டெல்லியில் பாஜகவுக்கு பலத்த அடி – கருத்துக் கணிப்பு தகவல்

புதுடெல்லி (08 பிப் 2020): டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மொத்தம் உள்ள 70 இடங்களில் அக்கட்சிக்கு 49 இடங்கள் வரை கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டைம்ஸ் நவ் 44 இடங்கள் ஆம் ஆத்மிக்கும், 26 இடங்கள் பாஜகவுக்கும் கிடைக்கும் என்றும், நியூஸ் எக்ஸ் ஆம் ஆத்மிக்கு 53 – 57 வரையிலும், பாஜகவுக்கு 11 – 17 இடங்கள் வரையிலும் கிடைக்கும்…

மேலும்...

டெல்லியில் மீண்டும் அதிர்ச்சி – இன்றும் ஒரு துப்பாக்கிச் சூடு!

புதுடெல்லி (07 பிப் 2020): டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷஹீன் பாக், ஜாமியா பல்கலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று டெல்லி ஜாஃப்ராபாத் துணிக் கடை ஒன்றின் மீது இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இரு சக்கர வாகனத்தில் ஹெல்மட் அணிந்து முகத்தை மறைத்து வந்த அவர்கள்,  தொடர்ந்து நான்கு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள்….

மேலும்...

டெல்லி தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிவசேனா ஆதரவு!

புதுடெல்லி (07 பிப் 2020): டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஆதரவளித்து சிவசேனா கருத்து வெளியிட்டுள்ளது. டெல்லியில் நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில் ஆம்ஆத்மி தலைவர் கெஜ்ரிவாலை ஆதரித்து சிவசேனா கருத்து கூறி உள்ளது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், டில்லி வளர்ச்சிக்காக பணியாற்றிவர் கெஜ்ரிவால். டில்லியை முன்மாதிரி மாநிலமாக மாற்றியவர் கெஜ்ரிவால் என கெஜ்ரிவாலை புகழ்ந்து கட்டுரை வெளியிட்டுள்ளது. பாஜக…

மேலும்...

ஷஹீன் பாக் ஜாலியன் வாலாபாக்காக மாறும் அபாயம் – உவைசி எச்சரிக்கை!

புதுடெல்லி (06 பிப் 2020): டெல்லி ஷஹின் பாக் போராட்டக் காரர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தக்கூடும் வாய்ப்பு இருப்பதாக ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி எச்சரிக்கை விடுத்துள்ளார். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் உள்ள ஷாஹீன் பாக் பகுதியில் கடும் குளிர் பனியையும் பொருட்படுத்தாமல் இடைவிடாது தொடர் போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் மற்றும் ஜனநாயக அமைப்பினர் கலந்துகொண்டுள்ளனர். இந்த போராட்டத்தால் வெறுப்படைந்துள்ள இந்துத்வா கும்பல்கள் போராட்டத்தை…

மேலும்...

பாஜகவுக்கே வாக்களியுங்கள் – அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி!

புதுடெல்லி (05 பிப் 2020): பாஜக கூறுவதுபோல் நான் பயங்கரவாதி எனில் தாமரை சின்னத்திற்கே வாக்களியுங்கள் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் வரும் பிப்.,08 ம் தேதி, சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரத்தின்போது, பாஜ எம்பி., பர்வேஷ் வர்மா டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை பயங்கரவாதி என கடுமையாக விமர்சித்தார். இதற்கிடையே டில்லியில் துப்பாக்கிச்சூடு நடத்திய கபில் குஜ்ஜார் என்பவர், ஆம்ஆத்மி உறுப்பினர் என டில்லி போலீஸ் கூறியதற்கு ஆம்ஆத்மி மறுப்பு தெரிவித்துள்ளது….

மேலும்...

போலீசா? பாஜக செய்தி தொடர்பாளரா? – டெல்லி போலீசை விளாசும் ஆம் ஆத்மி!

புதுடில்லி (05 பிப் 2020): டெல்லி போலீசார் பா.ஜ.கவின் செய்திதொடர்பாளரை போல் பேசுவதாக ஆம்ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் குற்றம்சாட்டி உள்ளார். டெல்லியில் ஷாஹின் பாக் பகுதியில் சிஏஏ.,வுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது சமீபத்தில் பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தினான், அவனை கைது செய்து விசாரித்து வந்த டெல்லி போலீசார், தற்போது அவர் ஆம்ஆத்மி கட்சியின் உறுப்பினர் எனக் கூறி, அதற்கு ஆதாரமாக போட்டோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அது தாக்குதல் நடத்திய கபில் குஜ்ஜார்,…

மேலும்...

டெல்லியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவன் ஆம் ஆத்மியை சேர்ந்தவனா? – பகீர் தகவல்!

புதுடெல்லி (04 பிப் 2020): டெல்லியில் ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவன் ஆம் ஆத்மியை சேர்ந்தவன் என்ற டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இங்கு சில தினங்களுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதி கபில் குஜ்ஜார் என்பவன் கைது செய்யப்பட்டான். அபோது ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் எழுப்பியவாறு போராட்டக் காரர்களை பார்த்து அவன் துப்பாக்கிச்…

மேலும்...

குழந்தையை இழந்தும் போராட்டத்தை கைவிடாத தாய் – ஷஹீன் பாக்கில் நிகழ்ந்த சோகம்!

புதுடெல்லி (04 பிப் 2020): டெல்லி ஷஹீன் பாக் போராட்டக் களத்தில் உயிரிழந்து  பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளார் நான்கு மாத குழந்தை. இந்தியாவின் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் மேன்மேலும் தீவிரமடைந்து வருகிறது. டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள ஷஹீன் பாக்கில் பெண்கள் 50 நாட்களை தாண்டியும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மிரட்டல் துப்பாக்கிச் சூடு போன்றவை நிகழ்ந்த போதும் எதற்கும் அச்சப்படாமல் அங்கு…

மேலும்...

டெல்லி துப்பாக்கிச் சூடு – ஷஹீன் பாக் தொடர் போராட்டத்தை திசை திருப்பும் பிரதமர் மோடி!

புதுடெல்லி (04 பிப் 2020): டெல்லி ஷஹீன் பாக் தொடர் போராட்டத்தின் பின்னணியில் திட்டமிட்ட சதி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வரும் 8 ம்தேதி சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள டில்லியில் பிரதமர் மோடி (3 ம் தேதி) பிரசாரம் மேற்கொண்டார். டெல்லி கார்கர்டோமா பகுதியில் உள்ள சிபிடி மைதானத்தில் நடைபெற்ற பாஜக பேரணியில் மோடி பங்கேற்று பேசியதாவது: குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டங்கள் கடந்த பல நாட்களாக சீலாம்பூர், ஜாமியா மற்றும் ஷாஹீன் பாக்…

மேலும்...

சோனியா காந்தி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

புதுடெல்லி (02 பிப் 2020): காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். சோனியா காந்தி காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக டெல்லி சர் கங்கா ராம் மருத்துவனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப் பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும்...