தமிழகம் முழுவதும் இரண்டாவது நாளாக பொதுமக்கள் தொடர் போராட்டம்!

சென்னை (15 பிப் 2020): சிஏஏ வை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டை, மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் இரண்டாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், பெண்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதை கண்டித்து இரவில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியை போல் சென்னையில் ஷஹீன் பாக் என்ற பெயரில் பெண்கள் வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட போது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதேபோல…

மேலும்...

நகர்புர உள்ளாட்சித் தேர்தல் ஏப்ரலில் நடைபெற வாய்ப்பு!

சென்னை (10 பிப் 2020): நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஏப்ரலில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடத்தலாம் என முதல்வர் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும்...

பட்டா மாற்றம் செய்ய இனி தாலுக்கா அலுவலகம் செல்ல தேவையில்லை!

சென்னை (10 பிப் 2020): “பட்டா மாற்றம் செய்ய இனி தாலுக்கா அலுவலகம் சென்று அலைந்து திரிய வேண்டிய அவசியம் இல்லை!” என்று வருவாய்த்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் வீடு, விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. இந்த பதிவு முடிந்தவுடன் பட்டா பெயர் மாற்றுவதற்கு படிவத்தை வருவாய்த்துறைக்கு அனுப்ப வேண்டும். இதற்கான ஒப்புகை சீட்டு எண் பொதுமக்களிடம் அளிக்கப்படுகிறது. அதை வைத்து பொதுமக்கள் பட்டா பெயர் மாறுதல்…

மேலும்...

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் – தொடரும் கைதுகள்!

கிருஷ்ணகிரி (07 பிப் 2020): நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக மேலும் ஒரு மாணவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். நீட் தேர்வு ஆள்மாறாட்டம் குறித்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தேனி CBCID அலுவலகத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த மாணவர், ஒரு மாணவி என இதுவரை 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து, கிருஷ்ணகிரியை சேர்ந்த பவித்ரன் என்பவரும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், சென்னை, தனியார் மருத்துவ…

மேலும்...

5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து!

சென்னை (04 பிப் 2020): 5 மற்றம் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் செய்த திருத்தத்தின்படி, தமிழகத்தில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டது. தமிழக அரசின் முன்னோடி திட்டமாக, இதை நடைமுறைப்படுத்தவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்கு, கல்வியாளர்கள், குழந்தை பாதுகாப்பு அமைப்பினர் என, பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர் மேலும். குழந்தை பருவத்திலேயே தேர்வு…

மேலும்...

டிஎன்பிஎஸ்சி முறைகேடு – மேலும் நான்கு பேர் கைது!

சென்னை (03 பிப் 2020): டிஎன்பிஎஸ்சி குரூப் – 2ஏ முறைகேடு தொடர்பாக ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள ச்யில், பணம் கொடுத்து முறைகேடாக தேர்ச்சி பெற்ற 3 பேர் உட்பட மேலும் 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். முறைகேட்டில் முக்கிய நபர்களான இடைத்தரகர் ஜெயக்குமாரும், முதல் நிலை காவலர் சித்தாண்டியும் தலைமறைவாக உள்ள…

மேலும்...

கொரோனா வைரஸ் குறித்து சீனாவிலிருந்து வந்த தமிழக வாலிபர் கூறுவது இதுதான்!

சென்னை (31 ஜன 2020): உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் ஒருபுறமிருக்க அதுகுறித்த வதந்திகளும் பரவி வருகின்றன. சமீபத்தில் சீனாவிலிருந்து தமிழகம் திரும்பிய 78 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? என அவர்களை தனிக் கட்டுப்பாட்டில் வைத்து கண்காணித்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஈடன் கார்டன் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் என்ற மாணவர் சீனாவில் செஜியாங்க் நகரில் உள்ள நிங்போ பல்கலைகழகத்தில் நான்காம் ஆண்டு மருத்துவம்…

மேலும்...

சீனாவிலிருந்து வந்த தமிழருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு?

திருவண்ணாமலை (31 ஜன 2020): சீனாவிலிருந்து தமிழகம் வந்த பொறியாளருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் உலகை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. சீனாவில் இந்த வைரஸ் பாதிப்பால் பலியானவா்கள் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த வைரஸ் நோயால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 7, 711 ஆக உயா்ந்துள்ளது. இந்நிலையில், கடந்த 19 ஆம் தேதி சீனாவில் இருந்து சென்னை…

மேலும்...

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மேலும் அழுத்தம் – சிறப்பு வகுப்புகளுக்கு உத்தரவு!

சென்னை (29 ஜன 2020): பொதுத் தேர்வை முன்னிட்டு 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினம் 1 மணிநேரம் சிறப்பு வகுப்பு நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற அடிப்படையில் இதுவரை பள்ளிகள் நடைபெற்று வந்தனர். ஆனால் மத்திய அரசு அமைத்திருந்த கஸ்தூரிரங்கன் தலைமையிலான தேசியக் கல்விக்கொள்கை வடிவமைப்புக் குழுவின் வரைவு அறிக்கையும் கடந்த ஆண்டு வெளியானது. அந்த அறிக்கையில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு…

மேலும்...

குரூப் 4 தேர்வு ரத்தாகுமா? – தொடரும் கைது!

சென்னை (28 ஜன 2020): குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குரூப் 4 தேர்வு எழுதிய சிவராஜ் உட்பட 2 பேரை கைது செய்து சிபிசிஐடி போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக…

மேலும்...