கொரோனாவால் அலறும் சென்னை – ஹாட் ஸ்பாட் ஆன கோயம்பேடு!

சென்னை (03 மே 2020): கடந்த 4 நாட்களாக சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. முழு ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பு காய்கறிகளை வாங்க வேண்டும் என்று கோயம்பேடு மட்டுமல்லாமல் மற்ற காய்கறி சந்தையிலும் மக்கள் குவிந்தனர். அதன் விளைவாக சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது என கூறப்படுகிறது. அதன் தாக்கத்தை சுகாதாரத்துறை வெளியிடும் பாதிப்பு விவரத்தில் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை பார்க்க முடிகிறது. இந்த 10…

மேலும்...

சென்னையில் பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!

சென்னை (02 மே 2020): சென்னையில் வடமாநில தொழிலாளர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறையாததால் ஊரடங்கை மேலும் 2 வாரம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில், சொந்த ஊருக்கு திரும்ப அனுமதி அளிக்கக்கோரி சென்னை கிண்டி, வேளச்சேரி, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள வடமாநில தொழிலாளர்கள் திடீரென ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி போலீஸ் வாகன முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. சிறப்பு ரெயிலை ஏற்பாடு…

மேலும்...

சென்னையை மிரட்டும் கொரோனா – காரணம் என்ன?

சென்னை (02 மே 2020): சென்னையில் இதுவரை இல்லாத அளவில் நேற்று மட்டும் 176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவிலும் அதிக அளவில் பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று உறுதி செய்யப்பட்ட 203 தொற்றுகளில் 176 தொற்று சென்னையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் பாதித்துள்ள 1082 நபர்களில், 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், குணமடைந்துள்ளவர்கள் எண்ணிக்கை 219-ஆக உயர்ந்துள்ளது சென்னையில் அதிகபட்சமாக திரு.வி.க நகர் மண்டலத்தில் 48 நபரும்,…

மேலும்...

தமிழகத்தில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா – ஒரே நாளில் 161 பேர் பாதிப்பு!

சென்னை (01 மே 2020): தமிழகத்தில், இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 161 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வரும் 3-ம் தேதிவரை நீட்டிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா வைரசின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து மூன்றாவது நாளாக கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று, இதுவரை இல்லாத அளவாக 161 பேருக்கு வைரஸ்…

மேலும்...

சென்னை கோயம்பேட்டில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!

சென்னை (29 ஏப் 2020): சென்னை கோயம்பேடு மார்கெட்டில்உள்ள வியாபாரிகள் மற்றும் தொழிலாளிகள் மேலும் மூவருக்கு கொரோனா உறுதி படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058-ஆக அதிகரித்துள்ளது. சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 673 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். சென்னை முதல் முறையாக மார்ச் 18-ஆம் தேதி டெல்லியில் இருந்து ரயிலில் மூலம் வந்த வடமாநில வாலிபருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதனிடையே சென்னை…

மேலும்...

சென்னையில் கொரோனா பாதித்த மருத்துவர் உயிரிழப்பு – தகனம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு!

சென்னை (13 ஏப் 2020): சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சைக்கு பெற்று வந்த மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 60 வயது மருத்துவர் ஒருவர் சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். உயிரிழந்த மருத்துவரின் உடலை தகனம் செய்ய அம்பத்தூர் மயானத்தில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சென்னையை அடுத்த திருவேற்காடு மயானத்தில் மருத்துவரின் உடலை தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும்...

கொரோனா பாதிப்பால் கீழக்கரையை சேர்ந்தவர் சென்னையில் மரணம்!

சென்னை (05 ஏப் 2020): கொரோனாவுக்கு தமிழகத்தில் நான்கு பேர் பலியாகியுள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவில் 3000 த்திற்கும் மேற்பட்டவர்களை தாக்கியுள்ளது. இதில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்து இருக்கிறது. இந்நிலையில் இந்த நிலையில், கொரோனா அறிகுறியுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72-வயது முதியவர் கடந்த 2 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்…

மேலும்...

சென்னையில் போராட்டங்கள் நடத்த போலீஸ் தடை!

சென்னை (14 மார்ச் 2020): சென்னையில் போராட்டம் நடத்த விதித்து பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் சனிக்கிழமை அன்று உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர், இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு நகர காவல் சட்டம் 41-வது பிரிவின்படி, சென்னை மாநகர காவல் எல்லையில் சில கட்டுப்பாடுகள் மார்ச் 14-ஆம் தேதி முதல் இம் மாதம் 29-ஆம் தேதி வரை 15 நாள்கள் விதிக்கப்படுகிறது. அதன்படி, பொது இடங்கள், போக்குவரத்து நெரிசல்மிக்க பகுதிகளில் போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், மனித…

மேலும்...

டெல்லி மக்களுக்காக சென்னை ஐடி ஊழியர்கள் நடத்திய அமைதி போராட்டம் -VIDEO

டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னையில் ஐ.டி.ஊழியர்கள் சிறுசேரி ஐ.டி ஊழியர்களின் மெழுகுவர்த்தி ஏந்திய அமைதிப் போராட்டம்.

மேலும்...

நாங்கள் அம்பேத்கரின் பிள்ளைகள், சாவர்க்கரின் பிள்ளைகளல்ல – ரஜினியை விளாசிய ஜேஎன்யூ மாணவர் தலைவர்!

சென்னை (23 பிப் 2020): மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் ரஜினிக்கு ஜே.என்.யு மாணவர் தலைவர் அய்ஷி கோஷ் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அனைவருக்குமான கல்வியை உறுதி படுத்த வேண்டும், கல்வியை தனியார்மயமாக்கக் கூடாது. கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கு பெற்ற ஜே.என்.யு. மாணவர் தலைவர் அய்ஷி கோஷ் செய்தியாளர்களிடம் பேசும்போது,…

மேலும்...