தமிழக அரசு மீது பாயும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

சென்னை (14 செப் 2020): நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வழக்கறிஞர் சூரியபிரகாசத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் கடந்த 2018-ம் ஆண்டு அரியலூரைச் சேர்ந்த அனிதா தற்கொலை செய்து கொண்டார். அந்தச் சமயத்தில் மருத்துவப் படிப்பில் இடம் கோருவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருத்திகா என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். மேலும் .நீட் தேர்வு தற்கொலைகள் தொடர்பாக, வழக்கறிஞர் சூரியபிரகாசம், நீதிபதி கிருபாகரன் அமர்வில் விவாதிக்கப்பட்டது…..

மேலும்...

தாலியை கழட்டி விட்டு தேர்வெழுதிய புது மணப்பெண் – நீட் தேர்வு கொடுமையின் உச்சம்!

பாளையங்கோட்டை (14 செப் 2020): நீட் தேர்வு எழுத வந்த பெண் தாலியை கழட்டிவிட்டு தேர்வெழுதிய கொடுமை பாளையங்கோட்டையில் அரங்கேறியுள்ளது. தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியைச் சேர்ந்த திருமணமாகி 4 மாதம் ஆன புது மணப்பெண் ஒருவர் ‘நீட்’ தேர்வு எழுதுவதற்காக பாளையங்கோட்டையில் உள்ள தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. தேர்வு எழுதுவதற்காக அந்த பெண் நேற்று தனது உறவினர்களுடன் பாளையங்கோட்டைக்கு வந்தார். அப்போது தேர்வு மையத்துக்குள் தாலி எதுவும் அணிந்திருக்கக் கூடாது என்று அந்த பெண்ணுக்கு…

மேலும்...

சூர்யா மீது நடவடிக்கை கூடாது – தலைமை நீதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் கூட்டாக கடிதம்!

சென்னை (14 செப் 2020): நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க தேவையில்லை என முன்னாள் நீதிபதிகள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இதுதொடர்பாக நடிகர் சூர்யா நேற்று வெளியிட்ட அறிக்கையில், நீதிமன்றத்தை நேரிடையாகவே விமர்சித்திருந்தார். உயிருக்கு பயந்து காணொலியில் நீதிமன்றம் நடத்துவதாக கூறிய நடிகர் சூர்யா மாணவர்களை மட்டும் எப்படி நேரடியாக தேர்வு எழுத உத்தரவிடலாம் என்று கேட்டிருந்தார்….

மேலும்...

நடிகர் சூர்யாவின் அடுத்த பரபரப்பு ட்வீட்!

சென்னை (14 செப் 2020): ஒன்றிணைவோம்; மாணவர்களோடு துணை நிற்போம் என்று நடிகர் சூர்யா மற்றும் ஒரு பரபரப்பு வீடியோ ட்விட் வெளியிட்டுள்ளார். நீட் தேர்வு அச்சம்காரணமாக தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்வது தொடர்கதையாகி வருகிறது. இதுதொடர்பாக நடிகர் சூர்யா நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதைப் போன்ற அவலம் ஏதுமில்லை. கொரோனா…

மேலும்...

இந்தியாவின் எதிர்கால மருத்துவர்கள் தற்கொலை – மக்களவையில் திமுக வாதம்!

புதுடெல்லி (14 செப் 2020): நீட் தேர்வால் இந்தியாவின் எதிர்கால மருத்துவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்று மக்களவையில் டி.ஆர்.பாலு தெரிவித்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 9 மணிக்கு சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் அப்போது நீட் தேர்வு தற்கொலை குறித்த பிரச்சனையை திமுக எழுப்பியது. அப்போது திமுக எம்பி டி.ஆர்.பாலு பேசும்போது, ‘நீட் தேர்வின் காரணமாக 12 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்பதை இந்த…

மேலும்...

பிரபல நடிகைக்கு சூர்யா ரசிகர்கள் சரமாரி பதிலடி!

