ரஜினியின் பெற்றோர் அவரது பிறப்பிடம் குறித்து வெளியிட தயாரா? – ஜவாஹிருல்லா சவால்!

சென்னை (06 பிப் 2020): நடிகர் ரஜினியின் பெற்றோர் அவரது பிறப்பிடம் குறித்து சான்றிதழ் தர தயாரா? என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பியுள்ளார். புதன் கிழமை அன்று சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “இஸ்லாமியர்கள் சிலரின் அரசியல் லாபத்திற்காக தூண்டிவிடப்படுகிறார்கள். சிஏஏவால் அவர்களுக்கு பாதிப்பு உள்ளதாக சித்தரிக்கப்படுகிறது. என்றார். மேலும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும், தேசிய மக்கள்தொகை பதிவேடு என்பது முக்கியமான…

மேலும்...

அராஜக செயலில் ஈடுபட்டவர்களுக்கு ஜவாஹிருல்லா கடும் கண்டனம்!

சென்னை (25 ஜன 2020): தந்தை பெரியார் சிலை உடைக்கப் பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கத்தில் தந்தை பெரியாரின் சிலையைக் கயவர்கள் சிலர் உடைத்துள்ளனர். இந்த சிலை உடைப்பு சம்பவத்தை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன். தந்தை பெரியார் தமிழகத்தில் சமூகநீதி தழைத்தோங்க அரும்பாடுபட்டவர். தமிழகத்தில் சமூகநீதி போராட்டத்தின் தலைவர் தந்தை பெரியார் தான். அவரின்…

மேலும்...

அதிர்ச்சி அளிக்கிறது – ஜவாஹிருல்லா அறிக்கை!

சென்னை (20 ஜன 2020): ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்கிற விதியை ரத்து செய்திருப்பது கண்டனத்திற்குரியது என்று மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மண்ணை மலடாக்கி விவசாய பூமியை நிர்மூலமாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கான அனுமதியை எளிமையாக்க மத்திய அரசு முடிவெடுத்து தற்போது ஹைட்ரோகார்பன் போன்ற நாசகார திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதியும், பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தவும் தேவையில்லை என அறிவித்திருப்பது…

மேலும்...

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவை புறக்கணிப்போம் – ஜவாஹிருல்லா அறிக்கை!

சென்னை (15 ஜன 2019): அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்படும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவை புறக்கணிக்க வேண்டும் என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்திய என்ற நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கியின் சார்பில் கடந்த ஜனவரி 11 அன்று தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தினசரிகளில் வாடிக்கையாளரை அறிவோம் (Know Your Customer KYC) குறித்த ஒரு விளம்பரம் வெளிவந்துள்ளது. இந்த விளம்பரத்தில் ஜனவரி 31க்குள் அந்த…

மேலும்...

தமிழக இஸ்லாமிய அரசியல் கட்சி தலைவர்கள் முதல்வருடன் சந்திப்பு!

சென்னை (10 ஜன 2020): குடியுரிமை சட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்று கோரிக்கையுடன் தமிழக இஸ்லாமிய அரசியல் கட்சி பிரமுகர்கள் முதல்வர் எடப்பாடியை சந்தித்துள்ளனர். குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் NRC & NPR போன்றவற்றை மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலையில் இதனை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் தமிழக…

மேலும்...