அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 அக உயர்வு!

நியூயார்க் (11 மார்ச் 2020): அமெரிக்கா முழுவதுமாக கரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்தில் கரோனா கொரோனா வைரஸ் (கோவிட் -19)தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஐ எட்டியுள்ளதாக வாஷிங்டன் நல்வாழ்வுத் துறை உறுதிப்படுத்தியுள்ளனர், இதையடுத்து அமெரிக்கா முழுவதுமாக கரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி 10 ஆம் தேதி முதன்முதலாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் கண்டறிப்பட்டார். அதிலிருந்து இதுவரை வாஷிங்டன்…

மேலும்...

கர்நாடகம் சென்ற தமிழகத்தை சேர்ந்த 10 பேர் விபத்தில் பலி!

கிருஷ்ணகிரி (06 மார்ச் 2020): கர்நாடகாவில் உள்ள தர்மஸ்தாலா கோயிலுக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த 10 பக்தர்கள் விபத்தில் பலியாகியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சீக்கணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 10 பேர் காரில் கர்நாடகத்தின் தர்மஸ்தாலா கோயில் சென்றிருந்தனர். சாமி தரிசனம் செய்துவிட்டு அவர்கள் அனைவரும் காரில் நள்ளிரவு தமிழகம் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வந்த கார் தும்கூர் அருகே குனிகல் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் இருந்த தடுப்பு மீது மோதியது….

மேலும்...

டெல்லி இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு!

புதுடெல்லி (05 மார்ச் 2020): டெல்லி இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு அமைதி வழி போராட்டத்தில் இனப்படுகொலையாளர்கள் புகுந்து போராட்டத்தை வன்முறையாக மாற்றினர். இதனால் டெல்லி போர்க்களமானது. பலரது வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இந்நிலையில் இந்த வன்முறையில் 53 பேர் உயிரிழந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 44 பேர் இறந்ததாக தகவல் வெளியானது. எனினும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 9 பேர்…

மேலும்...

இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் – அதிர வைக்கும் தகவல்!

புதுடெல்லி (04 மார்ச் 2020): இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை இத்தாலியைச் சேர்ந்த 16 பேர் உட்பட 28 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். தில்லி மற்றும் தெலங்கானாவில் தலா ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், புதன்கிழமையான இன்று இத்தாலியைச் சேர்ந்த 16 பேர் உட்பட…

மேலும்...

அருப்புக்கோட்டை அருகே ஏற்பட்ட கார் விபத்தில் மூவர் பலி!

அருப்புக்கோட்டை (29 பிப் 2020): அருப்புக்கோட்டை அருகே சரக்கு வாகனம், கார் மோதிக்கொண்ட விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். அருப்புக்கோட்டை அருகே சரக்கு வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மாரி (55), பழனியம்மாள் (28), விஜயலட்சுமி (32) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் சென்ற மேலும் 17 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

மேலும்...

டெல்லி வன்முறையில் உயிரிழந்த 30 பேர் யார்? என்ற அடையாளம் காணப்பட்டுள்ளது!

புதுடெல்லி (28 பிப் 2020): டெல்லி கலவரத்தில் உயிரிழந்த 38 பேர் யார் யார் என்பது குறித்து அடையாளம் காணப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறையாளர்கள் புகுந்து கண்மூடித்தனமாக தாக்கியதில் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 30 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. முபாரக் அலி (35) பெயிண்டிங் வேலை செய்பவர் இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர் . முஹம்மது இர்ஃபான் (42) கூலி வேலை செய்பவர். இவருக்கு…

மேலும்...

டெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 27 ஆக உயர்வு!

புதுடெல்லி (26 பிப் 2020): டெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, தலைநகர் டெல்லியின் மாஜ்பூர் பகுதியில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில், சிஏஏ ஆதரவாளர்கள் என்ற போர்வையில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்து அங்கு வன்முறை வெடித்தது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளன. இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள்…

மேலும்...

டெல்லி கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு – மேலும் அதிகரிக்கும் அபாயம்!

புதுடெல்லி (26 பிப் 2020): டெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் அமைதி வழியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், போராட்டத்தை ஒடுக்க, நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்க முயன்று தோற்றுப் போன பாஜக அரசு வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்நிலையில் திங்கள் அன்று டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்து…

மேலும்...

புரியாத புதிராய் புதுடெல்லி – 13 பேர் பலி: 180 பேருக்கு படுகாயம்!

புதுடெல்லி (25 பிப் 2020): பற்றி எரியும் டெல்லியில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் அமைதி வழியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், போராட்டத்தை ஒடுக்க, சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயன்று தோற்றுப் போன பாஜக அரசு வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்நிலையில் திங்கள் அன்று டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம்…

மேலும்...

டெல்லியில் தொடரும் வன்முறை காரணமாக 9 பேர் பலி!

புதுடெல்லி (25 பிப் 2020): டெல்லியில் தொடரும் வன்முறை காரணமாக இதுவரை 9 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாகவே பதற்றம் நிலவி வரும் நிலையில் திங்கள் அன்று ஏற்பட்ட திடீர் கலவரத்தில் போலீஸ் தலைமை காவலர் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டுள்ளது. இந்நிலையில் இந்த…

மேலும்...