டாஸ்மாக் மூடல் – திறப்பதற்காக உச்ச நீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவு!

சென்னை (08 மே 2020): தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.இதனால் பல இடங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தினர். இதையடுத்து, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மதுக்கடைகளை திறந்தது ஆபத்தானது எனவும், உயர் நீதிமன்றத்தின் விதிமுறைகள் மதுக்கடைகளில் பின்பற்றப்படவில்லை எனவும் கோரி மக்கள் நீதி…

மேலும்...

டாஸ்மாக் கொடுமை – முதல்வர் மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

சேலம் (08 மே 2020): சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் டோக்கன் பள்ளியில் வைத்து வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இன்றுவரை அமலில் இருக்கும் நிலையில், நேற்று முதல் சாராய வியாபாரம், டாஸ்மாக் அமோகமாக நடைபெற்று வருகிறது. மது பிரியர்கள் எந்தவித விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஓமலூர் வட்டம், காமலாபுரம் ஊராட்சி ஒன்றிய அரசு மேல்நிலைப் பள்ளியில் நூற்றுக்கணக்கான குடிகாரர்களுக்கு,…

மேலும்...

குடிகாரர்களின் கொண்டாட்டம் – பொதுமக்களுக்கு திண்டாட்டம்!

சென்னை (07 மே 2020): என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என நினைத்தபடியே டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் ஆங்காங்கே விபத்துக்களும் நடக்க தொடங்கியுள்ளன. பலவித எதிர்ப்புகள் வந்தாலும் அரசு உறுதியாக இருந்து போலீஸ் பாதுகாப்புடன் மதுக்கடைகளை இன்று திறந்தது. ஆனால் எங்கும் சமூக விலகல் கடைபிடிக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் பயந்தபடியே வன்முறைகளும், விபத்துக்களும் நடக்க ஆரம்பித்துள்ளன.. மதுரை அலங்கநல்லூரில் கணவன் குடித்துவிட்டு வந்தார் என்பதற்காக அதிர்ச்சி அடைந்த மனைவியும், மகளும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துவிட்டனர்.. இப்போது…

மேலும்...

கொரோனா கொடுமையில் இப்போது இது அவசியமா?

சென்னை (04 மே 2020): கொரோனா வைரஸ் ஒரு புறம் பரவிக் கொண்டு இருக்க டாஸ்மாக் கடைகளை வரும் 7 ஆம் தேதி திறக்கவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்கூறி இருப்பதாவது: தமிழகத்தில் வரும் 7 ம் தேதி முதல் டாஸ்மாக்கடைகள் திறக்கப்படும். அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டுb செயல்பட வேண்டும். டாஸ்மாக்கடைகள் திறக்கப்பட்டாலும் பார்கள் திறக்க அனுமதிஇல்லை. மேலும் காலை 10 மணி முதல் மாலை 5மணி வரை மட்டுமே…

மேலும்...

குடிமகன்களுக்கு சோக செய்தி – டாஸ்மாக் அனைத்தும் மூடல்!

சென்னை (17 மார்ச் 2020): கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டாஸ்மாக் கடைகளை மார்ச் 31 ஆம் தேதி வரை மூட. தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் பார்களை மூடவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கவ் செய்யப்பட்டிருந்த நிலையில், தமிழக அரசு இவ்வாறு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும்...

வயிறு எரியுது – ராமதாஸ் வேதனை!

சென்னை (21 ஜன 2020): பொங்கல் அன்று மது விற்பனை 605 கோடிக்கு விற்பனை நடைபெற்றதை நினைத்து தனது “வயிறு எரிவதாக” பாமக தலைவர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இதுவரை இல்லாத அளவுக்கு பொங்கல் திருநாளில் ரூ.605 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி கேட்டதும் எனது வயிறு வேதனையில் எரிகிறது. குடித்தவனின் வயிறு அமிலத்தால் எரியும். அவன் குடும்பத்தின் வயிறு உணவின்றி பசியால் எரியும்….

மேலும்...

இவ்வருட பொங்கலுக்கு செம்ம பிஸினஸ் – எதில் தெரியுமா?

சென்னை (19 ஜன 2020): இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி டாஸ்மாக் மது விற்பனை சுமார் 606 கோடி ரூபாய் விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்படுவது வழக்கம். இந்தமுறையும் சுமார் ரூ.500 கோடி வரை இலக்கு வைத்து விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இலக்கை விட அதிக அளவில் மது விற்பனை ஆகியுள்ளது. அதாவது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகமாகியுள்ளது….

மேலும்...