நீட் தேர்வு பதற்றம் – அரியலூர் மாணவர் தற்கொலை!

அரியலூர் (09 செப் 2020): நீட் தேர்வுக்கு தயாராகி வந்த அரியலூர் மாணவர் விக்னேஷ் (19) கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மருத்துவ இளநிலை படிப்புகளுக்காக தேசிய தேர்வு முகாமை நீட் நுழைவுத் தேர்வை நடத்தி வருகிறது. அரசு பள்ளி மாணவர்களின் கனவை சீர்குலைக்கும் இந்த சிபிஎஸ்சி சிலபஸை கொண்ட தேர்வினை நடத்தகூடாதென தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. இருப்பினும், தேசிய தேர்வு முகாமை நீட் தேர்வை நடத்துவதில் இருந்து பின்வாங்காமல்…

மேலும்...

தமிழகத்தில் நீட் தேர்வு எப்போது நடத்தலாம்? – முதல்வர் தகவல்!

சென்னை (27 ஆக 2020): கொரோனா கட்டுக்குள் வந்த பிறகு நீட் தேர்வை நடத்தலாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கடலூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நபர்கள் அச்சப்பட வேண்டாம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாதபோதும்…

மேலும்...

நீட் தேர்வு – சுப்பிரமணியன் சாமி கருத்து!

புதுடெல்லி (23 ஆக 2020): நீட் தேர்வை தீபாவளிக்குப் பிறகு நடத்த வேண்டும் என்று சுப்பிரமணியன் சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்று . ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். ஜே.இ.இ. முதன்மை தேர்வு அடுத்த மாதம் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெறும் எனவும், நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதி அன்றும் நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது…

மேலும்...

நீட் தேர்வு ஒத்தி வைப்பா? – மத்திய அமைச்சகம் பதில்!

புதுடெல்லி (21 ஆக 2020): நீட் மற்றும் ஜே.இ.இ.தேர்வுகளை ஒத்தி வைக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்று மத்திய அமைச்சக செயலர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் காலவரையரையின்றி மூடப்பட்டுள்ள நிலையில் கடந்த மே மாதமே நடைபெற இருந்த நீட் தேர்வு கரோனா காரணமாக ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செப்டம்பர் 13 அன்று தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல ஜே.இ.இ. மெயின் தேர்வுகள் செப்டம்பர்…

மேலும்...

நீட் தேர்வு – தீர்ப்பை திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி (28 ஜன 2020): நீட் தேர்வை தமிழகத்தில் தடை விதிக்க முடியாதென உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரி, வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் திரு. அருண் மிஸ்ரா தலைமையிலான இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. நீட் தேர்வு கட்டாயம் என்பதை உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவு படுத்தியுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாள்தோறும் மாற்ற முடியாது என…

மேலும்...