சென்னை (14 செப் 2020): நடிகர் சூர்யாவின் அறிக்கைக்கு எதிரான பாஜக ஆதரவு நடிகை காயத்ரி ரகுராமுக்கு சூர்யாவின் ரசிகர்கள் சரமாரி பதிலடி கொடுத்துள்ளனர். நீட் தேர்வுக்கு எதிரான நடிகர் சூர்யாவின் அறிக்கை தமிழகமெங்கும் கொண்டாடப் பட்டு வருகிறது. சாதாரண குடும்பத்துப் பிள்ளைகளின்‌ மருத்துவர்‌ கனவில்‌ தீ வைக்கற நீட் தேர்வு.. என்பதாக சூர்யா அந்த அறிக்கையில் சாடியிருந்தார். கொரோனா அச்சத்தால்‌ உயிருக்குப் பயந்து ‘வீடியோ கான்பிரன்ஸிங்‌’ மூலம்‌ நீதி வழங்கும்‌ நீதிமன்றம்‌, மாணவர்களை அச்சமில்லாமல்‌ போய்‌…

மேலும்...

நீட் தேர்வு விவகாரம் – நீதிமன்றம் மீது நடிகர் சூர்யா பாய்ச்சல்!

சென்னை (13 செப் 2020): கொரோனா அச்சத்தால் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் விசாரணைகளை நடத்தும் நீதிமன்றம், மாணவர்களை நேரடியாக சென்று நீட் தேர்வு எழுத வலியுறுத்துகிறது என்று நடிகர் சூர்யா விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதல பதிவில் கூறியிருப்பதாவது: ‘‘நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்குப் பதிலாக அறுதுல் சொல்வதை போல அவலம் எதுவுமில்லை. கொரோனா தொற்று…

மேலும்...

கெஞ்சிக் கேட்கிறேன் – ஸ்டாலின் உருக்கம்!

சென்னை (13 செப் 2020): “மாணவர்களை கெஞ்சிக் கேட்கிறேன் தயவு செய்து தற்கொலை செய்து கொள்ளாதீர்கள்”. என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு இன்று தொடங்குகிறது. இந்நிலையில் நீட் தேர்வு அச்சத்தால், தேர்வுக்கு தயாராகி வந்த தமிழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் சமீபத்தில் தற்கொலை செய்துக்கொண்டனர். இது நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைகள் குறித்து காணொளி காட்சியில் பேசியுள்ள ஸ்டாலின்,”மாணவர்களை கெஞ்சிக் கேட்கிறேன்; இனி யாரும் தற்கொலை முடிவை எடுக்காதீர்கள். நீட் தேர்வுக்கு தயாரான…

மேலும்...

விக்னேஷ் உடலுக்கு உதயநிதி அஞ்சலி செலுத்தச் சென்றபோது என்ன நடந்தது?

அரியலூர் (13 செப் 2020): அரியலூர் மாவட்டம் எலந்தங்குழி கிராமத்தில் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டார். விக்னேஷ் உடலுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்த சென்றபோது, அங்கிருந்த பாமகவினர் உதயநிதிக்கு எதிராக கோஷமிட்டதோடு அவரை விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து திமுக முன்னாள் எம்.எல்.ஏ சிவசங்கர் கூறுகையில், நீட் தேர்வினால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் விக்னேஷ் இறந்த…

மேலும்...

நள்ளிரவு வரை நன்றாக படித்துக் கொண்டிருந்தாள் – நீட் தேர்வு பயத்தால் மற்றொரு மாணவி தற்கொலை!

மதுரை (12 செப் 2020): நீட் தேர்வு பயத்தால் மதுரையை சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா(19) தற்கொலை செய்துகொண்டுள்ளார். மதுரை ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்தவர் மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா. இவரது தந்தை முருகசுந்தரம் எஸ்.ஐ., ஆக உள்ளார். 6வது சிறப்பு பட்டாலியன் குடியிருப்பில் இவர்களது குடும்பம் வசித்து வந்தது. ஜோதி ஸ்ரீ துர்கா, நீட் தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி வந்தார். நள்ளிரவு வரை அவர் படித்துக் கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் நாளை நீட்…

மேலும்...