்டோக்கள் ஓட அனுமதி!

சென்னை (22 மே 2020): தமிழகத்தில் சென்னையைத் தவிர பிற இடங்களில் நிபந்தனையுடன் ஆட்டோக்‍களை இயக்‍க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்‍கையாக, கடந்த 2 மாதங்களுக்‍கும் மேலாக தமிழகத்தில் பிற வாகனங்களுடன் ஆட்டோக்‍களுக்‍கும் தடை விதிக்‍கப்பட்டது. இதனால் ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். எனவே, அவர்களது நிலையைக்‍ கருத்தில் கொண்டு, ஆட்டோக்‍களை இயக்‍க அனுமதி அளிக்‍க வேண்டுமென, அ.ம.மு.க பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் மற்றும் பிற கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தினர்….

மேலும்...

டெல்லியில் சிக்கித் தவித்த தமிழக தப்லீக் ஜமாத்தினர் சென்னை புறப்பாடு!

புதுடெல்லி (16 மே 2020): கொரோனா தொற்று எதிரொலியாக தனிமைப் படுத்தலில் இருந்த 700 தமிழக தப்லீக் ஜமாத்தினர் முழு தனிமைப் படுத்தல் முடிந்து சிறப்பு ரெயில் மூலம் தமிழகம் புறப்பட்டனர். டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் இருந்த தமிழக தப்லீக் ஜமாத்தினர் பலர் ஊரடங்கு காரணமாக தமிழகம் வர முடியாமல் இருந்தனர். மேலும் அவர்கள் பல்வேறு தனிமைபடுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் தமிழக அரசிற்கு தமிழக தப்லீக் ஜமாத்தினரை தமிழகம் மீட்டு வரவேண்டி பல்வேறு தரப்பிலும்…

மேலும்...

சென்னையில் கொரோனா பாதித்த புற்று நோயாளிகள் குணமடைந்தனர்!

சென்னை (14 மே 2020): சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகளில் புற்று நோய் பாதித்தவர்கள் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளில் பலர் எவ்வித தீவிர விளைவுகளும் இன்றி குணமடைந்து வீடு திரும்பியவர்கள் அதிகம். அதில் குறிப்பாக வயதானவர்களுக்கும், ஏற்கனவே வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு நோய் தீவிர தன்மையடைந்து கடுமையான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருந்தது. அதில் குறிப்பாக இதுவரை 22 புற்றுநோய்…

மேலும்...

முஸ்லிம்களுக்கு எதிரான விளம்பரம் – சென்னை பேக்கரி உரிமையாளர் கைது!

சென்னை (13 மே 2020): முஸ்லிம்களுக்கு எதிராகவும், முஸ்லிம் வெறுப்பை தூண்டும் விதமாக விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது செய்யப் பட்டுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள ஜெயின் பேக்கரிஸ் அண்ட் கன்ஃபெக்‌ஷனரிஸ் என்ற பேக்கரி, ராஜஸ்தானி ஹோம்மேட் வீட்டுத் தயாரிப்பில் பேக்கரி பொருட்கள் செய்து தரப்படும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. அதோடு, மேல் பகுதியில் ஆர்டரின் பேரில் பொருட்கள் ஜெயின்களால் செய்யப் படுகிறது. அத்துடன், மதத் துவேஷத்தை வெளிப்படுத்தும் வண்ணம், “முஸ்லிம் பணியாளர்கள் இல்லை”…

மேலும்...

சென்னை டிஜிபி அலுவலகத்தில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (06 மே 2020): சென்னை டிஜிபி அலுவலகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை டிஜிபி அலுவலகத்தில், துப்புரவு தொழிலாளர்கள் 3 பேர், தொழில்நுட்ப பிரிவில் ஒருவர், உளவுத்துறை கட்டுப்பாட்டு அறையில் 2 பேர், மோட்டார் வாகன பிரிவில் ஒருவர் என 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, டிஜிபி அலுவலகத்தில் இன்று மட்டும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், டிஜிபி அலுவலகத்தில்…

மேலும்...

சென்னையில் அனைத்து கடைகளையும் திறக்க மாநகராட்சி அனுமதி!

சென்னை (06 மே 2020): சென்னையில் நாளை அனைத்து தனிக் கடைகளையும் திறக்க சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் ஒருபுறம் உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்க, இந்தியாவில், 42 ஆயிரத்து, 533 பேர், கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதில், 11 ஆயிரத்து, 706 பேர், குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்; 1,373 பேர் பலியாகி உள்ளனர்.கடந்த, 24 மணி நேரத்தில், 1,074 பேர், குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைவோர் விகிதம், 28 சதவீதமாக உயர்ந்துள்ளது….

மேலும்...

மே 7ஆ, தேதி மதுபானக் கடைகள் திறக்கப்படுமா?

சென்னை (05 மே 2020): தமிழகத்தில் வரும் 7-ம் தேதி டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை மாநகரக் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் அன்று கடைகள் திறக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு, மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதன்படி, சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் நிபந்தனைகளுடன் வரும் 7-ம் தேதி முதல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்தது….

மேலும்...