சிஏஏ போராட்டம் – சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை!

சென்னை (18 பிப் 2020): நாளை நடைபெறவுள்ள சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை வண்ணாரப்பேட்டை ஷஹீன் பாக்காக மாறி பெண்கள் முன்னிலையில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நாளை நடைபெறவுள்ள சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு தடை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மார்ச் 11 வரை போராட்டத்திற்கு தடை விதித்துள்ள உயர் நீதிமன்றம் மத்திய,…

மேலும்...

பேஸ்புக்கில் பதியும் சில பதிவுகளுக்கு தடை!

புதுடெல்லி (31 ஜன 2020): ஃபேஸ்புக்கில் வன்முறை பதிவுகள் பதிவதற்கு பேஸ்புக் நிர்வாகம் தடை விதித்துள்ளது. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டம் வெடித்துள்ள நிலையில் டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது இந்நிலையில் டெல்லி ஜாமியா பல்கலையில், ராம் பகத் கோபால் என்ற பயங்கரவாதி ஜாமியா மில்லியா மாணவர்கள் மீது வியாழன் அன்று திடீரென துப்பாக்கியால் சுட்டதில் காஷ்மீர் மாணவர் சதாம் பாருக் என்பவர் காயம் அடைந்தார். அவர் தற்போது…

மேலும்...

அர்ணாபிடம் கேள்வி கேட்டதற்காக பிரபல காமெடியனுக்கு விமானத்தில் பயணிக்க தடை!

புதுடெல்லி (29 ஜன 2020): பிரபல ஊடகவியலாளரும் பாஜக ஆதரவாளருமான அர்ணாப் கோஸ்வாமியிடம் விமானத்தில் கேள்வி கேட்டதற்காக 6 மாதம் விமானத்தில் பயணிக்க பிரபல காமெடியனுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. பிரபல ஸ்டேண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா டெல்லியிலிருந்து லக்னோவுக்கு இன்டிகோ விமானத்தில் பயணிக்கும்போது அவருடன் அர்ணாபும் பயணித்துள்ளார், இதுகுறித்த வீடியோ ஒன்றை குணால் வெளியிட்டுள்ளார், அப்போது அர்னாப் கோஸ்வாமியிடம் பல கேள்விகளை எழுப்புகிறார். ஆனால் அர்னாப் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் கண்டுகொள்ளாதது போல் இருக்கிறார்….

மேலும்...

சென்னையில் போராட்டம் நடத்த தடை!

சென்னை (28 ஜன 2020): சென்னையில் வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப் பட்டுள்ளது. குடியுரிமை சட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத சட்டங்கள், கொள்கைகளுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை நகரில் இன்று முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. போராட்டங்கள், உண்ணாவிரதம், மனிதசங்கிலி, பொதுக்கூட்டம் நடத்துவதற்கு சென்னை காவல் ஆணையர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும்...

நீட் தேர்வு – தீர்ப்பை திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி (28 ஜன 2020): நீட் தேர்வை தமிழகத்தில் தடை விதிக்க முடியாதென உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரி, வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் திரு. அருண் மிஸ்ரா தலைமையிலான இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. நீட் தேர்வு கட்டாயம் என்பதை உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவு படுத்தியுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாள்தோறும் மாற்ற முடியாது என…

மேலும்...

பீகார் கல்லூரியில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடை!

பாட்னா (25 ஜன 2020): பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு கல்லூரியில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது திரும்ப பெறப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் ஜே.டி பெண்கள் கல்லூரி உள்ளது. அங்கு சமீபத்தில் சர்ச்சைக்குரிய ஒரு அறிவிப்பு வெளியானதால், மாணவர்களும் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த அறிவிப்பில், “முஸ்லிம் பெண்கள் கல்லூரி வளாகத்திற்குள் புர்கா அணியக் கூடாது!” என்றும் “மீறினால் ரூ.250 அபராதம் விதிக்கப்படும்!” எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த…

மேலும்...

BREAKING NEWS: குடியுரிமை சட்டத்திற்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி (22 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்க்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 143 மனுக்கள் மீது இன்று விசாரணை செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போட்கே தலைமையிலான 3 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வுக்குக் கீழ் மனுக்கள் விசாரணைக்கு வந்தன. இன்று வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் கருத்தைப் பெறாமல் குடியுரிமைச் சட்டத்திற்கு தடை விதிக்க…

மேலும்...

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை!

திருவனந்தபுரம் (16 ஜன 2020): கேரளாவில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (NPR) எடுக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க மக்கள் கொந்தளித்துள்ள நிலையில் கேரள அரசு ஒரு படிமேலே போய் சட்டமன்றத்தில் இச்சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து ஒட்டு மொத்த இந்தியாவிலும் இதனை எதிர்க்கும் உறுதியான மாநிலமாக திகழ்கிறது….

மேலும்...

உட்கார் என்ற அன்பழகன் – தடை விதித்த சபாநாயகர்!

சென்னை (07 ஜன 2020): உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை திமுக எம்.எல்.ஏ அன்பழகன் ஒருமையில் பேசியதால் இந்த கூட்டத் தொடர் முழுவதும் அன்பழகனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்தின்போது திமுக, அதிமுக இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் போது பேசிய திமுக MLA ஜெ.அன்பழகன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என குற்றம்சாட்டினார். அவரது குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த முதல்வர், சட்டம்…

மேலும்...